(Reading time: 21 - 41 minutes)

“அது..வந்து..உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லனா இப்போவே சொல்லிடு யாருக்காகவும் யோசிக்காத..இது நம்ம வாழ்க்கை நாம தான் வாழணும்.மத்தவங்க பேச்சைக் கேட்டு உன் லைஃபை அழிச்சுக்காத..”

“!!!!!”

“என்னாச்சு எதுவாயிருந்தாலும் தயங்காம சொல்லு”

“அடப்பாவி மனுஷா என்னையா இப்படி ஒரு குண்டைத் தூக்கி போடுற..நா எப்போ சொன்னேன் இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லனு?”

“என்ன??அப்போ உனக்கு என்னை பிடிச்சுருக்கா?”

“நாசமா போச்சு போங்க..யாரு இப்படி ஒரு புரளியை கிளப்பிவிட்டது?”

“இல்ல நிறைய விஷயங்களை யோசிச்சு பார்த்தா எனக்கு அப்படி தோணிச்சு?”

“அப்படியா என்னது அது சொல்லுங்க கேட்போம்.”

“பொண்ணு பார்க்க எங்க வீட்ல இருந்து வந்தன்னைக்கு நீ காலேஜ் போய்ட்டு லேட்டா தான் வந்தியாமே?”

“ஆமா அன்னைக்கு உங்க வீட்ல இருந்து வராங்கனே எனக்குத் தெரியாது..எல்லாம் எங்கம்மா ஏற்பாடு அதான்.”

“ஓ..அப்பறம் எப்படி சம்மதம் சொன்ன?”

“என் கல்யாண விஷயம் எப்படியிருந்தாலும் எங்கம்மா விருப்பமா தான் இருந்துருக்கும் அதனால வேற எதைப் பத்தியும் யோசிக்கல.”

“படிப்பு…படிப்பை பத்தி கூடவா?”

“இதுல நினைக்க என்ன இருக்கு டிகிரி முடிச்சுட்டு பிஸினஸ் பார்க்க வந்துட்டதா சொன்னாங்க..”

“ஆமா நீ நிறைய படிச்சுருக்க அதே நேரம் காலேஜ்ல வேலை பாக்குற அப்படியிருக்கும் போது என் வேலை உனக்கு பெரிய விஷயமா தெரிலயா?”

“இதுக்கு உண்மையா எனக்கு என்ன தோணிணதுனு சொல்றேன்..ஆனா தப்பா நினைச்சுக்கக் கூடாது?”

“பரவால்ல சொல்லு!”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

குருராஜனின் "எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“வீட்டுக்கு மாசாமாசம் மளிகை சாமான் வாங்குற வேலை மிச்சம்னு நினைச்சேன்.நம்ம கடையில இருந்த வந்துரும் தான?”

“அவள் நம்ம கடை என்று கூறிதிலேயே அகமும் முகமும் மலர்ந்துவிட பற்கள் தெரியவே புன்னகைத்தான்.

“நிஜமா இதை நீ இவ்ளோ ஈசியா எடுத்துப்பனு நினைக்கல!”,அப்பட்டமான ஆச்சரியம் இருந்தது அவன் குரலில்.

“இதுல தப்பா எடுத்துக்க ஒண்ணுமில்லங்க..திருடுறதும் தப்பான தொழில் பண்றதையும் தவிர எல்லாமே நல்ல வேலை தான் அது மட்டுமில்லாம பத்து பேருக்கு வேலை கொடுக்குற இடத்துல தான நீங்க இருக்கீங்க அப்பறம் என்ன?””

“இல்ல இதுக்கு முன்னாடி நிறைய பொண்ணு பார்த்தாங்க ஜாதகம் எல்லாம் பொருந்தியிருந்தாலும் இந்த காரணத்துக்காகவே ரிஜெக்ட் பண்ணிட்டாங்க”

“நீங்க என் கையில தான் சிக்கணும்னு விதி இருந்துருக்கு போல..”

“என்னது?”

“ஹி..ஹி..ஒண்ணுமில்ல..மைண்ட் வாய்ஸை கொஞ்சம் சத்தமா பேசிட்டேன்..நீங்க சொல்லுங்க..”

“சரியான வாயாடியா இருப்ப போலயே”,என்றவன் சிரிப்போடே பேச்சைத் தொடர்ந்தான்.

“நான் முதல்ல இருந்தே அம்மாகிட்ட இந்த கல்யாணம் வேண்டாம்னு தான் சொல்லிட்டு இருந்தேன்.படிச்ச பொண்ணும்மா இதெல்லாம் பிடிக்குமோ என்னவோனு சொன்னேன்.அம்மா தான் திட்டினாங்க அந்த பொண்ணுக்கே சம்மதம் சொல்லிட்டாங்க உனக்கு என்னடானு கத்தினாங்க.

இருந்தாலும் நா உன் வாயால சம்மதத்தை கேட்கனும்னு நினைச்சேன்.ஆனா உங்கம்மா என் பேச்சை பொண்ணு மீறவே மாட்டானு சொல்லிட்டாங்க..சரி நிச்சயத்துல பேசலாம்னு பார்த்தா அன்னைக்கு மொத்தமும் நீ ஏதோ கடுப்புலயே இருந்த மாதிரி இருந்தது.”

“ஹே அவ்ளோ நோட் பண்ணீங்களா அப்போ அக்சுவலா வேற கடுப்புல இருந்தேன்..அம்மாவ எல்லாரும் ஒரு வழி ஆக்கிட்டு இருந்தாங்க அந்த எரிச்சல்.”

“ஓ..அப்பறம் தான் உன் நம்பர் கூட வாங்கலையேனு நினைச்சேன்.அம்மா வாங்கித் தரவானு கேட்டாங்க நா தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்.ஒரு வேளை என்னை பிடிக்கலனு சொல்லிருவியோனு ஒரு சின்ன தயக்கம்.”,ஜீவிகா முகம் சிவக்க தலை குனிந்துகொண்டாள்.

“அப்பறம் துணி எடுக்க போனப்போ திடீர்னு உன்கிட்ட போனை குடுத்ததுல எனக்கு என்ன பேசுறதுனே தெரில.அதான்..”

“ஆனா அன்னைக்கு நிஜமாவே உங்களை மனசுக்குள்ள நல்லா திட்டினேன்.”,என்றவள் நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

“பார்ரா அப்போ ஏன் ஒரு நாள் நான் உங்க அம்மாக்கு கால் பண்ணி பேசுறேன்னு சொன்னதுக்கு பேச மாட்டேன்னு சொன்ன?”

“அன்னைக்கு காலேஜ் கல்ச்சுரல்ஸ்ல பயங்கர ஆட்டம் போட்டு தொண்டை டோட்டல் டேமேஜ்..தேவர் மகன் ரேவதிக்கு வந்த குரல் கூட வரல..நாலு பலூன் ஊதுற அளவு காத்து தான் வந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.