(Reading time: 10 - 19 minutes)

அதுமட்டுமன்றி நம் ராஜ்ஜியத்தில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் நட்பில் சிறந்து விளங்குகிறோம்.நம் பண்டிகையான ரமலானுக்கு சிறப்பான நோன்பு கஞ்சியை அவர்களோடு பகிர்ந்தே உண்கிறோம்.

அதே நேரம் அவர்களின் பண்டிகைகளுக்கு செய்யப்படும் இனிப்புகளை நம் பிள்ளைகளுக்காக இறைவனுக்கு படைப்பதற்கு முன் சற்று எடுத்து வைத்து விட்டே பூசை காரியங்களை செய்வார்கள்.

இது காலம் காலமாக இருக்கும் எழுத்தாலோ கட்டாயத்தாலோ வராத இயற்கையான நட்பு.இதைப் போன்று தான் நம் அரசரின் திருமணமும் அவர் மனம் கவர்ந்தவளை திருமணம் செய்ததது என்பது இயற்கையான ஒன்று. இதற்காக ஏன் அவர்களின் உயிரை மாய்க்கும் அளவு செல்ல வேண்டும்?

எதிரிகளுக்கு தவறானவராய் இருந்தாலும் நம் உசூரின் ஆட்சியால் நாம் நிம்மதியாகவே இருக்கிறோம்.அந்த ஒரு காரணத்திற்காக வேணும் அவர் தன் மனைவி மக்களோடு நூறாண்டுகாலம் நன்றாக இருக்க வேண்டுமென அல்லாஹ்கிடம் இப்போதுகூட வேண்டிக் கொண்டு தான் வந்தேன்.

சரி நாம் என்ன கூறி என்னவாகப் போகிறது நடப்பதே நடக்கும் வா செல்லலாம் பணிக்கு தாமதமாகிறது”,என்றபடி அங்கிருந்து நகர்ந்தவரைக் கண்டு மனதிற்குள் புன்னகைத்துக் கொண்டான் நஸீம்.

அடுத்ததாக இந்துக்கள் இருக்கும் பகுதிக்குச் சென்றவனுக்கு வெயிலின் தாக்கதால் நா வறண்டு போனதாய் தோன்ற அங்கிருந்த ஒரு வீட்டின் முன் இருவருமாய் அமர்ந்தனர்.

அந்நேரம் சரியாய் ஒரு பெண்மனி வீட்டின் உள்ளிருந்து வெளியே வர திண்ணையில் அமர்ந்திருந்த இருவரையும் கண்டதும்,

என்னவாயிற்று பாய் சாப் மிகவும் களைத்துத் தெரிகிறீர்கள்?”

நா வறண்டு போய்விட்டது.குடிப்பதற்கு சற்று நீர் கிடைக்குமா?”

நீர் என்ன நீர் மோரே தருகிறேன்.இங்கேயே காத்திருங்கள் வருகிறேன்.”,என்றவர் உள்சென்று எடுத்து வந்தார்.அதை ஒரே மூச்சில் பருகிவிட்டு அவரிடம் குவளையை நீட்டி சிநேகமாய் புன்னகைத்தான்.

ஆமாம் தாங்கள் ஊருக்குப் புதிதா தங்களை நான் இங்கு இதற்கு முன் பார்த்ததில்லையே?”

ஆம் புதியவன் தான்.அருகிலிருக்கும் ராஜ்ஜியத்திலிருந்து பிழைப்புத் தேடி  வந்திருக்கிறேன்.”

ம் சரியாய் போயிற்று இங்கு இருப்பவர்களுக்கே பிழைப்பை காணும் இதில் எங்கிருநேதோ இங்கு வந்திருக்கிறாயா?”

ஏன் அவ்வாறு கூறுகிறீர்கள் இருப்பதிலேயே இந்த ராஜ்ஜியம் தான் அதிக வளமை உடையது என்று கேள்வியுற்றேனே?”

வளமைக்கு ஒன்றும் குறையில்லை.நாட்டில் இருக்கும் வளமை இங்கிருக்கும் மனிதர்களிடம் இல்லாமல் போயிற்றே அதற்கு யார் என்ன செய்ய முடியும்?”

சற்று தெளிவாகக் கூறுங்கள் எனக்குப் புரியவில்லை.”

அட நீ ஏன் இத்துனை அச்சப்படுகிறாய் ஏனெனில் உனக்கு வேலை கிடைப்பதில் சிரமம் இருக்காது.இந்துக்களாகிய நாங்கள் தான் பாவம் செய்தவர்கள்.நாளுக்கு நாள் எங்களின் நிலைதான் கவலைக்கிடமாகிவிட்டது

ஏன் தங்களின் உசூர் தங்களை கவனித்துக் கொள்வதில்லையா?”

அவர் ஓரளவு நல்லவர் என்றுதான் கேள்வி.ஆனால் எங்கள் அனைவரையும் அவர் நேரில் வந்து பார்த்துக் கொள்ள முடிவதில்லையே.மற்ற அரசவை உறுப்பினர்கள் பார்வையிலேயே நாங்கள் இருக்கிறோம்.அவர்களோ இஸ்லாம் மக்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்குகிறார்கள்.

அதிலும் இப்போதெல்லாம் அவர்களின் அராஜகம் அதிகரித்துவிட்டது.இப்படியே சென்றால் இந்துமதத்தை சார்ந்த நாங்கள் யாருமே இம்மண்ணில் இருக்க முடியாது என்றே தோன்றுகிறது.

சரி விடு இதையெல்லாம் உன்னிடம் கூறி என்னவாகப் போகிறது.நீ வந்த வேலையைப் பார் நான் என் வேலைகளை கவனிக்கச் செல்கிறேன்”,என்றவர் உள்ளே சென்றுவிட நஸீம் தன் வீரனோடு அரண்மனையை வந்தடைந்தான்.

வந்தவன் தீவிர யோசனையில் இருந்தான்.எதோ ஓரிடத்தில் பிழை செய்திருக்கிறேன் அது என்னவாக இருக்கும்.எனக்கு கீழ் நம்பிக்கையானவர்களைத் தானே அரசவை உறுப்பினர்களாய் வைத்திருக்கிறேன்.அப்படியிருந்தும் இது எவ்வாறு சாத்தியம்.

நஸீம் தன் சிந்தனைகளில் மூழ்கியிருந்த நேரத்தில் ரஹீம் அவனை சந்திக்க வந்தான்.

உசூர்!!”

சொல் ரஹீம் சென்ற விடயம் என்னவாயிற்று?ஏதேனும் புதுத் தகவல் உண்டா?”

உசூர் நம் சந்தேகத்திற்குட்பட்டவர்களை மிகக் கடுமையாக விசாரித்தாயிற்று ஆயினும் இந்த செயல்களுக்கு யாரும் பொறுப்பேற்க மறுக்கிறார்கள்.அதுமட்டுமன்றி கடந்தமுறை தங்களை தாக்க வந்தவரின் நிலையறிந்தபின் அந்த அச்சத்தினாலேயே யாரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறுகின்றனர்.

ஆனால்..”

ஆனால்??!”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.