(Reading time: 6 - 12 minutes)

தொடர்கதை - எனதுயிரே - 09 - மஹா

enathuyire

ந்த மாமனோட மனசு மல்லிகைப்பூ போல பொன்னானது

இந்த வண்ணமயில் அதனால் எண்ணியது போல பூச்சூடுது

குத்தால குளுமையும் கூடி வருது

சந்தோஷ நெனப்பொரு கோடி வருது

சொல்ல வார்தை ஏதும் இல்ல

மாமனோட ஹே... மாமனோட......

தமிழ் பாடிக்கொண்டே கிச்சனில் இருந்து வெளியே வரவும் அன்பு வேலையில் இருந்து உள்ளே வரவும் நேரம் சரியாக இருந்தது. அவளின் முகத்தில் இருந்த சந்தோஷத்தையே ரசித்தவன் அவளையே பார்த்து கொண்டிருந்தான். அவனை அந்நேரத்தில் எதிர்பாக்காதவள் நாக்கை கடித்து கொண்டு,

"என்ன மாமா சீக்ரம் வந்துடீங்க இன்னைக்கு?. சரி, குளிச்சிட்டு வாங்க சப்புடலாம்" என்று பேச்சை மாற்றினாள்.

சிறு புன்முறுவலோடு "ம்..." என்று கூறி விட்டு குளிக்க சென்றான். அவனுக்காக காத்திருந்தவள் வழக்கத்திற்கு மாறாக அவன் இன்னும் வெளியே வராமல் இருக்க படுக்கை அறை கதவை தட்ட முயற்சித்தாள். கதவு தாழிட படாமல் இருப்பதனால் நிலைதடுமாறி கீழே விழ போனவளை தாங்கி பிடித்தன அவளவனின் கரங்கள்.

அவனின் தொடுகையில், அருகாமையில் சிலிர்த்து போனாள் பெண்ணவள். அவளின் மோன நிலையை கண்டவன் அவளின் முகமெங்கும் தன் உதடுகளால் அளவெடுத்தான். குனிந்து அவள் செவ்விதழை நோக்கி சென்றவன் சற்று நிமிர்த்து அவளின் அனுமதிக்காக வேண்டினான். அவனின் செயலில் மேலும் அவளின் முகம் செம்மையாக மாற அவளின் இதழை சிறை பிடித்தான். மெல்ல அவளை கையில் ஏந்தியவன் தான் இவ்வளவு நேரம் அலங்கரித்த மெத்தையில் அவளை அமர்த்தினான். என்ன தான் இவ்வளவு நாள் அன்புவை அவள் இந்த விஷயம் தொடர்பாக கிண்டல் செய்து சீண்டி இருந்தாலும் இன்று அவனின் அருகாமை அவளுக்கு ஒரு வித பயத்தை அளித்தது. அவளின் படபடப்பை அறிந்தவன், அவளின் அருகில் அமர்ந்து, அவளின் கன்னங்களை கையில் ஏந்தி,

"பொண்டாட்டி...."

"ம்..."

"லவ் யு டி"

முறுவலித்தாள்.

அவளின் காதினுள் அவனின் மூச்சு காற்று பட, அது அவளை மேலும் இம்சித்தது. அவன் மேலும் முன்னேற அவனின் தேடலுக்கு வளைந்து கொடுத்தாள் அவள். இருவரும் தங்களது இல்லற வாழ்க்கையை இனிதே தொடங்கினர்.

கண்ணாளனே கண்ணாளனே உன் கண்ணிலே என்னை கண்டேன்

கண் மூடினாள்  கண் மூடினாள் அந்நேரமும் உன்னை கண்டேன்

ஒரு விரல் என்னை தொடுகையில் உயிர் நிறைகிறேன் அழகா

மறு விரல் வந்து தொடுகையில் விட்டு விலகுதல் அழகா

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

உயிர் கொண்டு வாழும் நாள் வரை இந்த உறவுகள் வேண்டும் மன்னவா...

இதே சுகம் இதே சுகம் எந்நாளுமே கண்டால் என்ன

இந்நேரமே இந்நேரமே என் ஜீவனும் போனால் என்ன

முத்தத்திலே பல வகை உண்டு இன்று சொல்லட்டுமா உனக்கு

இப்படியே என்னை கட்டிக்கொள்ளு மெல்ல விடியட்டும் கிழக்கு

அச்ச பட வேண்டாம் பெண்மையே

எந்தன் ஆண்மையில் உண்டு மென்மையே...

நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா....

இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீ அல்லவா

இதழோடு இதழ் சேர்த்து உயிரோடு உயிர் கோர்த்து வாழவா..... 

காலை கண்விழித்தவள் எழுந்து கொள்ள மனமே இன்றி அவள் மாமானுடன் ஒன்றிக்கொண்டாள். அவனது மீசையை முறுக்கி கொண்டு  விளையாடிக்கொண்டிருந்தவளை மேலும் இறுக்கி கொண்டு உறங்கினான்.

"ராம்... ராம்... பாக்டரிக்கு கெளம்பியாச்சா?"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "கலாபக் காதலா..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

"ஆமா டா"

"இன்னைக்கு கொஞ்சம் சீக்ரம் வரியா கோவிலுக்கு போயிடு வரலாம்?"

"கண்டிப்பா டா"

"தேங்க் யு ராம்", என்று குழந்தை போல் ஓடியவளை பார்த்தவனின் மனம் நிறைந்து இருந்தது.அவன் மீள முடியாத துயரத்தில் இருந்த போது அவனை அதிலிருந்து மீட்டு எடுத்த தேவதை அல்லவே அவள்.

ன்று, அவளின் காதலை சொல்ல கல்லூரி திறக்கும் நாளுக்காக காத்திருந்தவள் முதல் நாள் அவன் வராமல் போக ஏமாந்து போனாள். ரகுவிடம் சென்று விசாரித்தவள் அவன் தந்தைக்கு உடல் நலம் சரி இல்லாததால் அவன் வரவில்லை என்று தெரிந்து கொண்டவள் வருத்தமாக இருந்தாலும் அவனின் வரவுக்காக காத்திருந்தாள். அவனை விட்டு பிரிந்திருந்த இந்த ஒரு வாரத்தில் அவன் மேல் உள்ள நேசம் இன்னும் பெருகியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.