(Reading time: 21 - 41 minutes)

“ஹா ஹாஹா தேங்க் யூ..அதனால தான் நம்ம பொழப்பு ஓடுது ஜீ..இல்லனா இவங்க எழுதுற கிசுகிசுக்கு இன்டஸ்ட்ரீயை விட்டே காணாம போய்ருவேன்..”

“உண்மைதான்..நீங்க மலையாளி இல்லையா?ஆனா தமிழ் ரொம்ப நல்லா பேசுறீங்க..”

“வாழ வைக்குற ஊர் ஆச்சே சோ நல்லாவே கத்துக்கிட்டேன்.பட் ஒன்லி பேசமட்டும் தான் எழுத படிக்கத் தெரியாது..”

“இதுவே பெரிய விஷயம்ங்க இப்போ எல்லாம் தமிழ் தெரிஞ்சாலும் இங்கிலீஷ்ல பேசுறது தான் பேஷன்.”

“நிறைய அனுபவமோ??”

“என்னையே மாட்டி விடுறீங்களே..நான் ஜெனரலா சொன்னேன்.”

“ஹா ஹா நானும் சும்மா தான் சொன்னேன்.ஆனா ஒண்ணு ஜீ பத்திரிக்கைல உங்களைப் பத்தி படிச்துக்கும் இப்போ நேர்ல பாக்குறதுக்கும் அவ்ளோ வித்தியாசம் இருக்கு..ரொம்ப கேஷுவலா பழகுறீங்க..”

இதற்கு புன்னகையை மட்டுமே அவன் பதிலாய் கொடுக்க அதற்குள் ஷாட்க்காக இருவரையும் டேரக்டர் அழைத்திருந்தார்.

நாட்கள் அதன்போக்கில் நகர்ந்து கொண்டிருந்தது.அவ்வப்போது  மெசெஜ் பரிமாற்றங்களோடு சரி..மூவருமே ஒவ்வொரு விதத்தில் பிசியாகி விட ஒருவர் காலையில் அனுப்பும் மெசெஜிற்கு பதில் மற்றவரிடமிருந்து இரவு வரும்.

இதற்கிடையில் ஜீவிகாவின் திருமண நாளும் வந்தது.ஈவ்னிங் ரிசெப்ஷனுக்குத் தயாராகிக் கொண்டிருந்தவளை எல்லாருமாக சேர்ந்து ஒரு வழியாக்கிக் கொண்டிருந்தனர்.

“எல்லாருமே சேர்ந்து என் மூஞ்சியவே மாத்திருவீங்க போலயே கடைசில மாப்பிள்ளை நா பாத்த பொண்ணு இது இல்லனு சொல்லிட்டு ஓட போறாரு..என் வாழ்க்கையில விளையாடணும்னு எத்தனை நாள் ஆசை உங்களுக்கெல்லாம்..”

“அய்யய்யே தொண தொணனு பேசாம கொஞ்ச நேரம் உக்காரு..பையன் ரொம்ப பாவம் எப்படி தான் உன்னை சமாளிக்க போறாரோ..”

“அது அவரு பிரச்சனை நீங்க ஏன் கவல படுறீங்க?”

“அடிப்பாவி இப்போவே இப்படியா..ம்ம் ம்ம் நடக்கட்டும்.”

மணமக்கள் மேடையிரும் முன் புகைப்படம் எடுப்பதற்காக இருவரையும் அழைத்துச் சென்று நிற்க வைக்க அவனைப் பார்ர்த்தவளின் முகத்தில் லேசாய் புன்னகை தோன்ற அவனுமே புன்னகைத்திருந்தான்.

திருமணம் வரை வந்துவிட்ட போதும் ஒருவரை பற்றி ஒருவருக்கு எந்தவித அறிமுகமும் இல்லாமல் இருக்க சற்றே படபடப்பாய் உணர்ந்தாள் ஜீவிகா.இதில் போட்டாக்ராபர் வேறு இப்படி அப்படி என அவளை நிற்கச் சொல்ல கூச்சத்தில் தடுமாறினாள்.

ஜெயந்த் எதையும் வெளிக்காட்டாதவாறு அவர்கள் கூறுவதை செய்து கொண்டிருந்தான்.அவ்வப்போது அவளின் முகத்திலிருந்து எதையும் கண்டுபிடிக்க முடிகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா வெயின் "நெஞ்சோடு கலந்திடு உறவாலே..." - காதல் கலந்த குடும்பத் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

ஒரு வழியாய் ரிசெப்ஷன் முடிந்து தனதறைக்குள் செல்ல அப்பாடா என்றிருந்தது ஜீவிகாவிற்கு.மாலை முழுதும் தன் அன்னையை தான் கவனித்துக் கொண்டிருந்தாள் ஓடி ஓடி வந்தவர்களை கவனித்துக் கொண்டிருந்தார்.

அதை நினைத்தவளுக்கு நாளையோடு அவரை விட்டு பிரிய போகிறோம் என்பது நினைவிற்கு வர கண்கள் அதுவாய் கலங்கியது.போனை எடுத்தவள் தனக்கு வந்த மெசேஜ்களை பார்க்க ஆரம்பித்தாள்.

ரேஷ்வாவும் ஆத்வியும் வாழ்த்துக்கள் அனுப்பியிருந்தனர்.ஆத்வி காலையிலேயே வந்துவிடுவதாய் கூறியிருந்தான்.

“மனசே சரி இல்ல பேசாம மண்டபத்துல இருந்து ஓடிரலாம்னு இருக்கேன்”,இப்படியாய் மெசெஜ் அனுப்பிவிட்டு அமர்ந்தவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

அதற்குள் அவள் மொபைலில் அழைப்பு வர ஆத்விக் தான் அழைத்திருந்தான்.

“ஹலோ”

“ஏய் பைத்தியம் என்னடி ஆச்சு?”

“ஜீ ஆர் யு ஓகே?”

“ரேஷ் நீங்களுமா..ஷீட் இல்லையா?”

“ம்ம் இப்போ ரொம்ப அவசியம் நீ சொல்லு என்னாச்சு?”

“எனக்கு இந்த கல்யாணம் வேணாம் நா அம்மாவோடயே இருந்துக்குறேன்..அம்மா தனியா இருப்பாங்கள்ல!”

“லூசு..அதுக்காக வாழ்க்கை பூரா கல்யாணம் பண்ணாம இருந்து அவங்க உயிரை வாங்குவியா?”

“என் கல்யாணம் நா தான முடிவு பண்ணணும்?”

“ஜி நானே எதாவது திட்டிருவேன்.சின்ன பிள்ளை மாதிரி பேசிட்டு இருக்க!”

“என்ன ரேஷ் நீங்களும் அவனை மாதிரியே திட்டுறீங்க?”

“பின்ன என்ன ஜீ..இப்போ நீ கல்யாணத்தை நிறுத்தினா மட்டும் உங்கம்மா உன்னை வீட்டுல சேர்த்துப்பாங்களா?”

“ஐயோ ஆமால..”

“ஆமாவா இல்லையா ஜீ?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.