Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 22 - ராசு - 5.0 out of 5 based on 2 votes
Change font size:

தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 22 - ராசு

handsTogether

னைவியின் பேச்சில் திகைத்து அவளையே வெறித்துப் பார்த்தான் கருப்பையா.

பெரிதாக சொத்தைப் பிரித்துக் கொடுக்கச் சொன்னவள், இப்போது எப்படி சும்மா வருவது? நான் உங்கள் மனைவியாக மட்டும் இருந்தால் உங்க கூட வருவேன். ஆனால் என் பிள்ளைங்களுக்கு அம்மாவா இருக்கேனே அது இதுன்னு வசனம் பேசிக்கிட்டு இருக்கா.

“ஏய் நீதானேடி பெரிசா சொத்தைப் பிரிச்சுக் கொடுங்கன்னு என்கிட்ட வம்பிழுத்தே?  சொத்து மேல் உள்ள ஆசையால் உனக்கும் கிடைக்கும்னு நினைச்சுத்தான் அப்படி சொன்னியா? இப்ப அடுத்தவங்களுக்குப் போகப் போகுதுன்னு முடியாதுன்னு என்னென்னமோ வசனம் பேசிக்கிட்டு இருக்கே.”

“என்னாச்சு மாமா உங்களுக்கு? இப்ப கொஞ்ச நாளா உங்க மூளை வேலையே செய்ய  மாட்டேங்குது.”

அவன் பல்லைக் கடித்தான்.

“ரொம்ப அதிகமா பேசறே?”

“நான் அப்படித்தான் மாமா பேசுவேன். நான் என்ன சொல்றேன்னு முழுசா கேட்காமல் நீங்க பாட்டுக்கு எடுத்தோம் கவிழ்த்தோம்னு பேசிக்கிட்டே இருக்கீங்க.”

“அப்படி என்ன சொல்ல வந்தியாம்?”

“நீங்க என்ன கேட்டீங்க? நீங்க கூப்பிட்டால் உங்க பின்னாடியே கை வீசிக்கிட்டு வருவேனான்னுதானே கேட்டீங்க? அது எப்படி முடியும்? நம்ம பிள்ளைங்களை அப்படியே விட்டுட்டா வர முடியும்?  வீட்டுக்கு மூத்தமருமக. பொறுப்பு அதிகம். அத்தை மாமாவை அப்படியே விட்டுட்டா வர முடியும்? அவங்களையும் அழைச்சுக்கிட்டுத்தானே வர முடியும்? அதை சொல்ல வந்தால் என்னென்னவோ பேசறீங்க?”

கண்களாலேயே மன்னிப்புக் கோரினான்.

“அது என்னது? திட்டறது மட்டும் எல்லோரும் பார்க்கும் படி, கேட்கிற மாதிரி திட்டிவிட்டு, மன்னிப்பு மட்டும் சத்தமில்லாமல் கண்களால் கேட்கறீங்க?”

அவள் சத்தமாகக் கேட்க அவன் தலையிலடித்துக் கொண்டான்.

“நீங்க என்னமோ பண்ணுங்க. சீக்கிரம் வீட்டில் நடக்கிற பிரச்சினைக்கு ஒரு முடிவு கொண்டு வாங்க. எனக்கு அடுப்படியில் நிறைய வேலை இருக்கு. இப்படியே கிளம்பனும்னாலும் எனக்கு சரிதான்.”

“சரி. சரி. நீ போய் உன் சமையல் அறையைக் கட்டிக்கோ. நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்.”

அவள் சென்றுவிட்டாள்.

“என்னப்பா? எல்லாத்தையும் பார்த்தீங்கதானே? எனக்கு ஒன்னும் பிரச்சினையில்லை. அவளுக்கும் நான்தான் பெரிசு. எந்த சொத்தையும் அவ பெரிசா மதிக்கலை.”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“நீ சொல்லனுமா என் மருமகளைப் பத்தி?”

சொல்லிவிட்டு சிறிது நேரம் அமைதியாக இருந்தார் சண்முகம்.

“நாங்க இருக்கும் போதே இப்படி யாரோ மாதிரி ஒட்டாமல் போறானே? இப்ப சொத்து மட்டும்தான் அவனைக் குடும்பத்தோட ஒட்டவச்சுக்கிட்டு இருக்கு. எங்க காலத்துக்குப் பிறகு நீங்க என்ன வேணா பண்ணுங்க. இப்போதைக்கு வேணா ஒன்னு பண்ணலாம்.  அவங்களுக்கு தனித்தனியா வீடு கட்டிக்கச் சொல்லி இடம் கொடுத்திடலாம்.”

“இடம் மட்டும் கொடுத்திட்டால் போதுமாப்பா. வீடு கட்ட பணம் வேணுமே?”

“அவங்க ஆசைப்பட்டால் அவங்கதான் செலவு பண்ணி வீடு கட்டிக்கனும்?”

“பிரபாகரன் எப்படியோ எனக்குத்  தெரியாது. ஆனால் சரவணனிடம் எந்த சேமிப்பும் இல்லை. மாமா வீடும் அந்த அளவுக்கு வசதி இல்லைங்கிறதால் மேனகாவிடமும் எந்த நகையும் இல்லை. அவன் எப்படிப்பா வீடு கட்டுவான்?”

“அதற்காக அவனுக்கு மட்டும் ஏதாவது செய்யப்போனால் நல்லாருக்காது.”

“அது எப்படிங்க முடியும்? பிரபாகரன் வேலைக்குப் போய் சல்லிக்காசு கூட வீட்டுக்குத் தர்றதில்லை. சரவணன் அப்படியா? அவனுக்கு இந்த வீடுதான் உலகமே. தோட்டம் துரவுன்னு இருந்துட்டான். வர்ற வருமானத்தையும் உங்ககிட்ட கொடுத்திடுறான். அவனைப் போய் தனியா வீடு கட்டுன்னா என்ன செய்வான்?”

வடிவும் அவரிடம் எடுத்துச் சொன்னாள்.

“என்ன பண்றது? என்கிட்ட எந்த சேமிப்பும் இல்லை. வருமானத்தில் எல்லாம் சொத்து வாங்கியாச்சு. எல்லாத்திலயும் பாடுபட்டு உருவாக்கி வச்சிருக்கிறதை விற்க எனக்கு மனசில்லை.”

“அப்பா. பின்னாடி வீடு கட்டி வித்துக்கலாம்னு சொல்லி ஒரு இடம் வாங்கிப்போட்டேனே. இப்ப அதை வித்து அதில் வர்ற பணத்தை இரண்டு பேருக்கும் கொடுக்கலாம்பா.”

“அது முழுக்க முழுக்க உன் சம்பாத்தியத்தில் வாங்கினது.  அது மட்டுமல்ல.  இந்த சொத்து முழுவதுமே நீ சம்பாதிச்சு உருவாக்குனதுதான். இருந்தாலும், அந்த இடம் உன் தொழிலுக்காக வாங்கிப் போட்டது. வீடு கட்டி விற்றால் நல்ல லாபம் கிடைக்கும்னு சொன்னியேப்பா.”

“அப்ப வர்ற லாபத்தை விட இப்ப குடும்ப நிம்மதிதான்  முக்கியம்பா. அதை வித்துடலாம்.”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மஹாவின் "எனதுயிரே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

சண்முகம் அவனை பெருமையுடன் பார்த்தார்.

“சரிப்பா. ஆக வேண்டியதை பாரு.”

அவனும் அந்த இடத்தை விற்க வேண்டிய வேலையில்  மும்முரமானான்.

அவசரத்துக்கு விற்கப்போனால் அடிமாட்டு விலைக்குக் கேட்டார்கள்.

வேறு வழியில்லை.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 22 - ராசுsaaru 2019-02-18 13:50
Nice update rasu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 22 - ராசுSAJU 2019-02-12 16:14
So sad
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 22 - ராசுRaasu 2019-02-12 19:26
Thank you Saju.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 22 - ராசுmadhumathi9 2019-02-11 20:14
wow nice & paasamaana epi. :clap: waiting to read more. :thnkx: :thnkx: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 22 - ராசுRaasu 2019-02-11 22:07
Thank you Madhumathi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 22 - ராசுmahinagaraj 2019-02-11 17:52
சோ ஸ்வீட்.. ரொம்ப அழகான குடும்பங்களின் எண்ணங்கள்... சூப்பர்... :clap :clap:
ரொம்ப நல்லாயிருக்கு மேம்...
கருப்பு ரொம்ப தான்.. பொண்டாட்டி சொன்னா கொஞ்சம் கூட கேக்கரதேயில்லை... :angry: steam
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 22 - ராசுRaasu 2019-02-11 22:06
Thank you Mahinagaraj.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 22 - ராசுAdharvJo 2019-02-11 17:35
facepalm Rasu ma'am idhu unga trade mark style pole irukke sari vidunga avangalukku world tour poga opportunity kedaichadha ninaichikalam... :sad: BB n avaroda Ranjimaa would take it forward :yes:

Pavam Gowtham....Hope siva and BB will help him to come out of this tradegy :yes:

Uncle aunty are made for each other.

MMu & BB :hatsoff: to them ...lovely couples. Prabha and Sarvanan must be lucky :yes: Vara vara BB MMu vaga convert aitu irukare tac tac-n yosikama words viduraru. Hope to see him back on form. MMu smart aga marittu irukanga :-) Thank you and keep rocking ma'am.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 22 - ராசுRaasu 2019-02-11 22:05
Thank you Adharv.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Go to top