(Reading time: 21 - 41 minutes)

எத்தனையோ முறை சிந்தித்தான் ஆனாலும் இது ஒன்றே முடிவு என்று தோன்றியது.அப்போது அவன் கடைசியாக பேச விரும்பியது ஆத்விக்கிடமே.இரயில் நட்பு போன்று இவர்களுடையது விமானத்தில் ஏற்பட்டது.தன்னை விட சிறியவன் என்றெல்லாம் எண்ணவில்லை.24 மணி நேர பயணத்தில் நிறைய நிறைய பேசினார்கள்.அவனின் விளையாட்டுத் தனமும் இலகுவாய் பழகும் தன்மையும் ரேஷ்வாவை வெகுவாய் கவர்ந்துவிட்டது.

பல நேரங்களில் மனது சரியில்லை என்றால்கூட அவனிடம் பேசினால் சற்று ஆறுதலாய் இருக்கும் என்றே உணர்ந்தான்.அப்படிப்பட்ட அவனிடம் பேசாமல் இந்த உலகத்தைப் பிரிய மனமில்லாமல் அவனுக்கு அழைத்துப் பேசினான்.

ரேஷ்வாவின் குரலிலேயே ஏதோ சரியில்லை என்று உணர்ந்தவன் எதையும் தோண்டித் துருவாமல் எங்கிருக்கிறான் என்று கேட்க சென்னையின் ஹோட்டல் பெயரைக் கூறிவிட்டு அழைப்பை துண்டித்திருந்தான் ரேஷ்வா.

உயிரை விடப் போகும் நேரத்தில் ஆத்விக் வருவான் தன்னை காப்பாற்றுவான் தன் குரலை வைத்தே தவறு நடக்கப் போகிறது என்பதை யூகித்திருப்பான் என்று எதையும் சிந்திக்கும் நிலையில் இல்லை.

ஆனால் சரியான நேரத்தில் அங்கு நின்றிருந்தான் ஆத்விக்.அரை மயக்க நிலையிலும் அவனது பதட்டமும் தன்னை காப்பாற்றத் துடிக்கும் அவனது தவிப்பும் ரேஷ்வாவின் கண்ணில் படாமல் இல்லை.

மீண்டும் கண்விழித்த போது தன்னெதிரில் இருந்தவள் தன் வாழ்வின் தேவதை என்றே தோன்றியது.உடன்பிறப்புகளோ நட்புகளோ இல்லாத குறையை தீர்க்கவே இவர்கள் இருவரும் வாழ்வில் வந்ததாய் நம்பினான்.

ஆத்விக் சிறந்த நண்பனாய் இருந்தான் என்றால் ஜீவிகாவின் முதல் சந்திப்பே தன் சகோதரியோ தாயோ இப்படி ஒரு முடிவுக்கு எப்படி கண்டிப்பார்களோ அப்படி தான் இருந்தது அவளது பேச்சு.

அவன் ஒரு நடிகன் அதைவிட முக்கியமாய் பணக்காரன் என்ற எதுவுமே அவள் கருத்தில் இன்று வரை பதிந்ததாய் நினைவில் இல்லை.அவனை அவனுக்காக தன் நண்பன் ஆத்விக்காக அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கிறாள்.

இத்தனை குறுகிய காலத்தில் இப்படி ஒரு நெருங்கிய நட்பு அமையும் என அவன் எண்ணியிருக்கவில்லை.வாழ்வின் எந்த ஒரு கட்டத்திலும் அதை இழப்பதற்கும் தயாராயில்லை.

அனைத்தைம் ஒரு முறை அசைப்போட்டவன் அடுத்து தன் வாழ்வின் சரிபாதியை சந்திக்க போகிறோம் என்பதை அறியாமலேயே தனக்கு புக் செய்ப்பட்டிருந்த ஹோட்டலை அடைந்தான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பூர்ணிமா செண்பகமூர்த்தியின் "இதோ ஒரு காதல் கதை..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

லக்கேஜை வைத்துவிட்டு தன்னை தயார் செய்து கொண்டவன் ஷீட்டிங் ஸ்பார்ட்க்கு கிளம்பினான்.அப்போது தான் அவனுக்கு நினைவு வந்தது  ஹீரோயின் யார் என்பதே தெரியாது என்பது.

கதை அருமையாக இருக்க அவனுக்குத் தான் முக்கிய கதாபாத்திரம் என்பதால் அதைப் பற்றி எதுவும் யோசிக்காமல் ஒத்துக் கொண்டிருந்தான்.இறுதியாக டைரக்டரிடம் பேசிய போது கூட ஹீரோயின் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் அவன் டெல்லி வருவதற்குள் உறுதியாகிவிடும் என்றும் கூறியிருந்தார்.

அதை பற்றி சிந்தித்தவாறே ஸ்பார்ட்டிற்குச் சென்றவன் கராவேனிற்குள் சென்று உடை மாற்றி மேக்கப் முடித்து தயாராய் இருக்க அஸிஸ்டெண்ட் டேரக்டர் வந்து அவன் ஷாட் தயாராகிவிட்டது என்று கூறி அழைத்துச் சென்றார்.

அங்கிருந்த அனைவருக்கும் பொதுவாய் ஒரு வணக்கத்தை கூறிவிட்டு திரும்பியவனின் கண்களில் அவள் பட்டாள் ரினிஷா.தற்போதையே நிலையில் இளைஞர்களின் கனவுக் கன்னி பட்டத்திற்கு வெகு அருகில் இருப்பவள்.

ரேஷ்வா அவளைப் பற்றி ஓரளவு கேள்விப் பட்டிருக்கிறான் நான்கைந்து படங்கள் அனைத்தும் ஓரளவு வெற்றியே.அதையும் கடந்து அவளது அழகு தான் அனைத்திற்கும் முக்கிய காரணமாய் இருந்தது.

நடிகைகள் என்றாலே வெண்மை நிறத்தில் மட்டுமே இருக்க முடியும் என்பதை மாற்றியவள் ஓரளவு கோதுமை கலந்த வெள்ளை தான் ஆனால் அதை ஈடுகட்டும் அவளின் உயரமும் ஒல்லியான தேகமும்.அனைத்திற்கும் மேலாக அவளின் நேர்பார்வை.எனக்கு நிகர் நானே என்பது போன்ற ஒரு தன்னம்பிக்கை தெரியும் அவளது பார்வையில்.

இப்போது தான் முதல் முறை சந்திக்கிறான்.அவனை கண்டு அவளும் எழுந்து நின்று கை குலுக்குவதற்காக கைநீட்டி நின்றாள்.

“ஹாய் ரேஷ்வா ஜீ!எப்படியிருக்கீங்க?”

“ஹலோ ரினிஷா..ரொம்ப நல்லாயிருக்கேன் நீங்க?”

“ஐ அம் டூ குட்..சோ பிக் வெல்கம் பேக்..கண்டிப்பா இந்த மூவி ஹிட் ஆகும்..”

“தேங்க்ஸ்..”

“சொல்லப் போனா நானுமே உங்களோட பெரிய ஃபேன்..சோ உங்களை ஆன் ஸ்கீரின்ல பாக்குறதுக்காகவே நான் வெயிட்டிங்.”

“ஐயோ என்ன இப்படி சொல்லிட்டீங்க..இருந்தாலும் சோ நைஸ் ஆப் யூ..நானும் உங்க இன்டர்வியூஸ் நிறைய பாத்துருக்கேன்.மீடியாவ ரொம்ப அழகா ஹேண்டல் பண்ணுவீங்க…”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.