Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 12 - ஆதி [பிந்து வினோத்] - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 12 - ஆதி [பிந்து வினோத்]

Vaanum mannum katti kondathe

ஹாய் பிரென்ட்ஸ், எல்லோரும் எப்படி இருக்கீங்க!!!! என்னோட ‘கன்னா-பின்னா’, ‘வழக்கம் போல’, ‘மனதுக்குள் நினைத்தான்(ள்)’, etc etc மிஸ் செய்த அனைவருக்கும் சாரி :-) உங்களை எல்லாம் சமாதானம் செய்ய மேலே சொன்ன சொற்றொடர்கள் (க்கும் க்கும்!!!!) எல்லாவற்றையும் இந்த வார எபிசோடுல மிக்ஸ் செய்து விட்டு இருக்கேன். என்ஜாய் :-)

ன்ன ஆகாஷ் இவ்வளவு லேட்???” என்றுக் கேட்ட சுபாஷினியின் முன் மேற்கத்திய பாணியில் குனிந்து கையில் இருந்த ரோஜா பூங்கொத்தை நீட்டினான் ஆகாஷ்.

“ஹாப்பி மதர்ஸ் டே ம்மா”

“அப்போ மத்த நாள்லாம் என்ன டே ஆகாஷ்?” என்று கேலி செய்த பிரகாஷை கண்டுக் கொள்ளாமல் முகம் மலர மகன் கொடுத்த பூங்கொத்தை பெற்றுக் கொண்டாள் சுபாஷினி.

“எல்லா பூவும் அழகா இருக்கு. அதும் எனக்கு பிடிச்ச சிகப்பு கலர் ரோஸ். கலக்கிட்டேடா கண்ணா...”

“ஐ ஆம் ஆல்வேஸ் அட் யுவர் சர்வீஸ் ம்மா...”

“அடடா... ரொம்ப ஓவர் சீன் போடுறீங்க ரெண்டு பேரும்...” என பொய்யாக அலுத்துக் கொண்டார் பிரகாஷ். அதை புரிந்துக் கொண்டாலும், காட்டிக் கொள்ளாமல்,

“நானும் என் பையனும் செல்லம் கொஞ்சினா உங்களுக்கு என்ன பொறாமை?” எனக் கேட்டு கணவரை சீண்டினாள் சுபாஷினி.

பிரகாஷும் விட்டுக் கொடுக்காமல்,

“ஏதோ புதுசா ஒன்னு நடந்து இப்படிலாம் பேசினா சரி! அவன் உன் பிறந்த நாள், நம்ம கல்யாண நாள்ன்னு எல்லாத்துக்கும் உனக்கு பிடிச்ச ரெட் ரோஸ் தான் வாங்கி தரான்... நீயும் இதே டையலாக் ரிபீட் செய்ற. கேட்டு கேட்டு எனக்கு தான் போரடிச்சிருச்சு” என்றார்.

“உங்களுக்கு போரடிக்குதுன்னா நீங்க காதை மூடிக்கோங்க...”

“அதானேப்பா, நீங்க காதை மூடிக்கோங்க....! நோ பொறாமைஸ்....!”

“அம்மாவும், பையனும் ஒரு சைடா மாறிட்டீங்க! இப்போ நான் என்ன சொன்னாலும் எடுப்படாது! வெள்ளைக் கொடி காட்டுறதை தவிர எனக்கு வேற வழி இல்ல!”

“அப்படி வாங்க வழிக்கு!”

“எப்போவும் நடக்குறது தானே சுபா! சரி, நீங்க இரண்டு பேரும் செல்லம் கொஞ்சி முடிச்சிட்டு சொல்லுங்க, நான் வெயிட் செய்றேன்... என்ன வசீகரனோட பேமிலி தான் பாவம் அங்கே ரெஸ்டாரன்ட்டில காத்துட்டு இருப்பாங்க.”

“அச்சோ, ஆகாஷ் நான் அதை மறந்துட்டேனே!!! ஜோதி அரை மணி நேரத்துக்கு முன்னாடியே கிளம்புறோம்னு சொன்னா. நாமளும் கிளம்புவோமா???”

“ஆன்ட்டி, அங்கிளும் வராங்களாம்மா?”

“அவங்க மட்டும் இல்லப்பா என் வருங்கால மருமகளும் வரா. சரி, வா, கிளம்பலாம்... கார்ல போய் பேசலாம்” என்று அவனை அவசரப் படுத்திய சுபாஷினி, மறக்காமல் அவன் கொடுத்த பூங்கொத்தில் இருந்து மூன்று மலர்களை கையில் எடுத்துக் கொண்டாள்.

அப்படியே, மீதி இருந்த மலர்களை ஒரு பூச் சாடியை காலி செய்து அதனுள் வைத்து, மிச்சமிருந்த பூக்களை அழகாக அடுக்கினாள்.

அம்மா செய்வதை கவனித்துக் கொண்டிருந்த ஆகாஷிற்கு, அந்த பூக்கள் சினேகாவை நினைவூட்டின...

அவள் முகமும் கூட ரோஜாப்பூ தான்...

ஒரு சில நிமிடங்களுக்கு முன் எதிர்பாராமல் அவள் அவன் முன் வந்ததையும், அதுவும் சுரிதாரில் இருந்ததையும் நினைத்து அவனின் முகமும், மணமும் கனிந்தது...

இதுப்போல அவளுக்கு பூக்கள் வாங்கி கொடுக்கும் உரிமை கிடைத்தால் எப்படி இருக்கும்... பூக்களை பார்த்து அவளின் முகம் எப்படி மலரும்...

பூக்களை அடுக்கிக் கொண்டிருந்த சுபாஷினி, ஒன்பது மலர்களுக்கு பதிலாக எட்டு மலர்கள் மட்டுமே இருப்பதை கவனித்து விட்டு,

“அதென்ன ஆகாஷ், 11 பூ வாங்கி இருக்க?” என்று மகனிடம் கேட்டாள்.

தன்னுடைய யோசனையில் இருந்து வெளியே வந்த ஆகாஷ்,

“பதினொன்னா? 12 இருந்துச்சேம்மா’ என்றபடி பூச்சாடியில் இருந்த மலர்களை கண்களால் கணக்கிட்டான்.

அங்கே எட்டு மட்டுமே இருப்பது புரியவும், ஒரே ஒரு வினாடி யோசித்தவனுக்கு உடைந்திருந்த பூவின் ஞாபகம் வந்தது!

“ஓஹோ!!!! ஒரு பூ லைட்டா உடைஞ்ச மாதிரி இருந்துச்சு. எங்கேயோ விழுந்திருச்சு போல இருக்கும்மா” என்றான் ஏமாற்றத்துடன்.

“அது பரவாயில்லை விடு! ஒவ்வொரு பூவுக்கும் கடவுள் ஒரு கணக்கு வச்சிருப்பாராம். அந்த பூ எங்கே போய் சேரனும்னு அவர் யோசிசிருந்தாரோ அங்கே போய் சேர்ந்திருக்கும்... வா நாம கிளம்புவோம்....!”

பதில் சொல்லாமல் அம்மாவுடன் நடந்தான் ஆகாஷ்!

சுபாஷினி தீர்க்கதரிசியாய் சொன்னாளோ அல்லது பேச்சுக்கு சொன்னாளோ தெரியாது, ஆனால் ஆகாஷ் மனதினுள் ஆசைப்பட்டது தான் அவனே அறியாமல் நடந்திருந்தது...

ஆபிசில் இருந்து கிளம்பும் முன் மீண்டும் ஒரு முறை மேஜையை திறந்து அதனுள் இருந்த பூவை கண்களால் ரசித்தாள் சினேகா.

அது என்னவோ அவனுக்கே தெரியாமல் கீழே விழுந்ததால் அவளுக்கு கிடைத்தது தான்...

ஆனாலும் அதை அவனே அவளுக்காக ஸ்பெஷலாக கொடுத்ததைப் போல அவளின் மனம் படப்படத்தது...

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

Add comment

Comments  
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 12 - ஆதி [பிந்து வினோத்]saaru 2019-05-27 12:10
Nice update bindu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 12 - ஆதி [பிந்து வினோத்]AdharvJo 2019-05-09 20:35
:D that was cool end for today's cute epi Bindu ma'a :clap: :clap: Ninga Akash-i over aga theliyavachi confuse panuringalo :grin:
Eppadiyo V'day-la irundha correct aga mothers day-ku land agitinga :dance:
Movie-k aunty ivalo feel pana Akash oda love story theriyumbodhu eppadi react panuvangalam :lol:
Very interesting flow waiting to read rombha's version of love towards akshara :yes: Hope you clear the air soon ;-)

thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 12 - ஆதி [பிந்து வினோத்]julie1 2019-05-09 17:58
gud 2 c u back ms kanna pinna :P

valentines dayku potta epila mothersdaynu sonna ore reasonkaga wait senchu mothers dayku update kodutha ungalin sincerity paarattuku uriyathu :P

Akash ivvalavu nallavara irukkare. good boy.

poor sneha.

how are you gonna link back Akash and Sneha?
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 12 - ஆதி [பிந்து வினோத்]Srivi 2019-05-09 08:04
Welcome back sis..sema.. innum konjam pages kuduthrukalame.. when will Akshara going to propose Ganesh as well.. sema eagara waiting.. Thx much for this episode.. ippide ddlj padathukku engamma vum subha aunty kudutha reactions than kuduthanga...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 12 - ஆதி [பிந்து வினோத்]madhumathi9 2019-05-09 06:03
:eek: aagaash enna seiya poraangannu paarppom. :clap: nice epi.waiting to read more. :thnkx: 4 this epi. (y)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top