(Reading time: 23 - 46 minutes)

"அப்புறம் என்ன? தங்கச்சிகளுக்கு கல்யாணம் முடிந்த அடுத்த  முகூர்த்தத்திலேயே  எங்க கல்யாணம். பெரியவங்க நீங்க ஆக வேண்டியதைப் பாருங்கள்."

மதிய உணவு நேரம் நெருங்கிவிட்டதால் சாப்பிட்டுவிடலாம் என்று சிவரஞ்சனி சொல்ல வினோதினி சமையல் அறைக்குச் சென்று சமைத்தவற்றை எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.

பின்னேயே வந்த மகாலெட்சுமி உதவி செய்தாள். கூடவே கிண்டலும் செய்தாள்.

"என்ன வினு? முகத்தில் பளபளப்பு தெரியுது."

"போங்க அத்தாச்சி." அவள் வெட்கப்பட்டாள்.

அதைப்பார்க்க மகாலெட்சுமிக்கு மிகவும் மகிழ்ச்சியாக  இருந்தது.

ஆரவ் அவளிடம் சொன்னபோதே மிகவும் மகிழ்ந்துபோனாள்.

முன்பே வினோதினிக்கு ஆரவ் மீது விருப்பம் என்பது மகாலெட்சுமிக்குத் தெரியும். அவள் ஆரவைப் பார்க்கும் போது விழிகளில் தெரியும் பளபளப்பு

...
This story is now available on Chillzee KiMo.
...

். அதனால் நீயும், ஆரவும் கண்டிப்பா போயிட்டு வாங்க" என்று அனுப்பி வைத்தாள்.

விருந்துக்கு வந்தவர்களை நன்றாக உபசரித்துத் தேவையானதை செய்துகொண்டு இருந்தவளை மாமியாரும், கணவனும் கட்டாயப்படுத்தி உணவுண்ணச் செய்தனர். கவிதாவிற்கு மிகவும் மகிழ்ச்சி.

மகள் ஆசைப்பட்ட வாழ்க்கை அமைந்துவிட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.