Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 20 - ராசு - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 20 - ராசு

handsTogether

னைவியின் கோபத்தை எப்படி சரிசெய்வது என்று கருப்பையா யோசித்துக்கொண்டிருந்தான்.

அவள் அத்தனை கோபப்படுவதும் சரிதானே. திருமணமாகி இத்தனை வருடங்கள் கழித்துத் தான் அவளை நேசிப்பதை சொன்னால் அவள் எப்படி கோபப்படாமல் இருப்பாள்?

அவள் தன் மனதைத் திறந்து சொன்னபிறகாவது தானும் சொல்லியிருக்க வேண்டும்.  அப்போது கௌரவம் பார்த்துக்கொண்டு பேசாமல் இருந்தது தவறு.

“சாரிடா.”

அவள் கண்டு கொள்ளாமல் சென்றுவிட்டாள். அதன் பிறகு அவள் அவன் கூட பேசவேயில்லை. அவளால் எப்படி பேசாமல் இருக்க முடிகிறது? என்று ஆச்சர்யப்பட்டான்.

மூச்சுக்கு முன்னூறு தரம் ‘மாமா மாமா’ என்று அழைத்துக்கொண்டேயிருப்பவள் பேசாமல் இருந்தால் ஆச்சர்யம்தானே?

இரண்டு நாட்கள் கழிந்துவிட்டன.

“ஏய் போதும்டி. ரொம்பப் பண்ணாதே. எத்தனை தரம் மன்னிப்புக் கேட்டாச்சு. உன் காலில் விழனும்னு நினைக்கிறியா? விழவா?”

கேட்டுக்கொண்டே அருகில் வந்தவனைப் பார்த்து பதறிப்போனாள் சிவரஞ்சனி.

“ஐயோ மாமா. என்ன காரியம் பண்ணறீங்க?”

“பின்ன என்னடி பண்ணச் சொல்றே? ஒரு சின்ன விசயத்துக்காக மூஞ்சை தூக்கி வச்சிக்கிட்டு அலைஞ்சுக்கிட்டிருந்தா ஒரு மனுசன் என்ன பண்ணுவேன்?”

“சாரி மாமா. உங்களுக்கு சிரமமா இருந்ததா?”

“பின்னே இல்லையா? உன் மூஞ்சை சாதாரணமா பார்த்தாலே சகிக்காது. அதை நீ தூக்கி வச்சிக்கிட்டு அலைஞ்சா எப்படி பார்க்கிறது?”

“மாமா. உங்களை.....”

செல்லக் கோபத்துடன் அவனை முதுகில் மொத்தினாள்.

“உன்னைப் போய் என் அம்மா பொறுமையில் சிகரம்னு சொல்றாங்களே. என் மருமக போல் உண்டான்னு சொல்றாங்க. அவங்க இப்ப உன்னைப் பார்க்கனும்.”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“பேச்சை மாத்தாதீங்க. என் மூஞ்சி பார்க்க சகிக்காமல் இருக்கா?”

“பின்னே நான் சும்மாவா சொன்னேன்? உண்மையைத்தான் சொன்னேன்.”

“பரவாயில்லை. நான் சுமாராவே இருந்துட்டுப்போறேன்.”

“நான் எப்படீ சொன்னேன்? நீ சுமாரா இருக்கேன்னு. உன்னைப் பார்க்க சகிக்கலைன்னுதானே சொன்னேன்.”

“மாமா. இப்ப நீங்க நிறுத்தலைன்னா நான் அழுதுடுவேன். நானே இரண்டு நாளா கோபமா இருக்கிற மாதிரி மூஞ்சை தூக்க வைச்சுக்கிட்டு அலைஞ்சதால் தலை வலிக்குது.”

“அப்ப கோபம் இருக்கிற மாதிரி நடிச்சியா? உண்மையிலேயே கோபம் இல்லியா?”

“உங்ககிட்ட என்னால் எப்படி கோபப்பட முடியும் மாமா? நான் சாகப்போறப்ப சொல்லாமல் இப்பவாவது சொன்னீங்களே. அதுவரைக்கும் சந்தோசம்தான்.”

“எதுக்குடி இப்ப அபசகுனமா பேசறே? இப்ப உனக்கு என்ன வயசாயிடுச்சுன்னு அதுக்குள்ள இப்படிப் பேசறே.”

இப்போது கணவன் கோபித்துக்கொள்ள அவள் சமாதானப்படுத்த வேண்டியதாயிற்று.

னோரஞ்சனியின் திருமணம் அவர்களது திருமணம் போன்றே வெகு விமர்சையாக நடைபெற்றது.

என்ன ஒன்று வித்தியாசம் என்றால், இப்போது சிவரஞ்சனியின் பெற்றோருக்கு திருமண வேலைகளில் சிவரஞ்சனியின் குடும்பத்தாரே உதவி செய்தனர்.

மகள், மருமகன் செய்வதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. ஆனால் மருமகனைப் பெற்றவர்கள், அவன் கூடப்பிறந்தவன் செய்யவேண்டும் என்பது இல்லையே.

அதுதான் சீதாலெட்சுமியையும், சந்திரசேகரையும் நெகிழச் செய்தது.

“இப்படி ஒரு இடம் உனக்கு சம்பந்தியாக வாய்த்தது உன்னோட அதிர்ஷ்டம்ப்பா.”

அவரது உறவினர்கள் எல்லாம் புகழ்பாடி விட்டனர்.

சண்முகமும், சரவணனும் முழுவதும் சாப்பாடு பரிமாறும் இடத்தில்தான் நின்றனர். சாப்பிடுபவர்களின் இலையைப் பார்த்துப் பார்த்துப் பதார்த்தங்களை வைப்பவர்களிடம் வேலை வாங்கினர்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

(RR) பிந்து வினோத்தின் "பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

சாப்பிட்ட அனைவருக்குமே, தங்களை விசேசமாக கவனிப்பதாக ஒரு உணர்வை அவர்கள் உண்டாக்கினர்.

வடிவோ, சீதாலெட்சுமியோடு சேர்ந்து தாம்பூலப் பையில் சாமான் போடுவதிலிருந்து மற்ற எல்லாவற்றிலும் கூடமாட நின்றாள்.

சிவரஞ்சனிக்கும் அவர்கள் பார்த்துப் பார்த்துச் செய்தது மிகவும் மகிழ்ச்சி. அவர்கள் இப்படி நடந்துகொண்டதிலிருந்தே தனது புகுந்த வீட்டினர் தன் மீது வைத்திருக்கும் பாசம் அவளுக்குப் புரிந்தது.

திருமண வேலைகளில் கூடமாட அவள் உதவியாக இருக்க வேண்டும் என்று அவளை அவளது பிறந்த வீட்டில் விட்டுவிட்டு மற்றவர்கள் கிளம்பினர்.

மணமக்களை அனுப்பி வைத்தபிறகு சிவஞ்சனியும், குழந்தைகளும் வீட்டில் இருந்ததால் அவர்களுக்கு வெறிச்சோடி இல்லாமல் வீடு கலகலப்பாக இருந்தது.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 20 - ராசுmahinagaraj 2019-01-29 13:46
ரொம்ப அருமையா இருக்கு மேம்... :clap: :clap:
நல்லா அண்ணி. நல்ல கொழுந்தன்.. ;-)
கருப்பு ஏன் இவ்வளவு கோபம்.. வெளிகோபத்தை இங்க காட்டலாமா.. steam :sad:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 20 - ராசுRaasu 2019-01-29 18:33
Thank you Mahinagaraj.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 20 - ராசுSahithyaraj 2019-01-29 07:25
Ivan thirundhave mattana....
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 20 - ராசுRaasu 2019-01-29 18:32
Thank you Sahithyaraj.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 20 - ராசுmadhumathi9 2019-01-29 06:50
:clap: nice epi.interesting aaga poguthu.but iravu nerathil kuzhanthaigalai kootti kondu pivathu miga aabathaache? :thnkx: 4 this epi. Waiting to read more. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 20 - ராசுRaasu 2019-01-29 18:30
Thank you Madhumathi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 20 - ராசுrspreethi 2019-01-28 22:10
Super update... Acchacho yenna aachu karupuku ippadi oru vaartha sollalama too bad... Bt Siva ippadi yen mudivu yefuthanga?! :Q: waiting for the next update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 20 - ராசுRaasu 2019-01-29 00:29
Thank you Preethi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 20 - ராசுAdharvJo 2019-01-28 20:30
facepalm pch yaruppa kannuvachanga (naa illai rasu ma'am ;-) ) Mr. BB unga ranjumma-k ninga vacha nick name ungalukke reverse ama MMu steam ippadi onnum illadha matter-k ivaru over react panuraru ma'am :angry: Anyway samadhanam paniduvarun namubren :yes:

Other than this last page sema cool aga ponadhu ma'am update :clap: :clap: Mr & Mrs Malathi yen ippadi odd one out mathiri irukanga :sad: PAvam andha kutti...
Saravanan chanceless :D Enga irundhalum vazhuga-n sollittu poradhukku irundhare :dance: simply superb.

* Indha story unga usual style-la vida different aga irukku ma'am :yes: :cool:

thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 20 - ராசுRaasu 2019-01-28 21:19
Thank you very much Adharv.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 20 - ராசுsaaru 2019-01-28 17:42
Ada loose
Karuppu ayyo ayyo
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 20 - ராசுRaasu 2019-01-28 18:14
Thank you Saaru.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top