(Reading time: 21 - 41 minutes)

அதையும் மீறி பேசிருந்தேன்னா மொட்டை ராஜேந்திரன் வாய்ஸ் தான் வந்துருக்கும்.நீங்களும் நிஜமாவே கல்யாணத்தை நிறுத்திருப்பீங்க..”

என்றதை கேட்டு வாய்விட்டே சிரித்திருந்தான் ஜெயந்த்.உன் முகத்தை பார்த்து தப்பா எடை போட்டுடேன்.ரொம்ப அடக்க ஒடுக்கமான அமைதியான பொண்ணுனு..என் மாமியார் வேற வர்த்தைக்கு வார்த்தை என் பொண்ணு என் பேச்சை தட்டவே மாட்டானு சொல்லிட்டே இருந்தாங்களாம்.”

“அதெல்லாம் மஞ்சுகிட்ட கொடுக்குற பில்டப்ஸ் தான்..இல்லனா சென்ட்டிமென்ட் அழுகாச்சினு போட்டு கொன்னுடுவாங்க..சிம்பிள சொல்லனும்னா இந்த ஜீவி வீட்டுல எலி வெளில புலி..எப்பூடி!!”

“நல்லா பேசுற..இப்போ பீல் பண்றேன் முதல்லயே நம்பர் வாங்கிருக்கலாமேனு..”

“ஆனாலும் உங்களுக்கு லொள்ளு ஜாஸ்தி தான்.இப்போ வந்து இஷ்டமில்லனா சொல்லிடுனு சொல்றீங்க எப்படியும் போக மாட்டேன்ங்கிற தைரியம்??”

“ச்சச்ச அப்படியெல்லாம் இல்ல..எனக்கு உன் போட்டோ பார்த்தவுடனேயே பிடிச்சிருந்தது.அதனால தான் எப்படியாவது இந்த கல்யாணம் நடந்துறாதனு நினைச்சுட்டே இருந்தேன்.

ஆனா இப்போ நீயும் நானும் மட்டும்னு இங்க இருக்கும்போது தான் அந்த விஷயம் ரொம்ப பெருசா தெரிஞ்சுது..ஊருக்காக கல்யாணம் பண்ண மாதிரி ஊருக்காக வாழ முடியாது இல்லையா..நாம நாமளா இருக்க முடியாத வாழ்க்கை வாழ்ந்து வேஸ்ட் தான.”

“கரெக்ட் தான் ஆனாலும் இந்தகாலத்துல கல்யாணம்ங்கிறது அவ்ளோ ஈசியா போச்சு..நினைச்சதுக்கெல்லாம் சண்டை போட்டு பிரிஞ்சுடுறாங்க.உண்மையை சொல்லனும்னா ஒரு நியாயமான காரணத்துக்காக நடக்குற விவாகரத்துகள் ரொம்பவே கம்மி..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சுபஸ்ரீயின் " ரிங்கா ரிங்கா ரோசஸ்..." - திகில் நிறைந்த பேய் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

அந்த தப்பை நா பண்ண மாட்டேன்.எல்லாமே என் கண் முன்னாடிதான் நடந்தது.என்னதான் எங்கம்மா சொல்றதுக்கு ஓ.கே சொன்னாலும் நீங்க நல்வவரா இருந்ததுனால தான் நா சம்மதிச்சேன்.”

“நானா நல்லவனா யாரு இப்படி ஒரு பொய் சொன்னது நா ரொம்ப ரொம்ப கெட்டவன் தெரியுமா?”

“ஹா ஹாஹா  இதை பால் குடிக்குற பச்சை குழந்தை கூட நம்பாது மை டியர் சூப்பர் மார்க்கெட்”

“அடிப்பாவி பட்ட பேரெல்லாம் வச்சுட்டியா நீ?”

“ஹி ஹி ஒரு ப்ளோல வந்துருச்சு ஆனாலும் என் ப்ரெண்ட்ஸ்கிட்ட அப்படி தான் சொல்லுவேன்.ஆங்ங் அப்பறம் மார்னிங் பார்த்தீங்களே ஆத்விக் அவன்தான் உங்களுக்கு நல்லவர் வல்லவர் பட்டமெல்லாம் ஃப்ரீயாவே அள்ளிக் கொடுத்தான்.”

“அவரா அவருக்கு எப்படி என்னத் தெரியும்?”

“பொண்ணு பாத்துட்டு போனப்பறம் உங்க கடை டீடெயில் எல்லாம் கேட்டான் அப்பறம் உங்களைப் பத்தி விசாரிச்சான் போல.”

“அடப்பாவிங்களா ஒரு குரூப்பா தான் அலையுறீங்களா?!”

“ஹா ஹாஹா ஆமா அவனுக்கு காலையிலே ஸ்டேஜ்ல உங்களை பாக்கும்போது கொஞ்சம் டென்ஷன் எங்க அவனை கண்டு பிடிச்சுருவீங்களோனு..”

“ம்ம் டெய்லி எத்தனையோ பேரை மீட் பண்றதுனால எல்லாரையும் நியாபகம் வச்சுக்க முடியுறதில்ல.”

“ஹா ஹா அவனை பார்த்து நீங்க சிரிச்ச அப்பறம் தான் அவனுக்கு நிம்மதியாவே இருந்தது.”

“ம்ம்”

“உங்க சந்தேகம் எல்லாம் தீர்ந்துச்சா தூங்கலாமா செம டயர்டா இருக்கு!”

“ஏது தூங்க போறியா அதுக்காகவா இவ்ளோ கஷ்டப்பட்டு அலங்காரம் பண்ணிருக்காங்க”,என்றதும் நிஜமாகவே பேந்த பேந்த விழித்தாள் ஜீவிகா.

“ஹா ஹா ஒரே செகண்ட்ல எப்படி இப்படி பாவமான ரியாக்ஷனுக்கு மாறின.சும்மா சொன்னேன்..நீ தூங்கு..முதல்ல நாம ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சுக்குவோம் அப்பறம் இதெல்லாம் தானா நடக்கும்.”

“தேங்க்ஸ் ஜெய்..அப்படி கூப்டலாம் தான?”

“நீ தான என் பொண்டாட்டி அப்போ எப்படி வேணா கூப்டலாம்.அப்பா அம்மா முன்னாடி வாடா போடானு கூப்டாம இருந்தா போதும்.”,அழகாய் புன்னகைத்தவள் ஒரு ஓரமாய் படுத்துக் கொள்ள மனம் கொள்ளா மகிழ்ச்சியில் மூழ்கியிருந்தவனுக்கு வெகு நேரம் கழித்தே தூக்கம் கண்களைத் தழுவியது. 

தொடரும்...

Episode # 05

Episode # 07

Go to Unnodu naanirukkum manithuligal story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.