Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (5 Votes)
தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 05 - சசிரேகா - 5.0 out of 5 based on 5 votes
Pin It

தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 05 - சசிரேகா

Unnaiye thodarven naane

திருவண்ணாமலை

பேருந்தில் இருந்த வைதேகியோ சரவணப்பெருமாள் தங்களுடன் யாத்திரைக்கு வராமல் வேறு பக்கம் போவதைக் கண்டு தன் தந்தையிடம்

”அப்பா ஏன்பா அவர் வரலை”,

“ஏதோ முக்கியமான வேலையாம்”

”எல்லா வேலையும் ஒதுக்கி வைச்சிட்டுதானே வந்தாரு”

“இருந்தாலும் தலைவராச்சேம்மா, திடீர்ன்னு ஏதாவது வந்திருக்கும் அதனால போயிருப்பாரு”

”சரி நாமளும் ஊருக்கு போலாம்பா”

“வேணாம்மா, இருக்கற கோயில் குளமெல்லாம் சுத்தினாலாவது சரவணன் உனக்கு கிடைப்பான், இப்பவே ஒரு வருஷம் ஆயிடுச்சி. இனிமேலயாவது உன் பக்தியில கடவுள் உனக்கு கருணை காட்டுவாரு சரியா” என சொல்ல அவளும் சரி என தலையாட்டினாள். அவர்கள் சென்ற கோயில்கள் எல்லாமே பரிகாரம் செய்ய வேண்டிய கோயில்கள் என்பதால் வைதேகி சிரத்தையாக அனைத்து கோயில்களிலும் வேண்டுதல்கள், பரிகாரங்கள் அனைத்தும் செய்துக் கொண்டே உள்ளத்தில் சரவணன் கிடைக்க வேண்டுமென வேண்டிக் கொண்டாள்.

சரவணனோ மாதவியின் பஸ் பின்னாடியே தன் வண்டியில் சென்றுக் கொண்டிருந்தான். திடீரென மாதவி தன்னைப் பார்க்கவும் சந்தோஷத்தில் அவளைப் பார்த்து சிரித்து கையை ஆட்டினான்

”அண்ணா என்ன செய்றீங்க”

“அங்க பாருடா என் பொண்டாட்டி பார்க்கறா”

“அதுசரி அண்ணா ஓவர்ணா இது. அண்ணிக்கு உங்களை அடையாளம் தெரியலை, நீங்க பாட்டுக்கு கையாட்டி அவங்களோட அப்பாகிட்ட அடிவாங்காதீங்க”

“அப்பாவா ஓ ஆமாம் ஒருத்தர் வந்து தெலுங்குல பேசி அப்புறம் தமிழ்ல விளக்கம் சொன்னார்ல”

“ஆமாம்ணா”

“அவருக்கு 2 பொண்ணுங்க போல, ஏற்கனவே ஒரு பொண்ணு அப்பான்னு கூப்பிட்டா, அவளும் என்னைப் பார்த்து சிரிச்சா அடுத்து என் பொண்டாட்டியும் அப்பான்னு கூப்பிட்டா இதுல இருந்து உனக்கு என்ன புரியுது?”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் " உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள்..." - நட்பு கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“ரெண்டு பொண்ணுங்களும் உங்களுக்குத்தான்னு புரியுது அண்ணா”

“டேய்”

“ஆமாம் உன் பொண்டாட்டியை பார்த்து நீ சிரிச்சா, அண்ணிகூட இருக்கற பொண்ணு உன்னைப் பார்த்து சிரிக்குதே இதுல இருந்து தெரியலையா” என மாசி சொல்ல அதற்கு சரவணன்

“எனக்கு என் பொண்டாட்டி மட்டும் போதும், வேற யாரும் வேணாம் ஆமா இந்த பஸ்ஸை பார்த்தா ஏதோ டூர் பஸ் போல தெரியுது, நெம்பர் பிளேட் பார்த்தியா வேலூர் ரிஜிஸ்ட்ரேஷன், ஒருவேளை என் பொண்டாட்டியோட ஊரு வேலூர் போல”

“இருக்கலாம் ஆமா இப்ப எங்க போகுது பஸ்ன்னு தெரியலையே”

“எங்கயாவது சாப்பிட வண்டியை நிறுத்துவாங்கள்ல, அப்ப டிரைவர்கிட்ட விசாரிச்சா சொல்லிடப் போறான்”

“ஆமாம்ணா” என அவன் சொல்லும் போதே மாதவியின் பஸ் அவள் சொன்ன ஓட்டலுக்கு முன் சென்று நின்றது

”அண்ணா ஓட்டலுக்குப் போறாங்க”

“ஒருவேளை குளிச்சிட்டு சாப்பிடுவாங்க போல, நாமளும் குளிப்போம் சாப்பிட்டு ஒண்ணா கிளம்புவோம்”

“நாம வர்றதுக்குள்ள அவங்க போயிட்டா”

“வாய்ப்பேயில்லை அவங்க நிறைய பேர் இருக்காங்க, எல்லாரும் குளிச்சி ரெடியாகி சாப்பிடறவரைக்கும் பஸ் இங்கதான் இருக்கும், நாம சீக்கிரமா குளிச்சிட்டு வந்து பஸ் டிரைவர்கிட்ட விசாரிப்போம்.”

”சரிண்ணா” என மாசியும் வண்டியை பார்க்கிங்கில் விட்டுவிட்டு இறங்கி டிக்கியில் இருந்த லக்கேஜ்களை எடுத்துக் கொள்ள சரவணனும் வண்டியை விட்டு இறங்கி மெதுவாக மாசியுடன் மாதவி வருகிறாளா என பார்த்துக் கொண்டே ஓட்டலுக்குள் நுழைந்தான்.

பஸ்ஸை விட்டு முதலில் இறங்கியது மாதவிதான், ஏற்கனவே ஆன்லைன் மூலமாக அந்த ஓட்டலில் ரூம் புக் செய்தது அவளுக்குத்தான் தெரியும், அதனால் அவள் நேராக ரிசப்ஷனிடம் சென்றாள். அவளை பின்தொடர்ந்து சென்ற சரவணனும் சற்று ஒதுங்கி நின்று அவள் செய்வதைக் கவனமாக பார்க்கலானான். அவனை காணாமலே மாதவியும் ரிசப்ஷனிஸ்டிடம்

”நான் ஏற்கனவே இங்க 4 ரூம் புக் பண்ணியிருந்தேன், செக் பண்ணுங்க” என சொல்ல அவளோ

”மேடம் உங்க பேர் என்ன” என கேட்க

”மாதவி” என்றாள் ரிசப்ஷனிஸ்டும் தன் முன் இருந்த கம்ப்யூட்டரில் மாதவி பெயரில் ரூம்கள் புக்காகி இருக்கிறதா என பார்க்கலானாள்.

மாதவி என பெயர் சொன்னதும் சரவணன் முகத்தில் பிரகாசம் வந்தது

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7  8 
  •  Next 
  •  End 

Add comment

Comments  
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 05 - சசிரேகாராஜேந்திரன் 2019-04-24 23:05
omg saravanan unaku ippadi oru kastam varanuma so sad sopnavala again neenga prinjida poreenga careful nice epi :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 05 - சசிரேகாvijayalakshmi 2019-04-23 11:17
nice epi
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 05 - சசிரேகாJebamalar 2019-04-22 21:48
Very interesting story mam... சரவணன் epadi மாதவி ta பேசுவாரு epadi marriage pathi solvaru..🤔🤔waiting for nxt epi mam :clap:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 05 - சசிரேகாராணி 2019-04-22 19:20
அருமையான கதைபோக்கு
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 05 - சசிரேகாAdharvJo 2019-04-22 15:21
:D :lol: that was entertaining and cool epi sasi ma'am :clap: :clap: car key tholaiyadhey :D Masi and Sarvanan oda combo dhool ma'am (y) Hopefully sundhari is not gonna fall for Sarvanana :grin: Eppo thaan sarvanan will talk to madhavi?? ivaroda external appearance parthey rendu peru flat agitangale :Q: love is not blind....love makes someone blind :yes: idhu enga poi mudiyumo..waiting to see what happens next. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 05 - சசிரேகாmadhumathi9 2019-04-22 11:22
:Q: intha kuzhappam eppo theerum.nice epi. Padithu kondey irukkanum polirukku. Interesting aaga irukku. :thnkx: 4 this epi. :GL: sasi. (y)
Reply | Reply with quote | Quote
+2 # hishrus 2019-04-22 10:01
is sapna ville..will effect saravanan n mathavi life..hopefully mathevi know about her life partner...nice story :clap: :GL:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 05 - சசிரேகாதீபக் 2019-04-22 09:25
super sis story :clap: . great going :GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top