(Reading time: 18 - 36 minutes)

செலக்ட் பண்ணி இருக்கேன் ஜி என்றான் விக்கி. ம்.....ஐ சி என்கிட்ட சொல்லியிருந்தா நானே ஒரு பெஸ்ட் பாடிகார்ட சாராவுக்காக தேர்வு செஞ்சிருப்பேனே விக்கி, சரி நான் அந்த பாடிகார்ட பார்க்கணும் சில முக்கியமான விஷயங்கள் எல்லாம் பேசணும் அவனை என்ன பாக்க வரச் சொல்லு,சரி இப்ப சாரா எங்க விக்கி? சாராவ இப்ப தான் ஜி கஷ்டப்பட்டு தூங்க வெச்சிருக்கேன் பாவம் சின்ன பொண்ணு ரொம்ப அப்செட் ஆயிட்டா என விக்கி கூற ம்……ஒ கே டேக் கேர் ஆப் ஹெர் நான் அவள அப்புறமா வந்து பாக்குறேன் என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினாள் ரதி.

 பால்கனியில் நின்று தேனீர் அருந்திக் கொண்டிருந்தாள் ரதி திடீரென ஒரு குரல் “ஹலோ! மேடம்” என்று கேட்டவுடன் திரும்பிப் பார்த்தால் ரதி. மன்வீர் பார்ப்பதற்கு ஆறடி உயரம், கட்டுக்கோப்பான உடல், பஸ்ஸ் கட் ஹேர்ஸ்டைல், கம்பீரமான குரல் என ஐ. எஸ்.ஐ முத்திரை குத்தியது போன்று பெர்பிக்ட் பாடிகார்டாக தெரிந்தான்.ஓ…… நீதான் மன்வீரா உன்னோட ப்ரொபைல் பார்த்தேன் நாட் பேட் உன் கிட்ட நல்ல திறமையும் சூழ்நிலையை கையாளும் திறனும் இருக்கு “ஐ அம் இம்ப்ரெஸ்ஸ்ட் “ எனக்கு வேண்டியது ஒன்னே ஒன்னு தான் என் பொண்ணு சாராக்கு எந்த ஆபத்தும் வராமல் நீ பார்த்துக்கணும் அப்படி நீ பார்த்துகிட்டனா சாரா தர சம்பளத்தை விட நான் உனக்கு டபுள் மடங்கு தருவேன் என்ன சொல்ற?? என்றால் ரதி. மேடம்… அவங்கள பத்திரமா பாத்துக்கறது என்னோட கடமை அதுக்கு நான் வாங்குற சம்பளமே எனக்கு போதும் அதை தவிர்த்து வேறு எந்த ஒரு பணத்தின் மேலயும் எனக்கு விருப்பமில்லை சாரி… உங்க சலுகையை நிராகரித்ததற்கு என்று ரதியின் பணக்கார திமிர் பேச்சுக்கு பதிலடி கொடுத்தான் மன்வீர். உண்மையில் இவன் நேர்மையான ஒரு சிறந்த பாடிகார்ட்தான் என்று கம்பீரமாக நடந்து சென்ற மன்வீரை கூர்ந்து பார்த்தால் ரதி.

 ஸ்கை ப்ளூ அப்பார்ட்மெண்ட்டில்......................

 அதிகாலை ஐந்து மணி அளவில் ஷார்ட்ஸ் பனியன் போட்டுக்கொண்டும் டிராக்பேண்ட் டி ஷர்ட் போட்டுகொண்டும் காதில் ஏர் போன் மாட்டிக்கொண்டும் தலையில் ஹெட் பேண்ட் போட்டுக்கொண்டும் ஸ்கை ப்ளூ அப்பார்ட்மெண்டை சுற்றியுள்ள திடலில் ஜாகிங் செய்து கொண்டிருக்கின்றனர் அந்த அப்பார்ட்மெண்டில் குடியிருக்கும் சிலர். ஸ்கை ப்ளூ அப்பார்ட்மெண்டை சுற்றி ஜிம், ஸ்விம்மிங் பூள்,கிளப் ஹௌஸ்,மல்டி புரபோஸ் ஹால்ஸ், சில்ரன்ஸ் பார்க்,சவுனா அண்ட் ஸ்பா,பிரீ ஒய்-ஃபை இன்டர்நெட் அக்சஸ் என பல வசதிகள் இருக்கிறது.அதனால் உடற்பயிற்சி, நீச்சல், யோகா என அந்த அப்பார்ட்மெண்டில் வசிப்பவர்கள் தினமும் காலையில் தங்களை ரெபிரேஷ் செய்து கொள்கின்றனர். ஹலோ குட் மார்னிங்! ஐயர் சார் என்ன இந்த பக்கம்? கோர்ட்டுக்கு போகலையா? என்று அப்பார்ட்மெண்ட் வாசி வேணு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.