ஒரு வாரத்திற்கு பின்பு..........
சென்னை விமான நிலையம் மிக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது எங்கே பார்த்தாலும் பயணிகள் தங்கள் சாமான்களை ட்ராலியில் தள்ளி செல்கின்றனர். மின்னணு காட்சி திரையில் அட்டவணைப்படி விமானத்தின் வருகை, புறப்படும் நேரம், இடம் ஆகியவற்றை காண்பித்துக் கொண்டிருக்கிறது.
"குட்மார்னிங் பேசஞ்சர்ஸ் திஸ் இஸ் தி அன்னோஸ்மெண்ட்
போர் பிலைட் நம்பர் 6E2443 ஃப்ரம் டெல்லி”
என்று விமான அறிவிப்பாளர் கூறிக்கொண்டிருக்க விக்கி தன் கையில் விளம்பர பலகையுடன் மன்வீரின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறான். விமானம் தரையிறங்கியது அனைவரும் வெளியே வந்து கொண்டிருந்தனர் சட்டென்று விக்கியை யாரோ பின்னாலிருந்து தட்டி ஹலோ! நீங்க விக்கியா? என்று கேட்டான் மன்வீர். ஆமாம் நான் தான் விக்கி நீங்கதான் பாடிகார்ட் மன்வீரா? “ஓ ஐ அம் சாரி” பாடிகார்ட்டுனா கருப்பு சூட் கண்ணாடிலாம் போட்டுகிட்டு டிப் டாப்பா வருவாங்கன்னு நினைச்சேன் அதனால உங்கள சரியா கண்டுபிடிக்க முடியல என்று தலையை சொரிந்தான் விக்கி. “இட்ஸ் ஓகே நோ ப்ராப்ளம்” நாம போகலாமா என்றதற்கு அப்கோர்ஸ் என்று கூறி மன்வீரை தன்னுடன் காரில் அழைத்து சென்றான் விக்கி.
அப்புறம் மன்வீர் நீங்க சென்னைக்கு புதுசா ? தமிழ் பேச தெரியுமா?? இல்லை நான் ஏற்கனவே இங்க வந்து இருக்கேன் ஒரு கேஸ் விஷயமா என் நண்பன் சலீம் இங்கதான் வேலை பாக்குறான் அவனோட தான் என் நேரத்தை இந்த சிட்டில ஸ்பெண்ட் பண்ணுவன் அப்பா தமிழ் அம்மா அசாமிசி அதனால தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தெரியும் என்றான் மன்வீர். ஓ சூப்பர் ஜி ! நானும் சாராவும் கூட இப்படித்தான் ஃப்ரீ டைம் கிடைச்சா போதும் நல்ல ஊரை சுத்துவோம் என சிரித்துக்கொண்டே சொன்னான் விக்கி. மன்வீர் அதை கண்டுகொள்ளாமல் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தான் அதை பார்த்த விக்கி இவன் சரியான திமிர் பிடிச்சவன் போல மூஞ்ச பாரு இவன் கிட்ட பேசுறது செவிடன் காதில சங்கு ஊதின மாதிரி என்று மனதில் நினைத்து கொண்டே காரை வேகமாக ஓட்டத் தொடங்கினான்.
மேடம் வராங்க……. மேடம் வராங்க ……..என்று மிகப்பெரிய ஷாப்பிங் மாலில் வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரும் இந்த செய்தியை பரிமாற்றம் செய்து கொண்டே சுறுசுறுப்பாகவும் கவனத்துடனும் அவர்கள் பணியை தொடர்ந்து கொண்டிருந்தனர். காரில் வந்து இறங்கிய உடன் தன் கையில் இருக்கும் சன் கிளாஸ்ஸை போட்டுக்கொண்டு மாலின் உள்ளே கம்பீரமாக நடந்து வந்தால் திவான் குரூப்பின் சி. இ. ஒ ரதி தேவேஸ்வர். திவான் குரூப் தென்னிந்தியாவின் மிகப்பெரிய பிசினஸ் நிறுவனமாகும். ஷாப்பிங் மால், பல்பொருள்
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
look forward to read next update. Thank you and keep rocking!!