Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 08 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes
Pin It

தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 08 - சசிரேகா

Kaanum idamellam neeye

ர்னேந்திரனுக்கு சிறிது நேரத்தில் மயக்கம் தெளியவும் நிதானமாக எழுந்து அமர்ந்தவன் தன் அருகில் அமர்ந்து இருந்த பத்மாவதியைக் கண்டு படுக்கையை விட்டு எழுந்து நின்று அவளிடம் மீண்டும் பிதற்ற ஆரம்பித்தான்.

”ஒரு நாளும் ஒரு பொழுதும் உனக்கு நான் துரோகம் இழைக்க மாட்டேன்” என தர்னேந்திரன் பதட்டமாகப் பேச பத்மாவதிக்கு சிரிப்பே வந்தது. மெதுவாக அவனை நெருங்கி நடந்து சென்றாள். அவனோ அவளது நெருக்கம் தனக்கு தயக்கத்தை தர மெதுவாக பின்வாங்கினான்.

”தலைசிறந்த ஒரு வீரன் இப்படி பின் வாங்கலாமா” என சொல்லவும் தர்னேந்திரன் சட்டென நின்றுவிட்டான். இப்போது வாளின் கூர்மையான பார்வையோடு நேருக்கு நேராக அவளைப் பார்த்தான். அவளோ

”என்னை சிலையாக வடித்திருக்கிறீர்களே இவ்விஷயம் மாதவனுக்கு தெரிந்தால்”

”அவன் என் நண்பன்”

”என் தந்தைக்கு தெரிந்தால்”

”ஜமீன்தார் பண்பானவர், அவர் என்றுமே யாரையும் துன்புறுத்தியதில்லை, உனக்காக மதிகெட்ட வேலைகளை செய்வதெல்லாம் மாதவன் மட்டுமே ஆனால்” என இழுத்தான் தர்னேந்திரன்

”என்ன ஆனால்”

”என் நண்பன் என் மீது குறுவாள் எறிந்திருப்பது ஆச்சர்யமாக உள்ளது”

”குறுவாளா”

“ஆம்”

“இல்லையே”

”குறுவாள் ஒன்று என்னை தாக்கியது.”

”சர்ப்பம் தீண்டி தாங்கள் மயங்கியிருந்தீர்கள்”

“சர்ப்பமா”

“ஆமாம்”

“என் கையில் குறுவாள் இருந்ததே”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“இல்லையே அங்கு ஒரு சர்ப்பம் அல்லவா ஓடிக்கொண்டு இருந்தது”

“என் கையில் ஏற்பட்ட காயம் சர்ப்பத்தால் அல்ல பத்மாவதி குறுவாளால் ஏற்பட்டது. அந்த குறுவாளில் விஷம் தோய்க்கப்பட்டிருந்தது”

”தாங்கள் சொல்வது எனக்கு விந்தையாக உள்ளது. குறுவாளினால் காயம் ஏற்படவில்லை சர்ப்பம் தீண்டிய சுவடு தான் இருந்தது” என சொல்லவும் அவசரமாக தனது தோள்பட்டையில் கட்டியிருந்த மூலிகை கட்டை அவிழ்க்கலானான். அதைப் பார்த்த பத்மாவதியோ

”பொறுமை” என அவள் சொல்வது அவனுக்கு கேட்கவேயில்லை. அவசரமாக கட்டை பிரித்து தனது காயத்தை பார்த்தான். சர்ப்பம் தீண்டினால் ஏற்படும் 2 புள்ளியை போன்ற அச்சு இருக்கவே குழம்பித் தவித்தான்.

”இது சர்ப்பம் அல்ல பத்மாவதி அந்த குறுவாள்தான் அந்த குறுவாளின் அமைப்பானது இவ்வாறுதான் இருக்கும் அதன் முனையானது பிளவுபட்டு இரண்டு கூர்முனையாக இருக்கும்”

“இரு கூர்முனைகள் கொண்ட ஒரு குறுவாளா இதை மாதவன் பயன்படுத்தி பார்த்துள்ளேன். ஆனால் மாதவன் இங்கு இல்லையே” என பத்மாவதி சொல்ல அதற்கு தர்னேந்திரன்

”இன்று இல்லை”

“அல்ல தர்னேந்திரா சுதர்சனன் மறைவுக்கு மாதவன் காரணம் என தந்தைக்கு தெரிந்து அவனை நாகராஜா ஆலயத்திற்கு தேவையான கொடைகளை வழங்க அன்றே அனுப்பிவிட்டார் அவன் இன்னும் திரும்பவில்லை.”

என சொல்லவும் தர்னேந்திரனின் அழகிய வதனம் வாடிவிட்டது. அமைதியாகச் சென்று படுக்கையில் அமர்ந்தவன் பக்கத்தில் வந்து நின்றாள் பத்மாவதி

”என்னவாயிற்று” என்றாள் கவலையுடன்

“ஒண்றுமில்லை” என சொன்னவனின் வார்த்தையில் உயிர்ப்பில்லாமல் போனதை பார்த்தவள் அவனது கவலையை போக்க எண்ணி

”இங்கிருக்கும் பத்மாவதியை விட தாங்கள் வடித்த அந்த பெண் சிலை நினைவில் வந்துவிட்டதா என்னைவிட அழகியா அவள்” என வேண்டுமென்றே இளப்பமாக கேட்கவும் தர்னேந்திரன் சற்று விந்தையுடன் பத்மாவதியை ஏறெடுத்துப் பார்த்துச் சிரித்தான்

”ஆம் அவள் உன்னை விட அழகிதான்” என சொல்ல

”அப்படியா என்னைத்தானே வடித்தீர்கள் அப்பொழுது எப்படி அவள் மட்டும் என்னை விட அழகியாக இருப்பாள்”

“காரணம் அவள் வடித்த போது எப்படியிருந்தாளோ அப்படியே உள்ளாள் ஆனால் உன் தோற்றம் உன் வளர்ச்சியின் காரணமாக மாறிவிட்டது. என்னவளுக்கு என்றுமே மூப்பு இல்லை ஆனால் உனக்கு வருடங்கள் செல்ல செல்ல உனது இந்த அழகு மங்கிவிடும் பத்மாவதி. உன்னை விட அவள் அழகிதான்” என சொன்ன தர்னேந்திரனிடம்

”ஓ அப்படியா அவளை மிகவும் புகழ்கிறீர்களா என்னைப் போல அவளால் உங்களோடு உரையாட முடியுமா”

“முடியும்”

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6  7  8 
 •  Next 
 •  End 

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

 • AndrilAndril
 • I MyselfI Myself
 • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
 • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
 • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
 • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
 • Un nesam en suvasamUn nesam en suvasam
 • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 08 - சசிரேகாsaaru 2019-01-06 16:49
Nice update Sasi...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 08 - சசிரேகாmadhumathi9 2019-01-03 08:35
facepalm oh my god enna aachu.nice epi.waiting 4 next epi. :thnkx: :GL: (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 08 - சசிரேகாAdharvJo 2019-01-02 19:31
facepalm Acho pavam Iss...don't worry boss ur not simply enjoying ur dad's money your increasing the net value...Ellarum irukuradhai vittu separate ah business arambichita naduthangadhapa ;-) so ur on track!!

secondly,first :D Meen's ivanga rendu periyum force pani Inga thanga vaithavangala sollunga chumma Inga vandhu kathudhu indha ponnu...rendu boys irukura time la indha 3 girls kuttitu vandhu baby bro intro kuduka vendiya necessity ena? may be idhu meen's oda selfdubba epiyo :grin: Business-n illa anything for that matter wen someone is talking ippadi kuchal potta I hate it steam So Iss here also I support u only :cool:
Every human as different difficulties in life but nama kashtam thaan namakku perisa theriyum but at any point we are not supposed to put others down :yes: (meen's sonnadhu podhom poman thana solluringa :D )
thank you sasi ma'am for this interesting update :clap: :clap: Samdhanam padalam start panunga ji :P keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 08 - சசிரேகாmahinagaraj 2019-01-02 18:32
ரொம்ப அருமையான பதிவு மேம்... :clap: :hatsoff:
மீனுகுட்டி செம.. அவங்க இந்த மாதிரி கஷ்டங்கள் அனுபவிச்சிருப்பாங்கன்னு நான் முன்னமோ கெஸ்பன்னேன்.. மீனுகுட்டி சூப்பர்.... :GL:
ஆனா ஏன் ஈஸ்க்கு மயக்கம் வந்தது.. :Q:
:thnkx:
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top