(Reading time: 16 - 32 minutes)

தொடர்கதை - வேலண்டைன்ஸ் டே... - 10 - மகி

valentines

புதிய வானம்.. புதிய பூமி..

எங்கும் பனிமலை பொழிகிறது..

நான் வருகையிலே..

என்னை வரவேற்க.. வண்ண பூ மலை பொழிகிறது..

ஹாஹா.. ஹ்ஹாஹா.. ஹாஹா..

ஊட்டியின் அழகை எவ்வளவு வர்ணித்தாலும்.. தீராது..

பார்க்க.. பார்க்க.. திகட்டாத அழகு..

இன்னும்.. இன்னும்.. பார்க்க தவிக்கும் விழிகள்..

கையில் அள்ள துடிக்கும்.. வண்ண.. வண்ண.. மலர்கள்..

தேடி.. தேடி.. அனுபவிக்கும் குளிர்காற்றும்..

அனைத்தும் அவளை சிலிக்க வைத்தது..

புது இடம் என்பதால் ஆகா,அபிக்கு முன்னவே மனு எழுந்துவிட்டாள்.. இருவரின் தூக்கத்தும் கலைக்காமல் எழுந்து.. அவளின் அறைக்கு சென்று.. குளித்து இவர்களை பார்க்க வந்தாள்..

இருவரும்.. நல்லா தூங்கிட்டு இருந்தாங்க..

ஆகா.. எழுந்திருடா..

அவன் அசைந்த பாடில்லை.. பின் அபியிடம் வந்தவள்.. குனிந்து.. அவனை எழுப்பினாள்..

ஜித்து.. ஜித்து.. எழுந்துக்கோ..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

இவளின் குரல் கேக்கவும்.. அவன் கையை நீட்டி நெழியும் போது.. இவளின் முட்டியில் பட்டு தடுமாறி அவன் மேலேயே விழுந்தவள்.. பிடிக்க எதுவும் இல்லாது போகவே அவன் கண்ணத்தில் தன் இதழ் கொண்டு நின்றாள்..

அதிர்ச்சியில் இருவரும் இருக்க.. பெண்ணவளுக்கு ஏற்பட்ட வெட்கத்தினாள்.. வெளியே ஓடிவிட்டாள்..

அபியின் நிலையை சொல்லனுமா என்ன.. காலையில்லையே.. நடந்த நிகழ்வு.. அவனுள் கூறமுடியாத இன்பஅவஸ்தியாக இருந்தது.. தன்னுள் சிரித்துக்கொண்டே குளியல் அறைக்கு சென்றான் உற்சாகமாக..

பெண்ணவளோ.. ஐய்யோ.. இப்படி நடந்திருச்சே.. ஜித்து எதாவது நினைச்சுகுவான்னா.. என்ன மனு.. இப்படி பன்னீட்ட.. என தன்னை பாத்தே கண்ணாடியில் பேசியவள்.. சிறிது நேரம் கழித்து கீழே சென்றாள்..

என்ன தான் மணி 8.00 ஆகியிருச்சுன்னு கடிகாரம் காட்டினாலும்.. மேல் எழும்பாத சூரியன்.. பனியிரங்காத மலர்கள்.. என ஒவ்வொன்ரையும் பார்க்க பார்க்க திகட்டவில்லை மனுவுக்கு.. ஒவ்வோரு மலர்களையும்.. செடிகளையும் கொஞ்சிக்கொண்டு இருந்தவளின் அருகில் பே.... என கத்தியத்தில் மனு பயத்தில் குழுங்கி விழுந்தாள்..

அம்மூ நான் தான்.. என கூறி.. இரண்டு அடிகளை பெற்றுக்கொண்டான் ஆகாஷ்..

எரும, மாடு, குரங்கு.. நான் பயந்துட்டேன்டா..

ஹாஹா.. அதானே வேணும்.. அப்பரம் என்ன ஓட்டவாய்.. இன்னைக்கு என்ன சூரியன் மேற்க உதிச்சிருச்சா..

ஓய் என்ன கொழுப்பா..

இல்லடா.. நீ சீக்கரமா எழுந்துட்டியே அதான் கேட்டேன்..

பக்கி.. என அவனை திட்டியவள்.. உடன் இருந்த அபியை பார்த்ததும்.. காலை நிகழ்வு ஞாபகம் வர கூச்சத்தில் நெழிய ஆரம்பித்தாள்..

என்ன ஓட்டவாய்.. என்ன திட்ட வந்த இப்போ என்ன ஆச்சு.. என ஆகாஷ் அவளை வம்பிலுத்தும்..

அவள் அமைதியாகவே இருந்தாள்.. அவளின் நிலை உணர்ந்த அபியும்.. போதும் விடு ஆகாஷ்.. காபி வாங்கிட்டு வா.. கர்னிக்கு குளுருது போடா..

ஏன் அம்மூ.. நீ சொன்னா கேக்கவேமாட்டே.. இரு நான் காபி வாங்கிட்டுவரேன்டா.. அவன் சென்றவுடன்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சாகம்பரியின் "யானும் நீயும் எவ்வழி அறிதும் " - காதல் கலந்த Sci-fi தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

சிறுமென்னகையுடன்.. அவளுக்கு சால்வையை போர்த்திவிட்டு.. என்ன பார்த்ததும்.. நீ தயங்க வேண்டிய அவசியம் இல்ல கர்னிம்மா.. காலையில்ல நடந்தது.. ரெண்டுபேரும் எதிர்பாக்காம நடந்தது.. அதையே நினைக்கனும்ன்னு இல்ல.. என்ன புரியுதா.. இப்படி அமைதியான கர்னி நல்லாயில்ல.. எப்பவும் கலகலன்னு இருக்கர கர்னி தான் வேணும்.. சரியா..

ம்.. சரி..

கேக்கணும்ன்னு நினைச்சேன்.. இனி நீ ரேடியோ ஸ்டேசனுக்கே போகமாட்டியா..

மாட்டேன்.. அவ்வளவு நேரமும் காலை நினைவின் வெட்கத்தில் இருந்தவள்.. அபி கூறியதை கேட்டவுடன் முகம் மாறிவிட்டது மனுவுக்கு..

அவங்களே வந்து கூப்பிட்டாலும் கூட போகமாட்டியா.. என கேட்டவனுக்கு.. அவளிடம் இருந்து மௌனம் மட்டுமே பதிலாக வந்தது.. காபி வாங்க சென்ற ஆகாஷ் வரவே.. அவனை பார்த்தான் அபி..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.