(Reading time: 20 - 40 minutes)

“டேய் மகி இங்க என்னடா பண்ற.. உன்னை பெரியப்பா தேடிட்டு இருந்தாரு..” என்றப்படி அறிவும் அவன் அருகில் அமர்ந்தான்.

“எதுக்குடா..”

“அதான் கதிர் மாமாவுக்கு ஒன்னும் பயப்பட்ற மாதிரி இல்லன்னு சொல்லிட்டாங்கல்ல.. அதான் எல்லோரும் இங்க இருக்க வேண்டாம், வீட்டுக்கு போகலாம்னு பெரியப்பா சொன்னாரு..

எழில் அத்தையும் சுடரும் இங்க தான் இருக்கப் போறாங்க.. கூட யாராவது ஆண் துணை இருந்தா நல்லா இருக்கும் இல்லையா? நான் இருக்கேன்னு சொன்னேன்.. அமுதனும் இருக்கேன்னு சொன்னான்.. ஆனா பெரியப்பா நீ இங்க இருக்கணும்னு நினைக்கிறார் போல..”

“இல்லடா நான் வீட்டுக்குப் போறேன்.. நீயே இங்க இருந்து பார்த்துக்கோ.. நான் காலையில் வரேன்..”

“என்னடா சொல்ற.. நீ இங்க இருந்தா தான் சுடரும் கொஞ்சம் பெட்டரா ஃபீல் பண்ணுவா..” என்று அறிவு சொன்னதற்கு,

“ம்ப்ச்..” என்று மகி சலித்துக் கொண்டான்.

“என்னடா என்ன ஆச்சு.. சுடருக்கும் உனக்கும் ஏதாவது பிரச்சனையா? இப்போ எதுக்கு சலிச்சிக்குற, இங்க வந்து உட்கார்ந்திருக்க.. என்னடா நடந்துச்சு..”

“ஏதாவது தெரிஞ்சா தானே டா சொல்றதுக்கு.. என்னன்னு தெரியாம என்னத்த சொல்றது.. நான் என்ன செஞ்சேன்னு எனக்கே தெரியல டா..

அருள் நிச்சயதார்த்தத்தில் இருந்தே சுடர் என்கிட்ட பேசறது இல்ல.. முதலில் கோபமா இருக்கான்னு நினைச்சேன்.. ஆனா அவ என்னை வெறுத்துட்டாலோன்னு தோனுது.. அந்த அளவுக்கு நான் என்ன செஞ்சேன்னு தெரியல..

அவளோட அப்பாக்கு உடம்பு சரியில்லை.. அவளுக்கு ஆறுதல் சொல்லலாம்னா.. வந்ததுல இருந்து என்னோட முகத்தை கூட அவ பார்க்கல.. பக்கத்துல போய் உட்காரலாம்னா அவக்கூட எழில் அத்தையும் ஆனந்தி ஆன்ட்டியும் உட்கார்ந்திருக்காங்க.. ஒரு சின்ன விஷயத்தை கூட என்னோட ஷேர் செஞ்சுக்க நினைப்பா.. ஆனா மனசுல இவ்வளவு வருத்தம் இருந்தும், என்னோட கைப்பிடிச்சு ஆறுதல் தேடிக்க கூட அவ நினைக்கல அறிவு.. அந்த அளவுக்கு நான் என்ன செஞ்சேன்னு தெரியல..”

“இது ஒரு விஷயமா மகி.. சுத்தி எல்லாம் இருக்காங்க.. அவங்க முன்ன உன்கிட்ட வந்து ஆறுதல் தேடிக்கிறது அவளுக்கு ஒரு மாதிரி இருக்கலாம் இல்லையா?”

“அதுல என்னடா தப்பு இருக்கு.. நான் அவ புருஷன் தானே, ஆனா அதை அவ உணர்ந்தாளான்னு தான் தெரியல.. நீ சொல்றதெல்லாம் காரணம் இல்லடா.. அவ எதுக்கோ என்னை அவாய்ட் பண்ற மாதிரியே இருக்கு.. நாங்க ஒரே வீட்ல இருந்தாலாவது அவளோட பிரச்சனை என்னன்னு தெரிஞ்சிக்கலாம்.. ஆனா மறுபடியும் கல்யாணம் நடக்கணும்னு சொல்லி இப்படி அவளை என்கிட்ட இருந்து பிரிச்சிட்டாங்க.. இப்போ என்னை விட்டு மொத்தமா விலகிடுவாளோன்னு பயமா இருக்குடா..”

“அப்படில்லாம் இல்லடா.. ஏன் இப்படி யோசிக்கிற.. நாங்கல்லாம் எதுக்கு இருக்கோம்.. இப்படியெல்லாம் நடக்க விட்ருவோமா.. அப்படியே சுடருக்கு உன் மேல கோபம்னா பேசி சரி பண்ணிக்கலாம்.. இதோ கண்ணை மூடி திறக்கறதுக்குள்ள அருள் கல்யாணம் வந்துடும்.. அடுத்து உடனே உன்னோட கல்யாணத்தை பத்தி பேசச் சொல்லி நானே பெரியம்மாக்கிட்ட பேசறேன்.. இப்போ நீ வா..” என்று அறிவு அவனை இழுத்துச் செல்ல, மகியை தேடி போன அறிவையும் காணவில்லை என்று பார்க்க வந்த புகழேந்தி அனைத்தையும் கேட்டார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பத்மினியின் "உன்னை விட மாட்டேன் என்னுயிரே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

இதோ கதிரவன் மருத்துவமனையில் நல்லப்படியாக குணமாகி வீட்டுக்கு வந்தும் ஒரு வாரம் ஓடிவிட்டிருந்தது. இத்தனை நாளும் அவரை கண்ணும் கருத்துமாக சுடரொளி தான் கவனித்துக் கொண்டாள்.

அவருக்கு என்ன தேவை என்பதை அவள் பார்த்து பார்த்து செய்தாள். இப்படி தந்தை அருகிலேயே இருக்க மாட்டோமா என்று நினைத்து ஏங்கியவளுக்கு அவரை கவனிக்கும் சந்தர்ப்பத்தை விட்டுக் கொடுக்க முடியவில்லை. கதிரவனுமே மகளை அருகிலேயே வைத்துக் கொள்ள நினைத்தார். அனைத்துக்குமே அவளையே அழைத்தார். நீண்ட நாட்கள் கழித்து தந்தை மகள் சேர்ந்திருப்பதால், இந்த செயல்களை எழிலரசியுமே பொறாமை கண்ணோடு காணாமல், அனைத்தையும் சுடரே பார்த்துக் கொள்ளட்டும் என்று ஒதுங்கியே இருந்தாள்.

அன்றும் வரவேற்பறையில் அமர்ந்து தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்த கதிரவன், பக்கத்திலேயே சமையலறையில் இருந்த எழிலை விடுத்து, அவளது அறையில் இருந்த சுடரை கூப்பிட்டு, “சுடர் கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வாம்மா..” என்று குரல் கொடுத்தார்.

அவர் கேட்டதை காதில் வாங்கிய எழில் தண்ணீரை தயாராக எடுத்து வைக்கவும், சுடர் வந்ததும் அதை அவள் கையில் கொடுத்தாள். ஒரு சங்கடத்தோடு அதை அவள் கையில் இருந்து வாங்கி வந்து தந்தைக்கு பருக கொடுத்தவள்,

“சித்தி இங்கேயே இருக்காங்க.. ஆனா ரூம்ல இருக்க என்கிட்ட தண்ணி கேட்டு குரல் கொடுக்கிறீங்க ப்பா.. எனக்கு உங்களுக்காக இதெல்லாம் செய்றதுல சந்தோஷம் தான்ப்பா.. ஆனா சித்தி எப்படி ஃபீல் பண்ணுவாங்கன்னு யோசிச்சுப் பார்த்தீங்களா ப்பா..” என்று கேட்க,

“அவளை எனக்கு தெரியாதா.. இதெல்லாம் தப்பா எடுத்துக்க மாட்டாம்மா..”

“இருந்தாலும் அவங்களுக்கு தான் ப்பா உங்கக்கிட்ட அதிக உரிமை இருக்கு.. ஆனா அந்த உரிமையை நான் தட்டி பறிச்சிக்கிறேனோன்னு இருக்கு.. இதை அவங்க தப்பா எடுத்துக்கிட்டா என்ன செய்றது..” என்று சொல்லும் போதே,

“இதுதான் நீ என்னை புரிஞ்சிக்கிட்டதா சுடர்..” என்று கேட்டப்படி எழில் அங்கு வந்து அமர்ந்தாள்.

“இல்ல சித்தி அது வந்து..” என்று தயக்கத்தோடு கூற,

“இத்தனை வருஷமா அப்பாவும் பொண்ணும் பிரிஞ்சிருந்தீங்க.. உன்னை நினைச்சு கவலைப்பட்டு தான் அவருக்கு இப்படி ஆகிடுச்சு.. அதனால நீயே அவரை கூட இருந்து கவனிச்சிக்கிட்டா தான் அவரோட மனசுக்கும் நிம்மதியா இருக்கும்னு தோனுச்சு.. அதான் நான் ஒதுங்கியிருந்தேன்..

எனக்கு உங்கப்பாவை பத்தி தெரியாதா.. எதுக்குமே எழில் எழில்னு என்னை தான் கூப்பிட்டுக்கிட்டு இருப்பாரு.. ஆனா இப்போ என்னவோ உன்னை கூடவே வச்சிருக்கணும்னு அவர் நினைக்கிறது எனக்கு தெரியாதா?” என்று எழில் விளக்கம் சொல்லவும்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.