(Reading time: 20 - 40 minutes)

வந்த வேலையாக முதலில் தாம்பூலத்தோடு சேர்த்து பத்திரிக்கையை வைத்து இருவரும் கதிர், எழிலிடம் பத்திரிக்கையை கொடுக்கவும், அவர்களும் வாங்கிக் கொண்டார்கள்.

“கல்யாண வேலை நிறைய இருக்க இந்த சமயத்தில் நான் இப்படி உடம்பு முடியாம படுத்துக்கிட்டேனே சார்..” என்று கதிர் சொல்ல,

“அதனால என்ன கதிர்.. அதான் மகி, அறிவு, மாணிக்கம் எல்லாம் இருக்காங்கள்ள.. அவங்க எல்லாம் பார்த்துக்கிறாங்க.. கூட அமுதன் தம்பியும் எல்லாம் பார்த்துகிறார். கல்யாணத்துக்கான நிறைத வேலையை அதுக்கான ஆளைப் பார்த்து தம்பி ஒப்படைச்சிடுச்சு.. அதனால் பெருசா ஒன்னும் வேலையில்லை.. நீங்க அதனால பெருசா கவலைப்பட தேவையில்லை..” என்றவர்,

“இன்னொரு முக்கியமான விஷயம் நம்ம மகி, சுடர் கல்யாணத்தை பத்தி தான் பேச வந்தோம்.. நீங்களும் அதைப்பத்தி தானே பேசிக்கிட்டு இருந்தீங்க.. ஆரம்பத்துல அருளுக்கு நல்லப்படியா கல்யாணம் நடக்கணுமேன்னு தான் சுடரை வீட்டுக்கு வர வேண்டாம்னு சொல்லிட்டேன்.. எப்படியோ அது உங்களுக்கு சங்கடத்தை தான் கொடுத்திருக்கும்.. அதுக்கு முதலில் என்னை மன்னிக்கணும் கதிர்..

இப்போத்தான் அருள் கல்யாணம் நல்லப்படியாகவே நடக்க போகுதே.. அதனால இவங்க கல்யாணத்தை பத்தியும் பேசி முடிவு செஞ்சுடலாம்.. முதலில் ஒரே முகூர்த்ததிலேயே ரெண்டு கல்யாணத்தையும் நடத்திடலாமான்னு நினைச்சேன்.. ஆனா அப்படி செய்யக் கூடாது.. ரெண்டு கல்யாணம் ஒரே மேடையில் நடந்தா அதுல ஒரு தம்பதிங்க தான் நல்லா வாழ்வாங்க.. இன்னொரு தம்பதிங்க கஷ்டப்படுவாங்கன்னு அம்மா அடிக்கடி சொல்வாங்க..

அதனால அருள் கல்யாணம் முடிஞ்சதும் அடுத்து வர முகூர்த்ததுல இவங்க கல்யாணத்தையும் முடிச்சிடுவோம்.. மண்டபம் கிடைக்கலன்னாலும் பரவாயில்ல.. கோவில் கூட கல்யாணம் வச்சுக்கலாம்.. நீங்க ரெண்டுபேரும் என்ன சொல்றீங்க.. சரின்னா அந்த வேலையும் உடனே ஆரம்பிக்கலாம்..” என்று அவர் சொல்லி முடிக்க,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "கலாபக் காதலா..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“நாங்க இதுக்கு வேணாம்னா சொல்லப் போறோம் சார்.. ரொம்ப சந்தோஷமா வேலையை ஆரம்பிப்போம்..” என்று கதிரும் கூறினார்.

ஆனால், “அப்பா எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் ப்பா..” என்று சொல்லி சுடரொளி அவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தாள்.

“என்ன சொல்ற சுடர்..” என்று எழில் அதிர்ச்சியோடு கேட்க,

“ஆமாம் சித்தி நான் இந்த குடும்பத்தோட பொருந்தி வாழ்வேனான்னு எனக்கே தெரியல.. நான் அவங்க வீட்டுக்கு மருமகளாக போக என்ன தகுதியிருக்கு.. மகிழ் என்னோட கழுத்தில் தாலி கட்டியதாலும், நான் கதிரவனோட பொண்ணுங்கிறதுக்காகவும் பார்க்க வேண்டாம்.. மகிழ்க்கு வேற ஒரு நல்ல பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணுங்க..” என்று சர்வ சாதாரணமாக கூறினாள்.

“என்னம்மா சுடர் இப்படி பேசற.. நீ அருள் விஷயத்தில் செஞ்சதுல உன் மேல எங்களுக்கு கோபம் தான்.. ஆனா அதுக்காக நீ எங்க வீட்டுக்கு மருமகளா வரக் கூடாதுன்னு நினைப்போமா.. அப்போ கோபமா நாங்க எது பேசியிருந்தாலும் மனசுல வச்சிக்காதம்மா..” என்று பூங்கொடி சொல்ல,

“நான் எதுவுமே மனசுல வச்சிக்கல அத்தை.. ஆனா நான் இந்த முடிவை நல்லா யோசுச்சு தான் எடுத்தேன்.. நான் உங்க வீட்டுக்கு மருமகளா இருக்க தகுதியில்லாதவ தான் அத்தை..” என்றாள்.

“நீ மகி கூட ஒரே வீட்ல கொஞ்ச நாள் குடும்பம் நடத்திருக்க.. இப்படி பேசினா என்ன அர்த்தம்?” எழில் கோபமாக கேட்க,

“நாங்க ஜஸ்ட் வீட்டை ஷேர் மட்டும் தான் செஞ்சிக்கிட்டோம்னு உங்களுக்கே தெரியும்..”

“ஆனா ஊர் அப்படி சொல்லுமா..”

“ஊர் எப்படியாச்சும் சொல்லிட்டு போகட்டும்.. இதையெல்லாம் சரியா புரிஞ்சிக்கிட்டு மகிழை பார்த்துக்கும் நல்ல பொண்ணா அவனுக்கு கல்யாணம் செஞ்சு வைங்க.. எனக்கு அதுக்காக கூட மெனக்கிட வேண்டாம்.. ஏன்னா நான் வேற கல்யாணமெல்லாம் செய்ய மாட்டேன்.. இப்படியே இருந்துடுவேன்.. நீங்க மேற்கொண்டு வற்புறுத்தினா நான் லண்டனுக்கே போயிடுவேன்..” என்று கிட்டத்தட்ட மிரட்டி சென்றாள்.

“என்ன இவ இப்படி பேசறா எழில்.. ஆரம்பத்திலேயே நான் இதை சரி செஞ்சுருக்கணுமோ..” என்று கதிர் வருத்தமாக பேச,

“சுடர் ஏதோ கோபமா இருக்கான்னு மகி ஹாஸ்பிட்டலில் பேசினதை கேட்டு தான் நானே சீக்கிரம் அவங்க கல்யாணத்தை முடிச்சிட நினைச்சேன்.. நாம எல்லோருமா சேர்ந்து சுடரை ரொம்ப கஷ்டப்படுத்திட்டோம் போல.. பேசாம அவங்க முன்ன இருந்தது போல ஒன்னாவே இருக்கலாம்னு விட்ருக்கலாமோ..” என்று புகழேந்தியும் வருத்தமாக பேச,

“நீங்கல்லாம் எதுக்கு இப்படி வருத்தப்பட்றீங்க.. என்னங்க எழில் இப்போ நம்ம பொண்ணு மட்டும் இல்லங்க.. அவ மகியோட பொண்டாட்டி.. இவ இப்படி பேசினா  அப்படியே அவன் சும்மா விட்ருவானா.. மகி சுடரை எப்படியோ சரிப் பண்ணிடுவான்..” என்று எழில் சாமாதான வார்த்தைகள் கூற,

“எழில் சொல்றது சரிதாங்க.. மகி எல்லாம் பார்த்துப்பான் விடுங்க..” என்று பூங்கொடியும் கூறினார்.

இப்படி சொல்ற சுடரை என்ன செஞ்சு மகி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைப்பான்னு அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.. அடுத்த அத்தியாயத்தோடு கதை நிறைவு பெறும்..  அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழமைகளே.. நன்றி.

உறவு வளரும்...

Episode # 54

Episode # 56

Go to Nenchodu kalanthidu uravale story main page

{kunena_discuss:1155}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.