(Reading time: 22 - 43 minutes)

மதும்மா ரொம்ப அழகாயிருக்க..ப்யூட்டிஷியன் யாரு கல்யாணத்துக்கும் அவங்களேயே வர சொல்லலாம்..ரொம்ப நீட்டா போட்டுருக்காங்க..”

ம்ம் ஓ.கே அத்தை என் ப்ரண்ட்தான் பார்லர் வச்சுருக்கா..”

ஓ சரி சரி..ஒழுங்காவே சாப்ட மாட்டியா இவ்ளோ ஒல்லியா இருக்கியே நல்லா சாப்ட்டு உடம்பை தேத்து கல்யாணத்துக்குள்ள.உடம்பை பாத்துக்காம ரொம்ப வேலை வேலைனு இருப்பியோ?”

அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல அத்த…”,என்றவள் சிரித்து வைத்தாள்.அதன் பிறகும் சில நிமிடங்கள் அவளை அருகில் அமர்த்தி பேசிக் கொண்டிருந்தார்.

அனைத்தும் முடிந்து மாப்பிள்ளை வீட்டார் கிளம்பும் நேரம் அவனது தங்கை மதுவின் போன் நம்பரை வாங்கிக் கொண்டு அண்ணணின் நம்பரை அவளிடம் கொடுத்துச் சென்றாள்.

உடைமாற்றி அனைவரும் கிளம்பிய பின் வழக்கம்போல் தாய் தந்தையிடம் அமர்ந்து வம்பளந்து கொண்டிருந்தாள் மது.

ம்மா..என் மாமியார் ஆனாலும் கொஞ்சம் அதிகமா தான் பேசுறாங்களோ?தலையை ஆட்டி ஆட்டி கழுத்தே வலிக்குது..”

மது நீ ஏன் இப்படி இருக்க..பெரியவங்க அப்படிதான் இருப்பாங்க..அதுமட்டுமில்லாம அத்தனை வெகுளியா இருக்காங்க அவங்க..அவங்க பையனோட பொண்டாட்டி ஆகப் போறவனு உன்கிட்டேயும் அவ்ளோ பாசமா பேசுறாங்க பார்த்தாலே தெரியுது..”

என்னவோ சொல்ற எனக்கு மூச்சு முட்டுது இதெல்லாம் நினைச்சா..நானெல்லாம் நல்ல காலத்துலயே ரொம்ப பேச மாட்டேன்..என்னவோ போ..”

மது இப்போவே ஏன் இத்தனை நெகட்டிவா யோசிக்குற..ரொம்ப தப்பு.உனக்கெல்லாம் கொடுமைகார மாமியார் வந்தா அவ்ளோதான் போலேயே..போ போய் தூங்கு..ரொம்ப டயர்டா தெரியுற..”,என பேச்சை முடித்துக் கொள்ள ஏதோ கூற வாய் திறந்த கணவரை கண்பார்வையிலேயே அடக்கினார்.

தனதறைக்குள் வந்தவள் மொபைலை கையில் எடுக்க ஸ்ரீகாந்திடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது.முகம் அதுவாய் பல்ப் எரிய அதற்கு பதில் செய்தி அனுப்ப ஆரம்பித்தாள்.

என்ன பண்ற மது??”

இப்போதான் தூங்கலாம்னு ரூம்க்கு வந்தேன்..நீங்க என்ன பண்றீங்க?”

தூங்கலாம்னுதான் நினைக்குறேன் என் பொண்டாட்டி முகம் கண் முன்னாடியே இருந்து தூங்க விட மாட்டேங்குது..”

இற்கு பதில் அனுப்பாமல் சிரிக்கும் ஸ்மைலி அனுப்பியவளுக்கு நிஜமாகவே முகத்தில் சிரிப்பு மலர்ந்திருந்தது.

அடுத்த நிமிடம் அவனிடமிருந்து அழைப்பு வர என்ன செய்வதென புரியாமல் முழித்தவள் பின்பு தயக்கத்தோடே எடுத்து பேச ஆரம்பித்திருந்தாள்.

திருமண வேலைகள் ஒருபுறம் பரபரப்பாய் நடந்து கொண்டிருக்க இங்கு காதல் ஜோடி தங்களின் வாழ்க்கையை தொலைப்பேசி அழைப்பிலேயே வாழ ஆரம்பித்திருந்தனர்.ஒரு வாரம் பத்து நாட்கள் சொர்க்கமாய் நகர்ந்தது. அதன்பின் அவ்வப்போது சிறு சிறு சண்டைகள் வர ஆரம்பித்திருந்தது இருவருக்கும்.அப்படியாய் ஒரு ஞாயிற்றுக் கிழமையில் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு டீவியை பார்த்துக் கொண்டிருந்த மகளை கவனித்தவாறே வைரவன் அவளருகில் அமர்ந்தார்

என்னடா மது முகமே சரியில்ல என்னாச்சு உடம்பு சரியில்லையா?”

அதெல்லாம் ஒண்ணுமில்லபா..”

ம்ம் வாய்தான் ஒண்ணுமில்லனு சொல்லுது..கண்ணு ஏதோ இருக்குனு சொல்லுதே என்னடா??”

ப்ச்ச் ஸ்ரீகா வோட சண்டை ப்பா..”

ஏன் டா என்ன பிரச்சனை?”

பிரச்சனைனு எல்லாம் இல்ல சும்மா ஏதோ பேசினோம் அது அப்படியே ஆர்க்யூமெண்டா போய்டுச்சு..”

ம்ம் அதானே உன் வாயெல்லாம் சும்மா இருக்குமா??பதிலுக்கு பதில் வக்கீல் மாதிரி வாதாடிருப்ப..”,என்றவாறு மரகதம் உள்ளே வந்தார்.

ம்மா என்ன பிரச்சனைனே தெரியாம என்னை தப்பு சொல்லாத..”

சரி சரி கத்தாத டீ..இதுக்குதான் அந்த காலத்துல எல்லாம் பொண்ணு மாப்பிள்ளையை கல்யாணத்துக்கு முன்னாடி பேசிக்க விடுறதே இல்ல..எல்லாத்தையும் கல்யாணத்துக்கு முன்னாடியே பேசிட்டு அப்பறம் ஒருத்தருக்கொருத்தர் சண்டை போட்டுட்டு இருக்குறது..நல்ல புள்ளைங்க..”,என்றவர் மதுவை முறைத்தவாறே உள்ளே சென்றார்.

சரியாய் அந்த நேரம் ஸ்ரீகாந்த் அவள் மொபைலிற்கு அழைக்க வைரவன் சிரித்தவாறே உள்ளே சென்றுவிட அழைப்பை ஏற்றவள் மொட்டை மாடிக்குச் சென்றாள்.

மது..”

“…..”

ஏய் ரொம்ப பண்ணாத டீ ஒரு கிஸ் கேட்டதுக்கு நீ பண்றதெல்லாம் ரொம்ப டூ மச்..”

ஓகோ அப்போ வேற எதுக்கு கோபபடனும்?”

ஏய் என் பொண்டாட்டிகிட்ட கிஸ் கேட்டது தப்புனு வாதாடுற கொடுமையெல்லாம் இங்க மட்டும் தான் நடக்கும்..ஆனாலும் ரொம்ப தான் பண்ற கல்யாணத்துக்கு அப்பறம் இருக்கு உனக்கு..”

என்ன டா மிரட்டுறியா??”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.