(Reading time: 21 - 41 minutes)

“டேய் உன்னை கொல்ல போறேன் ஓடிப் போய்ரு..”

“ஜீ!!”

“சரி சரி டென்ஷன் ஆகாதீங்க அப்படியெல்லாம் ஒண்ணும் பண்ண மாட்டேன்.சும்மா அழுகையா வந்துது அதான் உங்ககிட்ட பேசலாமேனு மெசெஜ் பண்ணேன்.சும்மா சொல்லக் கூடாது ரெண்டு பேரும் பாசக்கார பசங்களா தான் இருக்கீங்க!”

“அடிப்பாவி நடுரோட்ல காரை நிறுத்தி பேசிட்டு இருக்கேன்.உன்னை பத்தி எனக்குத் தெரியும் டீ ஆனா  ரேஷ் தான் பயந்து போய் கால் பண்ணுனு என்னை உயிரை வாங்கிட்டார்.ரேஷ் நா தான் சொன்னனே இவ எல்லாம் உஷார் பார்ட்டினு”

“ஜீ..இதை சொல்லக் கூடாது ஆனாலும் சொல்லாம இருக்க முடில நீ நிஜமாவே லூசுதான்..”

“ரேஷ்!!”

“பின்ன என்ன எதெதுல விளையாடுறதுனு இல்லையா நிஜமாவே பயந்துட்டேன்.”

“ஹா ஹா பட் நிஜமாவே அம்மாவ மிஸ் பண்றேன் ரேஷ்..ஆனா என் சூப்பர் மார்கெட்டை பார்த்தா கொஞ்சம் இல்ல நிறையவே நல்லவனா தான் தெரியுது..”

“திமிரு டீ உனக்கு புருஷனுக்கு கொஞ்சமவது மரியாதை குடுக்குறியா?”

“டேய் என் ஆள நா எப்படி வேணா கூப்டுவேன்,..நீ போய் உன் ஷான்யாவை கொஞ்சிக்கோ..”

“எல்லாம் எங்க நேரம் ரேஷ் போய் வேலையை பாருங்க இவளையெல்லாம் என்ன பண்ணலாம்..கல்யாணம் முடியட்டும் மகளே உனக்கு இருக்கு.”,என்றபடி இருவரும் மீண்டும் வாழ்த்து கூறி அழைப்பைத் துண்டித்தனர்.

மறுநாள் முகூர்த்தத்திற்கு முன்பாகவே தாய் தந்தையோடு வந்து முதல் வரிசையில் அமர்ந்திருந்தான் ஆத்விக்.கல்லூரி நண்பன் என்ற முறையில் அவனையும் அவன் பெற்றோரையும் தெரியும் என்பதால் மஞ்சுளா அருகே சென்று நலம் விசாரித்து வரவேற்றார்.

மேடையிலிருந்து கண்சிமிட்டி லேசாய் கையசைத்தவளைப் பார்த்தவர்களுக்கு முகம் மலர்ந்து போனது.

“ஆத்வி நம்ம குட்டி ரொம்ப அழகா இருக்கா இல்ல டா?”

“ம்மா அவ முன்னாடி சொல்லிராத கையில பிடிக்க முடியாது அப்பறம்.”

“ஆனா ஆத்வி நல்ல பொண்ணு டா..சின்ன வயசுலயே எத்தனை பொறுப்பு பக்குவம் இல்ல.அவ நல்ல மனசுக்கு நல்லா இருப்பா”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "சிவகங்காவதி..." - காதல் கலந்த சரித்திரக் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“உண்மை தான் ப்பா..அவளால எல்லார்கிட்டேயும் அன்பு மட்டும் தான் காட்ட முடியும்.ரேஷ் கூட இவளை மீட் பண்ண அப்பறம் ரொம்ப மாறிட்டார் எப்பவுமே பாசிட்டிவா பேசுறார்.அவர் மட்டும் சென்னைல இருந்துருந்தா கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்துருப்பேன்னு புலம்பிகிட்ட இருந்தார்.”

அதற்குள் ஜீவிகாவை புடவை மாற்றி வருவதற்காக அனுப்பி வைக்க ஜெயந்த் மேடையில் அமர்ந்து ஐயர் கூறிய மந்திரங்களை சிரத்தையுடன் கூறிக் கொண்டிருந்தான்.அடுத்த பத்து நிமிடத்தில் ஜீவிகாவும் வந்துவிட நல்ல நேரத்தில் அனைவரின் ஆசியோடும் ஜீவிகாவின் கழுத்தில் மங்கல நாணைப் பூட்டி தன் மனைவியாக்கிக் கொண்டன்.

ஜீவிகாவிற்கோ சுற்றம் மறந்து அப்படி ஒரு அழுகை வர கண்கள் மொத்தமாய் சிவந்துவிட்டிருந்தது.அதன்பின் அனைவருமாய் சமாதானப்படுத்தி அவளைத் தேற்றினர்.ஜெயந்திற்கோ இன்னும் குழப்பம் தீர்ந்தபாடில்லை.அவன் மனம் நிலையில்லாமல் தவித்துக் கொண்டிருக்க மற்ற சடங்குகள் முடிந்து  விருந்தினர்கள் பரிசுகளோடு மேடையேறினர்.

ஆத்விக் மேடையேற ஜீவிகாவோ மெதுவாய் ஜெயந்தின் காதில் ,”இது என்னோட பீஜி க்ளாஸ்மேட் என் க்ளோஸ் ப்ரெண்ட் ஆத்விக் இது அவங்க அம்மா அப்பா.”

முதல் முறையாய் இத்தனைப் பெரிய நீள வார்த்தைகளைப் பேசியிருந்தாள் ஜெயந்திடம்.அவனும் இன்முகத்தோடு அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தான்.

ஜெயந்த் அருகில் நின்றவன் அவனுடன் கைகுலுக்கி,”என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்..ச்ச்சசசச வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்”,என்று கூறி சிரிக்க ஜீவிகாவோ பல்லைக் கடித்தவாறே,

“எரும மாடு சாவடிச்சுருவேன்…போ”,என்று வார்த்தைகளை மென்று முழுங்க ஜெயந்த் இருவரையும் பார்ப்பதை உணர்ந்து அசடு வழிய சிரித்து வைத்தாள்.

“ஜீ இது என் கிப்ட் அண்ட் இது ரேஷ்ஷோட கிப்ட்.ஆன்ட்டி கிட்ட குடுக்குறேன் அப்பறமா வாங்கிக்கோ..வரேன் மச்சான்..”,என்றவன் கீழேயிறங்க ஜீவிகா மெதுவாய்,

“அவன் சும்மா கிண்டலுக்கு ஏதோ உளறான்..நீங்க தப்பா எடுத்துக்காதீங்க”,என்று சமாளித்து வைத்தாள்.அனைத்து சடங்குகளும் முடிந்து ஜீவிகாவின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டவர்கள் பால் பழம் கொடுக்கப்பட்டு மேலும் சில சம்பிரதாயங்களை முடித்தனர்.

இரவு சாந்தி முகூர்த்தத்திற்கான ஏற்பாடுகள் முடிக்கப்பட்டு ஜீவிகா உள்ளே சென்ற நேரம் ஜெயந்த் கட்டிலின் ஓரமாய் அமர்ந்திருந்தான்.அவன் பாதம் பணிந்தவளை தோள்பற்றி எழுப்பியவன் கட்டிலில் அமருமாறு கூற ஒன்றும் பேசாமல் அமர்ந்தாள்.

“நா உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.”

“ஹாங் சொல்லுங்க”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.