(Reading time: 16 - 32 minutes)

கொஞ்சம் வேளையிருக்குடா.. இங்க ஒரு மீட்டிங்..

அப்போ நீ இங்க சுத்த வர்ல..

இங்க வந்த அப்பரம் தான் தெரிஞ்சதுடாம்மா.. இவ்வளவு தூரம் வந்துட்டு போகலைன்னா.. நல்லா இருக்காதுடாம்மா..

ஓகே ஆகா.. போயிட்டு வா..

பாத்து இருந்துக்கடாம்மா..

சரிடா.. நீ பாத்து போ..

ம்.. அபி அம்மூவ பாத்துக்க.. கூடவே இரு.. நான் போயிட்டுவரேன்.. என விடைபெற்று கிளம்பனான்..

அபி மனுவை சில வினாடிகள் நோக்கியவன்.. எதுவும் பேசாம்மல் அருகில் அமர்ந்தான்..

சிரிய மென்னகை பூத்தவள்.. என்ன ஜித்து கோவமா..

நான் எதுக்கு கோவபடணும்.. என கோவமாக கேட்டான்..

சரி எனக்கு ஐஸ்கிரீம் வேணும்..

என்ன..

எனக்கு ஐஸ்கிரீம் வேணும் வாங்கி தருவியா.. மாட்டியா.. புருவம் உயர்த்தி கண்சிமிட்டி கேட்டவளுக்கு ஒரு வெட்க சிரிப்பால் பதில் கொடுத்து அவளுக்காக ஐஸ்கிரீம் வாங்க சென்றான்..

அபிக்கே இது புதிதாக இருந்தது.. கர்னி என்கிட்ட உரிமையா நடந்துக்கலைன்னு நான் ஏன் கோவப்படனும்.. உண்மை தானே.. ஆகாஷ் தான் கர்னிக்கு எல்லாம இப்போ வரை இருக்கான்.. இதுல நீ ஏன் என்கிட்ட கேட்கலைன்னு நான் ஏன் சண்டை போடனும்.. இதோ.. இப்போ.. அவ ஐஸ்கிரீம் கேட்கவும் ஏன் எனக்குள்ள அவ்வளவு சந்தோஷம்.. எனக்கு கர்னி என்கூடவே இருக்கணும்.. என்னால இந்த எண்ணத்தை தடுக்கவே முடியலை.. என்ன நடந்தாலும் சரி.. இந்த கல்லுரி முடியர வரைக்கும் இந்த மாதிரி எண்ணத்தை வெளிபடுத்த கூடாது.. தனக்குள்ளே அவன் முடிவுளை எடுத்தான்..   ஆனா நாம எடுக்கர எல்லா முடிவுகளும் நாம நினைக்கர மாதிரியே தான் நடக்கும்ன்னு எதுவும் இல்லையே.. இப்போ அபி நினைக்கரதும் நடக்குமான்னு பொறுத்து தான் பாக்கனும்..

இங்கு மனுவுக்கும் ஆச்சர்யமே.. இது என்ன வகையான உணர்வு.. அவனுடைய அந்த பொறாமையான கோவம் எனக்கு ஏன் ரொம்ப பிடிச்சு இருக்கு..  அவனுடைய பாராமுகம் ஏன் எனக்கு என்னவோ போல இருக்கு.. நான் எவ்வளவு யோசனை பன்னாலும் இவனபத்தின நினைப்பை என்ன சொல்லரதுன்னு தெரியல்ல.. அவள் யோசிக்கையிலேயே.. அபி ஐஸ்கிரீம் வாங்கிட்டு வந்தான்..

இந்தா..

ஒன்னு தான் இருக்கு..

நான் ஐஸ்கிரீம் சாப்பிரது இல்லடா..

ம்.. என அவள் ஐஸ்கிரீமை சாப்பிட தொடங்கினாள்.. அவள் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போதே.. அபியை பார்க்க.. அவன் அவள் சாப்பிடுவதையே புன்னகையுடன் பார்த்துக்கொண்டு இருந்தான்..

இந்தா ஜித்து ஒருவாய் கடிச்சுக்கோ.. இல்லாட்டி எனக்கு வயிறுவழிக்கும்..

அவன் மேலும் சிரித்துக்கொண்டே.. அவள் நீட்டியதில் ஒரு வாய் சாப்பிட்டான்..

நீ எப்பவும் இப்படி தான் இருப்பியா..

இப்படி தான்னா..

அவளின் முறைப்பை ரசித்தவன்.. அவளை சீண்ட எண்ணி இப்படி அருந்தவாலா..

ஓய்.. நான் என்ன அருந்தவாலா..

பின்ன இல்லையா..

போதும் ஜித்து.. இதுக்கு மேல பேசுன பிச்சு..

அப்படி தான் பேசுவேன்.. என்ன பன்னுவ.. அவளை சீண்டிவிட்டவன்..

அதை கேட்ட பின் மனுவால் அதற்கு மேலும் பொறுமை காக்க முடியாமல்.. உன்ன.. என அவனை தொரத்த தொடங்கினான்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீனுவின் "மழையின்றி நான் நனைகின்றேன்" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

உன்னவிட்டா நீ பேசிகிட்டே போர.. ஒழுங்கா நில்லு.. ஓடாத..

நான் ஒன்னும் பொய் சொல்ல.. வேணா நீ யார்கிட்ட வேணாலும் கேட்டு பாரு அவங்களும் இதே தான் சொல்லுவாங்க..

என்ன.. இதுல நீ எல்லார்கிட்டையும் சொல்ல சொல்லரையா..

ஹாஹா கர்னிம்மா.. நீ அருந்தவாலுன்னு.. எல்லாருக்குமே தெரியும்..

இருவரும் தொரத்திக்கொண்டே சிறிது தூரம் ஓடி வந்திருந்தனர்.. அதில் நீண்ட நேரம் போக்குகாட்டிய அபியை பிடிக்க வேண்டும் என மனு ஓட்டத்தை அதிகரிக்க.. கர்னி ரொம்ப நேரம் தொரத்தரான்னு.. அபியும் நின்னு திரும்பி பார்க்கவும்.. மனு வேகமாக வந்தவள்.. நிற்கமுடியாமல் அவன் மேலேயே விழுந்தாள்.. இருவரும் எதிர்பார்க்காமல் மோதியதாலும்.. அவர்கள் ஓடி வந்தது இறக்கமான பகுதி என்பதாலும்.. அவர்கள் நிலைதடுமாறி.. ஒருவர் மீது ஒருவர் என விழுந்து புரண்டனர்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.