(Reading time: 16 - 32 minutes)

ஆமாடா மச்சான்.. இங்க ஒரு மீட்டிங்டா.. ஏதோ பிராப்லம்மாம்.. வர சொல்லராங்க மச்சி.. நீ அம்மூ கூடவே இருடா.. அப்பரம் அவ சாப்பிடமாட்டேன்னு சொன்னா விட்டராத.. ஊட்டிவிட்டா சாப்பிடுவா.. கொஞ்சம் பாத்துக்கோ மச்சி.. அப்போ அப்போ கால் பன்னரேன்.. என அவசர அவசரமாக சொல்லீட்டு.. வந்த போனை பேசிக்கொண்டே பறந்தான்..

உணவை எடுத்துக்கொண்டு உள்ளே வந்தவன்.. மனுவை பார்த்தான்..

அவள் முகம் அடிபட்டவழி நன்றாக காட்டியது.. அவன் கவலையாக ரொம்ப வழிக்குதா கர்னிம்மா..

அவனுக்காக மென்மையாக புன்னகைத்தவள்.. ரொம்ப இல்ல.. கொஞ்சமா வழிக்குது ஜித்து..

சரி.. சாப்படலாம் வா..

இல்ல.. ஜித்து.. எனக்கு பசிக்கல்ல..

மெல்ல புன்னகைத்தவன்.. அவளின் அருகில் அமர்ந்து.. அவளுக்கு ஊட்டிவிட்டான்..

எதுக்கு நீ சிரிசன்னு சொல்லு நான் சாப்படரேன்..

நீ முதல்ல சாப்பிடு அப்போ தான் சொல்லுவேன்.. என ஊட்டினான்..

அவளும் ஊண்ணத்தொடங்கினாள்..

இப்போ சொல்லு.. நீ ஏன் சிரிச்ச..

எப்போ..

ஏய்.. என அவள் வாய் திறக்கும் போது.. அவளின் வாயில் உணவை திணித்தான்..

ஜித்து..

சாப்பிடு கர்னி..

நீ சொல்லு.. அப்போ தான் நான் சாப்பிடுவேன்.. இல்ல எனக்கு வேண்டாம்..

ஓய்.. உன்ன சமாளிக்கரது ரொம்ப கஷ்டம் கர்னி..

ஜித்து..

நீ முதல்ல சாப்பிடு.. அப்பரம் தான் பேசனும்..

நீ ரொம்ப ஸ்டிட்டா இருக்க ஜித்து..

அப்படி.. இப்படி.. போக்கு காட்டி சாப்பிட வைத்தான் அபி..

சரி இப்போ சொல்லு.. நீ ஏன் அப்போ சிரிச்ச...

அவளின் கையை மென்மையாக அவன் கைக்குள் கொண்டு வந்தவன்.. நான் ஆகாஷ் சொன்னத நினைச்சு சிரிச்சேன்..

உன்ன பத்தி அவனுக்கு எல்லாம் தெரிஞ்சு இருக்கு கர்னிம்மா.. உனக்கு ஒன்னுனா.. அவனால தாங்கமுடியாது.. இப்போ வரைக்கும் அவன் உன்னை தன்னோட அம்மாவா தான் கர்னி பார்க்கரான்.. எனக்கு உங்க உறவு ரொம்ப புதுசா இருக்கு.. ரொம்ப பிடிச்சும் இருக்கு.. இப்படி ஒரு உறவு என் வாழ்க்கைக்கும் வேணும்ன்னு தோணுது..

என்ன..  ஆச்சர்யாமாக மனு கேட்கவும்..

அது.. உங்க உறவை பார்த்தா.. கொஞ்சம்.. கொஞ்சமே கொஞ்சம்.. பொறாமை வருதுடாம்மா..

ஜித்து.. இத்தனை வருத்துல நான்.. யாரும் இப்படி பேசி பாத்தது இல்லடா..

எல்லாரும் அபி ஆகிரமுடியுமா.. என கண்சிமிட்டினான்..

ஏய்.. சிறிது நேரம் கலகலப்பாக பேசியவர்கள்.. போதும்.. கர்னிம்மா.. நீ தூங்குடாம்மா..

ம்.. என திருதிரு என முழித்தவளை பார்த்தவனுக்கு.. பாவமாகவும், கொஞ்ச வேண்டும் போலவும் இருந்தது..

மனுவின் முகத்தை கையில் ஏந்தியவன்.. மச்சான் கொஞ்சம் வேளையா இருக்காடாம்மா.. உனக்கு என்ன வேணும்ன்னாலும் என்ன கேளு.. சரியா..

ஹம்..

தூங்குடா..

கொஞ்ச நேரம் கழிச்சு தூங்கவா ஜித்து..

சரி.. கொஞ்ச நேரம் தான்.. அப்பரம் தூங்கனும்..

ஹம்..

கொஞ்சம் வெளி வேளை இருக்குடா.. நான் போகவா..

ஹம்..

பாத்து இருந்துக்குவ தானே..

அய்யோ ஜித்து நான் ஒன்னும் குழந்தையில்ல.. நான் பாத்துகரேன்..

எதோ சொல்லர.. பாத்து இருந்துக்கடாம்மா.. கர்னி செல்லம் தானே..

சரி.. நீ ஆகா கிட்டையும் சொல்லீரு..

சரிடா.. நான் பாத்துகரேன்.. நீ..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிரேமா சுப்பையாவின் "உன்னில் தொலைந்தவன் நானடி..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

மறுபடியுமா..

சரிடி.. பாத்து இருந்துக்க.. நான் கிளம்பரேன்.. என விடைபெற்று சென்றான்..

கொஞ்ச நேரம் படுத்து இருந்தவளுக்கு அதற்கு மேலும் முடியாமல் எழுந்து அமர்ந்தாள்.. என்ன பன்னலாம்.. சரி.. வீட்டுக்கு பேசலாம்.. நினைத்தவள் போன் பன்னினாள்..

மனுகுட்டி..

ஐஐய்.. மிஸ்டர்.கேகே எப்படி இருக்கீங்க.. என்ன பன்னறீங்க..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.