(Reading time: 22 - 43 minutes)

இதுவும் வாழ்க்கையின் ஒரு பகுதி என சாதாரணமாய் நகர்ந்து விட்டாலும் சம்மந்தப்பட்ட தாய் தந்தை மகளுக்கு அந்த நாள் அனைத்து சந்தோஷங்களையும் கடந்த சற்றே மனபாரத்தை சுமக்கும் நினைவுகளோடு கூடிய ஒன்று தான்.

அதிலும் ஒற்றைப் பெண் பிள்ளை இருப்பவர்களின் நிலைமை சாதாரணமானது அல்ல.இதுதான் நடக்கும் இதுதான் எதார்த்தம் என அனைத்தும் அறிந்தாலும் அந்தநாளில் மனம் நிச்சயம் வெறுமையை உணர்ந்துதான் விடுகிறது.

மறுநாள் காலை முதல் திருமண பரபரப்பு ஒட்டிக் கொண்டது அனைவருக்கும்குறித்த நேரத்தில் மதுமிதாவின் கழுத்தில் ஸ்ரீகாந்த் தாலிகட்ட அவளின் கண்களோ தாய் தந்தையை தழுவி மீண்டது.அப்போது வரையும் சரி அதன் பிறகும் சரி மரகதமும் வைரவனும் அத்தனை பேர் சொல்வதற்கும் செவி சாய்த்து யார் மனமும் கோணாமல் பார்த்து விடைகொடுத்து அனுப்பினர்.

மதிய உணவு முடித்து மாலை நலுங்கு முடித்து மணமக்கள் மது வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.அதற்குள் இரவு சடங்கை மண்டபத்திலேயே ஏற்பாடு செய்யலாம் என ஸ்ரீகாந்த் பக்க உறவினர் ஆரம்பிக்க அதில் ஒருசலசலப்பு தொடங்கி அடங்கியது.

மதுவிற்கோ தலையே சுற்றியது இப்படி ஒவ்வொன்றிலுமா பிரச்சனைகள்  இருக்கும்.சிஇஓ ஆவதை விட கஷ்டமான விஷயம் இந்த சொந்த பந்தங்களை சமாளிப்பது என்ற முடிவுக்கே வந்துவிட்டாள்.

சொந்தபந்தம் தலை மறைந்து வீட்டிற்கு வந்த பின்னரே அவளால் சற்று நிம்மதி பெருமூச்சு விட முடிந்தது.அதற்குள் இரவுக்கான ஏற்பாடு இப்படியிரு அப்படியிரு என அத்தைகளின் அறிவுரை வேறு..விட்டால் போதுமென எங்காவது ஓடிவிடலாமா என்றிருந்தது.

இவையனைத்தையும் கடந்து ஸ்ரீகாந்துமே ஒருவித எதிர்பார்ப்பில் தான் இருக்கிறான் என்பது அவள் அறிந்தே ஒன்றே நிச்சயம் அதில் தவறில்லை தான் ஆனால் தான் அதற்கு தயாராகிவிட்டோமா என்று கேட்டால் நிச்சயம் பதில்லில்லை அவளிடம்.

ஸ்ரீகாந்திடம் திருமணத்திற்கு முன்பே பேசியிருக்கிறோம் அவனைப் பற்றி தெரியும் தான் இருந்தாலும் முதல் தனிமை சற்றே பயத்தை தான் கொடுத்தது மதுவிற்கு.அதற்குள் அவள் சிந்தனை கலைத்து அவளை தயார்படுத்தி அறைக்குள் அனுப்பி வைத்தனர்.

பாலை அவனிடம் கொடுத்துவிட்டு அவன் காலைத் தொட்டு வணங்கியவளை கைப்பிடித்து எழுப்பி கட்டிலில் அமர்த்தினான்.அவள் ஒன்றுமே கூறாமல் அமர்ந்திருக்க அப்போது தான் அவளை சரியாய் கவனித்தவன் எதோ பதட்டத்தை அவளிடத்தில் உணர்ந்தான்.

ஹே மது ஏன் என்னவோ போல இருக்க??”

இல்ல அதெல்லாம் ஒண்ணுமில்லயே..”

இது எதுவும் பிடிக்கலையா?”,நேரடியாகவே கேட்டவனிடம் சற்றே தைரியம் வந்தவளாய்,

ஸ்ரீகா அது..தப்பா எடுத்துக்காதீங்க..ஒரு சிக்ஸ் மந்த்ஸ் இல்ல ஒன் இர்க்கு அப்பறம் நாம பேபி பத்தி யோசிக்கலாமே..எல்லாமே அவசர அவசரமா தேவைதானா..எனக்கு உங்க வீட்ல பழகிக்கவே கொஞ்சம் டைம் தேவைப்படும்..”

ம்ம் புரியுது ஆனாலும் குழந்தைக்கும் இதுக்கும் ஒரு சம்மந்தமும் இல்லையே மது..இப்போ எத்தனையோ வழியிருக்கு பேபி ஃபார்ம் ஆகாம பாத்துக்க அப்பறம் என்ன..”,சற்றே அதிருப்தி இருந்ததாய் தோன்றியது அவன் குரல்.

ம்ம் நீங்க சொல்றது சரிதான்..ஆனாலும் இதெல்லாம் ப்யூச்ர்ல எதுவும் சைட் எபெக்ட் ஆகிற கூடாதே..நா இதுவரை தேவையில்லாம மெடிசின்ஸ் எடுத்ததேயில்ல..”,என தயங்கித் தயங்கி கூறினாள்.

ம்ம் நீ எதுவும் எடுத்துக்க வேணாம் நா பாத்துக்குறேன்..இப்போ தூங்கு..இன்னைக்கு ஒரு நாள் தான் சொல்லிட்டேன்..”,என்றவன் அவள் எதிர்பாரா நேரத்தில் இழுத்து இதழோடு இதழ் சேர்த்திருந்தான்.அவள் முழுதாய் உணர்வதற்குள் விடுவித்தவன் அவளை படுத்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு டீவியை உயிர்பித்தான்.

மறுபுறம் திரும்பி படுத்தவளுக்கு என்னவோ போல் இருந்தது.ஸ்ரீகாந்த் மேல் தவறில்லை தான் ஆனால் தான் ஏன் இவ்வாறு இருக்கிறோம் என்றே புரியவில்லை அவளுக்கு.இருந்த களைப்பில் அப்படியே உறங்கியும் போனாள்.

காலையில் முதலில் எழுந்தவள் குளித்துவிட்டு வந்து கணவனை எழுப்ப கண்களை கசக்கிய வாறே எழுந்தமர்ந்தவன் லேசாய் புன்னகைத்தவாறே குட்மார்னிங் என்றான்.

சாரி டா மது நைட் கொஞ்சமே கொஞ்சம் மூட் அவுட் அதான் ஒண்ணும் பேசாம தூங்க சொல்லிட்டேன்..நீ எதுவும் தப்பா நினைச்சுக்காத..பர்ஸ்ட் நைட்னா அப்படி இப்படினு பசங்க கிளப்பி விட்டுருந்தாங்க..நீ வந்து என்னவோ பேசினதும் ஒரு மாதிரி கடுப்பாயிடுச்சு அப்பறம் யோசிச்சப்போ உன் பாயிண்ட் புரிஞ்சுது.

நீ என்ன கொடுமைகாரன்னு எல்லாம்  நினைச்சுறாத..இத்தனை வருஷத்துல ரொம்ப கேர்ள் ப்ரெண்ட்ஸ் கூட கிடையாது எனக்கு..வைஃப்னு உரிமை இருக்குனு ரொம்ப எதிர்பார்த்துட்டேன்னு நினைக்குறேன்..என்ன நா பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன் நீ ஒண்ணும் சொல்ல மாட்ற?”

இல்லங்க அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல..நானுமே உங்களை டிஸ்அப்பாய்ண்ட்மெண்ட் பண்ணிருக்க கூடாது.ஐ அம் சாரி..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.