(Reading time: 16 - 32 minutes)

அபி.. மனு ஒன்னை வேண்டாம்ன்னு சொல்லீட்டா.. அதை அவ திரும்ப ஏத்துக்கமாட்டா.. யார் என்ன சொன்னாலும்.. அது எவ்வளவு முக்கியமானதா இருந்தாலும் ஏத்துக்கமாட்டா.. அவ வேண்டாம்ன்னு சொல்லரதை அடியோட ஒதுக்கீருவா..

அது..

வேண்டாம் அபி.. நாம அப்பரமா பேசாலாம் என அந்த பேச்சை அத்தோடு முடித்தான்..

அபியும் புரிந்தவன் போல அதை தொடராமல் விட்டான்..

அங்கு மூவரும் எதுவும் பேசாமல் காபி மட்டுமே அருந்தினர்.. அந்த அமைதியை கலைக்க..

இன்னைக்கு என்ன எல்லாம் பிளான்.. எப்படி பிளான் பன்னியிருக்கீங்க ரெண்டுபேரும்..

ஊட்டியின் ஸ்பெஷல் எல்லாமும் தான்.. என அவன் லிஸ்ட்டைவாசித்தவன்.. அவ்வளவு தான் கர்னி..

என்னப்பா.. எல்லாமும் ஒரே மாதிரி இருக்கும் போல..

கர்னிம்மா.. எல்லாமும் வித்தியாசம் இருக்குடா..

அப்போ வேர எங்கையும் போக போரதுயில்லா..

நான் சொன்னல்ல அபி.. நாம என்ன தான் பிளான் பன்னாலும்.. அம்மூக்கு திருப்தி இருக்காது..

ஓய்.. நான் எனக்கு தோணதை சொன்னேன்.. அவ்வளோ தான்ப்பா.. என பச்சைபிள்ளை போல முகத்தை வைத்துக்கொண்டு.. தலையை ஆட்டி அவள் கொஞ்சி பேசியவளை என்ன செய்ய முடியும்..

கர்னி.. இது எல்லாம் நாங்க எடுத்து வச்சுயிருக்கரது.. இது நீ சொன்னதையும் சேத்துக்கலாம்டா..

ஐய்.. நிஜமா.. ஜித்து.. என விழிவரித்து ஆர்பரித்தாள்..

சரி நம்ம பிளான் சொல்லரேன்.. அதுல சேஞ்சஸ் எல்லாம் பன்னிரலாம்.. எப்படியும் இன்னைக்கு பெரிசா எல்லாம் சுத்தமுடியாது.. அதனால இன்னைக்கு நாம எல்லாத்தையும் பிளான் பன்னீர்லாம்டா.. ஓகே ஜித்து..

அடுத்த ஒரு வாரத்திற்கும் தேவையான பிளானிங்கை செய்வதில் மூவரும் வெகு தீவிரமாக ஈடுபட்டனர்.. நேரம் போவதே தெரியாத அளவிற்கு அவர்கள் வேளையில் ஈடுபட்டனர்.. மதிய உணவிற்கான நேரம் வந்துருச்சுன்னு வயிறு பசியில்ல கத்துர வரைக்கும் அங்க யாருக்கும் நினைவுவரவில்லை..

ஆகா.. எதாவது வாங்கிட்டு வாடா.. பசிக்குது.. அவள் வயிற்றை தடவியவாறு கூறியதில் பாவமாக இருந்தது அவளை பார்க்க இருவருக்கும்..

இருடா எதாவது வாங்கிட்டுவரேன்.. என்ன ஆச்சுடா.. பசிக்குதுன்னு எல்லாம் கேக்கர.. மணி என்ன ஆச்சு.. பார்த்தவன்.. அச்சோ... அபி.. மணி மதியம் 2.30 ஆகுதுடா.. அம்மூ பசி தாங்கமாட்டா.. நான் எதாவது நமக்கு சாப்பிட வாங்கிட்டு வரேன்.. நேரமே தெரியல்ல.. இருங்க நான் வந்தரேன் என உள்ளே சென்றான்..

மெதுவா போ ஆகா.. எல்லாருக்கும் சாப்பாடு கொண்டு வா.. புன்னகைத்துக்கொண்டே அவள் திரும்பவும்.. அபியின் முகம் என்னவோ போல இருக்கவே..

என்ன ஆச்சு ஜித்து.. ஏன் ஒரு மாதிரி இருக்கர..

கர்னி.. உனக்கு ஆகாஷ் மட்டும் இருந்தா போதும் இல்ல.. அவன் கொஞ்சம் ஏற்ற இறக்கமாகவும்.. கோவமாக பேசுவது போல தோன்றவே..

என்ன ஆச்சு ஜித்து.. நீ என்ன சொல்லர..

உனக்கு என்ன தேவைன்னாலும்.. நீ ஆகாஷ்கிட்ட தான் சொல்லர.. மத்தவங்க யாரும் உன் கண்ணுக்கு தெரியரதுயில்ல.. 

(அட கடவுளே... இதானா.. அது ஒன்னும் இல்லைங்க.. நம்ம மனு எப்பவும், எல்லாத்துக்கும் ஆகாஷ் தான கூப்பரா.. நம்ம அபிய கண்டுக்கரது இல்லையாம.. அதை சொல்லிகாட்டறாங்கலாம்.. நம்ம அபிக்கும் பொறாமை வந்திருச்சுடோய்...)

மெல்ல மனுவுக்கு புரியவே.. எனக்கு இப்போ வரை அவன் தான் எல்லாத்தையும் பாத்துக்கரான் ஜித்து.. அதனால தான் எனக்கு முதல்ல ஆகா ஞாபகத்துக்குவரான்..

ஆனா.. மத்தவங்க இருக்கும் போதும் நீ அவனை மட்டும் தானே தேடர.. அதில் அவனை மட்டும் என்ற வார்த்தையை அபி அழுத்தி கூறவே மனுவுக்கு சிரிப்பே வந்தது..

ஜித்து.. என அவள் பேசுவதுக்குள்.. ஆகாஷ் வரவும்.. அவன் பேச்சை மாற்றினான்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

Chillzee Special "ஐ லவ் யூ" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

என்ன ஆகாஷ்.. சாப்பாட இங்கையே கொண்டுவந்துட்ட.. சரி.. மத்தவங்க எல்லாம் என்ன பன்னராங்க.. சாப்டாங்களா..

எல்லாரும்.. கொஞ்ச நேரத்துக்கு முன்ன தான் எழுந்து வந்து சாப்பிட்டு போனாங்களாம்.. பக்கத்துல்ல இருக்கர கார்டன்ல தான் இருக்காங்க.. நான் எல்லாரையும் சாந்திரம் டீ குடிக்கும் போது ஒன்னாகனும்ன்னு சொல்லீட்டு வந்திருக்கரேன்.. சரி வாங்க நாம சாப்பிடலாம்..

மூவரும் ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொண்டு உண்டு முடித்தனர்.. சாப்பிடும் போதும் அபி மனுவை தவிர்த்தான்.. அது மனுவுக்கு பிடித்து இருந்தது.. இனம் புரியாத இதமாக இருந்தது..

அம்மூ.. நீ போயி தூங்குடா.. எல்லாருமா ஈவ்வினிங் பார்க்கலாம்..

நீ எங்க போர..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.