(Reading time: 18 - 35 minutes)

உங்கள போல ஒரு கணவர்கிடைக்க நான் கொடுத்துவச்சுயிருக்கனும் மாமா..

அட என்னடா இது இன்னைக்கு என்னோட பொண்டாட்டிக்கு காதல் பொங்கிவழியுதே..

சூம்மாயிருங்க சிவா.. என முகம்சிவந்தார்..

பார்வதி..

சொல்லுங்க..

இன்னைக்கு என்ன நமக்கு குழந்தை இல்லைன்னு நீ கவலைபடர.. நான் உன்ன நல்லா பாத்துகரதுயில்லையாம்மா.. என்ன ஆச்சும்மா..

நீங்க இன்னைக்கு சொன்னீங்கல்ல மனுகுட்டி புதுபுரோகிராம் பன்ன போரான்னு.. எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும் சிவா.. நான் இதுவரை அவளை நேர்ல பாத்ததுயில்ல ஆனா அவளுடைய புரோகிராம விடாம கேட்பேன்.. அவ கொஞ்சி கொஞ்சி பேசர அழகு எனக்கு ரொம்ப பிடிக்கும்.. எனக்கு அவபேசும் போது மட்டும் இவள போல பொன்னு வேணும்ன்னு தோணும்.. சில நேரம் நான் அவ அம்மா போல இங்க உட்காந்துகிட்டு சொல்லிகிட்டு இருப்பேன்.. எனக்கு அவ குரலை கேட்டவுடனே வந்த கண்ணீர் கூட காணாமபோயிரும்.. நீங்க இன்னைக்கு மனுவ பத்தி சொல்லவும் அவ ஞாபகம் ரொம்ப வந்தது அதான் பேசிட்டேன்.. மத்தபடி இந்த மாதிரி ஒரு புருஷன் வேர எந்த பொன்னுக்கும் கிடைக்கவேமாட்டாங்க..

உனக்கு மனு மேல இவ்வளவு பாசமா.. என்கிட்ட சொன்னதேயில்ல..

சொல்லகூடாதுன்னு இல்ல சிவா.. என்னமோ உங்ககிட்ட அவள என் பொன்னாபாக்கரன்னு எப்படி சொல்லறதுன்னு தெரியில்ல அதான் என நிதானமாக கூறினார் பார்வதி..

சரி ஒருநாள் அவளை இங்க அழைச்சிட்டுவரேன்.. அவர் கூறவே புன்னகைத்தார்..

சரி பார்வதி.. இப்போ நம்ம பொன்னோட புரோகிராம கேக்கலாமா.. என சிவஞானம் கூறவே.. தன் மனம் புரிந்த கணவரின் தோளில் சாய்ந்து தலை அசைத்தார் ஆனந்த கண்ணீருடன்..

அண்ணா.. என்ன பன்னிகிட்டு இருக்க.. ஏன் ரூம ஓபன் பன்ன இவ்வளவு நேரம்..

டேய்.. குளிச்சிட்டு இருந்தேன்டா அதான் நீ கூப்பிட்டது கேக்கல.. அது சரி இன்னைக்கு என்ன சீக்கரமா தூங்க வந்துட்ட..

என்ன அண்ணா.. என்னைவிட்ட 24 மணிநேரமும் படிக்க சொல்லுவ போல..

நாங்க எப்போடா அப்படி சொன்னோம்.. நீதானே விழுந்து விழுந்து படிக்கர..

ஆமாண்ணா விழுந்து விழுந்து படிச்தால அடிபட்டிருச்சு அதான் ரெஸ்ட் எடுக்க வந்துருக்கேன்..

ஏன்டா இப்படி சளிச்சுக்கர..

நீவேர ஏண்ணா கேக்கர எங்களுக்கு புதுசா ஒரு பிரின்சி வந்திருக்காங்க ரொம்ப டார்ச்சர்ண்ணா..

படிப்பை விரும்பி படிக்கனும் கார்த்தி.. இப்படி படிச்சா உனக்கு பிரசர் தான் மண்டையில்லஏறும்.. பாடம்ஏறாது..

அது உனக்கு புரியுது.. எப்போ எங்க பிரின்சிக்கு புரியுமோ.. சலிப்பாக கூறி அப்படியே கட்டிலில் சாய்ந்தான் கார்த்தி..

ஹய்யா.. என உற்சாகமாக கத்திக்கொண்டே கட்டிலில் வந்து குதித்தாள் ஸ்வேதா.. கூடவே கொண்டுவந்த அவளின் பொம்மையை கார்த்தியின் மீது வைத்தாள்..

அவள் வந்த வேகத்தில் பாப்பு மெதுவா என அபி கூறியது அவளுக்கு கேக்கவேயில்லை..

பாப்பு ஏன் இப்படி வந்து குதிக்கர.. இதுல உன் பொம்மைய வைக்க நான் தான் கிடைச்சனா என சண்டைக்கு தயாரானான் கார்த்தி..

என்ன நீ என்னை இப்படி மிரட்டர இந்த ரூம் எனக்கும் சொந்தம் தான்.. அப்படி தான் குதிப்பேன்..

அது சரி நீ ஏன் தூங்காம இங்க வந்து என்ன பன்ன போர பாப்பு..

என்ன கார்த்தி இப்படி கேக்கர.. இன்னைக்கு என்னோட ஆர்ஜே புரோகிராம் கேக்க வந்தேன்..

போ பாப்பா  இன்னைக்கு வேண்டாம் நான் செம டையர்டா இருக்கேன் தூக்கம் வருது.. நாளையில்ல இருந்து கேக்கலாம்..

அது எல்லாம் முடியாது நான் கேட்டே ஆகனும் ஸ்வேதா பிடிவாதம் பிடிக்க..

கொஞ்சநேரம் கேக்கலாம் கார்த்தி.. அப்பரம் நீ தூங்கு அபி கூறவே.. சரி என ரேடியோவை ஆன் செய்தனர்..

ரேடியோவை ஆன் செய்ததும் எந்த சத்தமும் இல்லாமல் அமைதியாக இருந்தது.. ஒரு 10 நொடிகள் எந்த சத்தமும் வராமல் இருந்தது..

ஹா.. ஹா.. நீங்கள் கேட்பது ஹேப்பிரேடியோ.. அதை கூறுவது உங்கள் மனு மணிகர்னிகாகண்ணன்.. ஆமாங்க நானே தான் வாரம் ரெண்டுநாள் மட்டும் தான் உங்களை தொல்லை பன்னலாம்ன்னு நான் நினைச்சேன்.. ஆனா இவங்க தினமும் தொல்லைபன்னியே ஆகனும்ன்னு சொல்லறாங்க.. நான் என்ன பண்ண முடியும்.. அதான் வழக்கம் போல உங்களை தொந்தரவு பன்ன வந்துட்டேன்.. என வேகமாகவும்.. உற்சாகமாகவும்.. சத்தமாகவும் அவள் சிறித்துக்கொண்டே கூறியவிதம் தன்னாலே கேட்போருக்கும் புன்னகையும், உற்சாகமும் தொற்றிக்கொண்டது.. பின்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.