(Reading time: 18 - 35 minutes)

மடியில் படுத்து இருந்தவளின் தலையை கோதிவிட்டுக்கொண்டே உனக்கு தெரியாம இல்ல மனுகுட்டி இதுவரைக்கும் நீ என்கிட்ட இப்படி விளக்கம் கொடுத்தது இல்ல இது இராத்திரி நேரமா அதான்டா கொஞ்சம் கவலையா இருக்கு மனுகுட்டி..

என்னை நான் பாத்துகரம்மா.. சும்மா கொஞ்சநாள் தான் அந்த புரோகிராம் பன்னர அக்கா வந்ததும் நான் எப்பவும் பன்னர புரோகிராம் மட்டும் பன்னுவேன் இப்போ ஓகேவா.. என அவள் கெஞ்சும் குரலில் கேக்கவும்..

போதும் செல்லம் மனுகுட்டி ரொம்ப நேரம் உன்னோட மடியில்ல படுத்து இருக்கா சரின்னு சொல்லேன்..

ஹோலோ மிஸ்டர்.கேகே இப்போ அம்மா சரின்னு சொல்லலைன்னு கவலையா இல்ல நான் மிசஸ்.கேகே மடியில்ல படுத்துயிருக்கரது கவலையா..

ரெண்டும் தான் மனுகுட்டி..

இது எல்லாம் ரொம்ப ஓவர் நான் என்னோட அம்மா மடியில்ல படுத்துயிருக்கேன் உங்களுக்கு என்னவாம்..

அது என்னோட இடம்.. முதல் உரிமை எனக்கு மட்டும் தான் போனா போகட்டும்ன்னு தான் உனக்கு விட்டுகொடுத்தேன் என்ன செல்லம் நான் சொல்லரது சரிதானே..

போதும் போதும் அப்பாவுக்கும் பொண்ணுக்கும் நான் தான்கிடைச்சனா எனக்கு கிட்சன்ல வேளையிருக்கு நான் போரேன்.. மனுகுட்டி நீயும் போயி ரெஷ்ட் எடு நைட் ரேடியோஸ்டேசன் போகனும்ல்ல போ.. என கூறிவிட்டு அவர் வேலையை செய்ய சென்றுவிட்டார் கமலாகண்ணன்..

அவர் சமையல் அறைக்கு சென்றவுடன்.. மனுகுட்டி எப்படியோ பேசி  செல்லத்தோட அனுமதிய வாங்கிட்ட போல..

பின்ன மனுன்னா சும்மாவா.. எவ்ளோ பேரை பேசியே காரியத்தை சாதிச்சுயிரக்கேன்.. மிசஸ்.கேகே-வ சாமாளிக்கரதா கஷ்டம்..

ஆனா என்னோட செல்லம் சொன்னதும் கொஞ்சம் யோசிக்க வேண்டிய ஒன்னு தான் மனுகுட்டி..

அப்பா நீங்களுமா.. என்ன பாத்துக்க நான் இருக்கேன்.. அதைவிட என்ன உயிரா நினைக்கர ரொம்ப பேருங்க என் கூட இருக்கரவரைக்கும் என்ன பயம்..

சரிடா மனுகுட்டி நீ போயி ரெஷ்ட் எடு இன்னைக்கு உன்னை ஸ்டேசன்ல நான் ட்ராப் பன்னரேன்..

ம்.. சரி என மனு அவள் அறைக்கு சென்று ஓய்வு எடுத்தாள்..

அப்பரம் எப்பவும் போல கிளம்பி வந்தேன் அப்பா என்னை இங்க கொண்டுவந்து விட்டாரு..

அது சரி வரும் போது மாமா கூப்பிட்டு வந்தாரு.. இந்த புரோகிராம் முடிச்சு எப்படி வீட்டுக்கு போவன்னு யோசிச்சியா..

நான் ஏன் யோசிக்கனும்.. எனக்காக யோசிக்க தான் என்னோட தகரடப்பா இருக்கானே.. அவள் கூறி கண்சிமிட்டி சிரிக்கவும்..

பின்ன சும்மாவிட்டர முடியுமா.. என்னோட அம்மாவாச்சே.. நான் தானே பார்த்துக்கணும்.. என கூறி அவளின் தலையை பிடித்து ஆட்டி.. நெற்றிமுட்டி சிரித்தான்..

ஆமா.. ஆமா.. டப்பா சீக்கரம் வீட்டுக்கு போ.. ரொம்ப பசிக்குது..

ஏன் மனுகுட்டி நீ எதுவும் சாப்பிடாமலா ஸ்டேசன் வந்த..

அது கால்வழியா இருந்திச்சு.. கொஞ்சம் நல்லா தூங்கிட்டேன்.. லேட் ஆச்சுன்னு கிளம்பி வந்துட்டேன்.. என முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு கூறவும் உருகிவிட்டான்..

பன்னர வேலையெல்லா.. முடிச்சவக்கிதனம், மொள்ளமாரிதனம்.. அப்பரம் யாரவது எதாவது கேட்டா உடனே அமுல்பேபி முகம்வந்து திட்டவிடாம பன்னிர வேண்டியது.. நீ சரியான கேடி ஓட்டவாய் நீ...

போடா தகரடப்பா..

ரொம்ப பசிக்குதுன்னா நாம வெளிய எதாவது சாப்பிட்டு அப்பரம் வீட்டுக்கு போலாம் செல்லம்..

இல்லப்பா.. வீட்டுக்கு போலாம்.. ஏற்கனவே மிசஸ்.கேகே ரொம்ப பயந்துட்டு இருப்பாங்க.. அதனால இந்த ஒருவாரம் சீக்கரம் வீட்டுக்கு போகனும்.. அங்க போயி சாப்பிட்டுக்கலாம்..

சரி என விரைவாக ஓட்டலானான்.. அப்போது விளம்பரம் முடிந்து பாடல் ஓடியது..

ஏ.. செம பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்ச அழகான காதல் பாட்டு..

ஆமா உனக்கு மட்டும் எப்படி தான் இப்படி எல்லாம் தோணுதோ.. போ..  என அவனும் பாடலை ரசிக்க தொடங்கினான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.