(Reading time: 9 - 17 minutes)

"தமிழ்... தினமும் நா சாப்டதுக்கு அப்புறம் சாப்பிட்டு, எனக்கு என்ன வேணும் னு பாத்து பாத்து செஞ்சுட்டு, என் படிப்புக்கு பணம் வேணும்னு சொன்ன அப்போ எத பதியும் யோசிக்காம டக்குனு உன் நகையை எடுத்து குடுத்த. இதோ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட உன் கஷ்டத்தை மறைச்சிட்டு எனக்கு பசினு சொன்னதும் எனக்கு பறிமாற உடனே வந்தியே இப்டி எந்நேரமும் என்ன பத்தியே யோசிக்கற உன்ன எப்படி நான் வேணாம்னு சொல்வன்னு நீ நெனைச்ச?. என் கூட வா", என்று அவளை தன் அம்மாவின் புகைப்படத்திற்கு அருகே அழைத்து சென்றவன்,

"என் அம்மாக்கு ரொம்ப ஆச உன்ன நா கல்யாணம் பண்ணிக்கனும்னு. ஆரம்பத்துல எனக்கும் மாமா பொண்ணுன்னு தான் உன்ன பிடிக்கும். மாமா பொண்ண கல்யாணம் பண்ணிக்கறதும் வழக்கம் தான. அப்டி தான் நெனச்சேன். ஆனா அம்மா போனதுக்கு அப்புறம் நீ என்ன பாத்துக்கிட்ட விதம், ஒவ்வொரு நிமிஷமும் என்ன பத்தியே யோசிக்கற உன் மேல என்னையே அறியாம காதல் வந்துது. ஆனா நா எதையும் வெளிகாட்டிகளை ஏன்னா நமக்குன்னு சில பொறுப்புகள் இருக்கு நமக்கு இன்னும் வயசு இருக்கு. இந்த ஜென்மத்துல நீ தான் என் பொண்டாட்டி" என்று அவள் கன்னத்தை கிள்ளியவன், "நீ எத பத்தியும் கவலைப்படாம எப்பயும் போல சந்தோஷமா சிரிச்சிட்டு இருக்கனும்."சரியா?" என்று அவளின் கண்ணீரை துடைத்து விட்டான்.

தானாக கண்களில் வழிந்த நீரை துடைத்தவள் நிகழ்காலத்திற்குள் நுழைந்தாள்.

மறுநாள் காலை அன்பு கண் விழிக்கும் போது தமிழ் தன் அருகிலேயே இன்னும் உறங்கி கொண்டிருப்பதை பார்த்தவன் பதறிப்போனான். தமிழ் எப்போதும் இவ்வளவு நேரம் உறங்குபவள் அல்ல. நேரத்திற்கு எழுந்து வேலை செய்பவள். உடல் நலம் சரியில்லையோ என்று சந்தேகித்தவன் மெல்ல அவளின் நெற்றியில் கை வைத்து பார்த்தான். காய்ச்சல் எதுவும் இல்லை என்று உறுதி செய்தவன் மெல்ல அவளை எழுப்பினான்.

"என்னடா உடம்பு ஏதும் சரியில்லையா?"

"ம்ம்ம்... ஆமா மாமா"

"என்ன பண்ணுது?"

"வயிறு வலி மாமா"

"அச்சோ... ஏன்டா?. எழுத்துரு ஹாஸ்பிடல் போலாம்"

"இல்ல மாமா வேண்டாம்"

"ஏண்டி?"

"கொஞ்ச நேரத்துல அதுவே சரி ஆகிடும்"

"என்ன விளையாடுறியா? வலிய ஏன் பொருத்துக்கணும் வா போகலாம்"

"மாமா... இது மாச மாசம் வர்ற வலி தான். இதுக்கு போய் ஹாஸ்பிடல் போவாங்களா?"

அப்போது தான் புரிந்தவனாக,

"இத சொல்றதுக்கு தான் இவ்ளோ தயக்கமா??" இதுலா இப்போ பள்ளிக்கூட பாட புத்தகத்திலேயே இருக்கு. இது உடம்புல நடக்குற ஒரு மாற்றம் அவ்ளோ தான். இதுல மறைக்க என்ன இருக்கு?. இப்படி நீங்க உங்களோட வலிகளையும் உடலில் ஏற்படும் மாற்றங்களையும் மறைக்கறதுனால தான், சில ஆண்களுக்கு உங்க கஷ்டம் தெரியறதும் இல்ல புரியறதும் இல்ல. அப்படி புரியாததுனால தான் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடக்குது. அதுவும் இல்லாம நான் உன் புருஷன் என் கிட்ட ஷேர் பண்றதுல உனக்கு என்ன தயக்கம். சரி, இன்னைக்கி நீ எந்த வேலையும் செய்ய வேண்டாம் என்று கூறியவன் கிச்சனுக்கு சென்று தண்ணீரில் பெருஞ்சீரகத்தை சேர்த்து கஷாயம் தயாரித்து வந்தவன் அவளை குடிக்க வைத்தான்.

"இத குடிச்சா வலி குறையும். நீ குடிச்சிட்டு கொஞ்ச நேரம் படு டா. வலி கொறைஞ்சதும் குளிக்க போவ. நா போய் குளிச்சிட்டு நமக்கு டிபன் ரெடி பண்றேன்." என்றவன் குளிக்க சென்றான்.

குளித்து முடித்து வந்தவன் அவளை எழுப்பி குளிக்க அனுப்பிவிட்டு அவளுக்கான உடையையும் சானிட்டரி பெடையும் எடுத்து வைத்து விட்டு சமையலில் மூழ்கினான். சமையலில் எதோ சந்தேகம் கேட்க கதவை திறந்தவன் உடை மாற்றிக்கொண்டிருந்த தமிழ் தன் புடவையை போர்த்திக்கொள்வதை பார்த்தவன் சட்டென தலையை திருப்பிக்கொண்டு கிச்சனுக்குள் நுழைத்து விட்டான்.

அப்போது தான் அவனுக்கு புரிந்தது இருவரும் இன்னும் விலகியே இருப்பது. சின்னதாய் புன்னகைத்தவன் "இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்" என்று தனக்குள் கூறிக்கொண்டான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ரம்யாவின் "என் காதலே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

தன் அன்னையிடம் அனைத்தையும் அறிந்து கொண்டவன் தன் அறைக்கு சென்றான். சீதா அங்கே அழுது கொண்டிருந்தாள்.

"சீதா..."

கட்டிலில் படுத்து அழுதுகொண்டிருந்தவள் எழுந்து அமர்ந்தாள். அவள் அருகில் அமர்ந்து அவள் கன்னங்களை தன் கையில் ஏந்தியவன் அவள் கன்னங்களில் வழியும் கண்ணீரை துடைத்தான். சட்டென அவன் மார்பில் முகம் புதைத்து அழ ஆரம்பித்துவிட்டாள்.

"அம்மு... ஏன் டா அழற?. பெரிமா பத்தி தான் உனக்கு தெரியும்ல? யாரையாவது கொர சொல்லலைன்னா அவங்களுக்கு தூக்கமே வராது. இத போய் பெருசா எடுத்துட்டு நீ ஏன் டா அழுது உன் உடம்ப கெடுத்துக்குற?"

"இல்ல ராம். அவங்க சொன்னதும் கரெக்ட் தான?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.