(Reading time: 18 - 36 minutes)

குட்டியை பார்த்து அழுது கொண்டிருக்கிறாள் சாரா. இதை உத்து பார்த்தே கண்டுபிடித்துவிட்டான் மன்வீர் ஹேர் டிரையர் கருவி குளியல் தொட்டியில் விழுந்து இருப்பதை சார்ஜ் செய்து பிளக்கில் பொருத்தியிருந்த ஹேர் டிரையர் தொட்டியில் நீண்ட நேரம் மூழ்கி இருந்திருக்கிறது அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து சீசரை தாக்கியதால் அது இறந்து விட்டது. விக்கி தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்கும் சாராவை சமாதானப்படுத்தி அமரவைத்தான் கிளாசில் தண்ணீர் ஊற்றி கொடுத்து அவளைத் குடிக்க வைத்தான். நீங்கதான் ஹேர் ட்ரையரை தண்ணீரில போட்டிங்களா? இல்லை நான் போடல என் ட்ரெஸ்ஸிங் டேபிளில் தான் வெச்சிருப்பேன் அது எப்படி இங்க வந்ததுன்னு தெரியல நான் குளிக்க தான் பாத் டப்ப தயார் செஞ்சேன் டப் வுல்லா சோப் வாட்டர் நிரம்பி இருந்துச்சு அதனால என்னால ஹேர் டிரையர பாக்க முடியல நான் குளிக்க போறதுக்குள்ள சீசர் ஓடி வந்து குதிச்சிட்டான் என்று சோகமான முகத்துடன் மன்வீரிடம் கூறினால் சாரா. இதை சாராவை கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் யாரோ செய்திருக்க வேண்டும் என்பதை யூகித்தான் மன்வீர்.

 சற்று நேரத்தில் “ இங்க என்ன நடக்குது விக்கி?” என்று சாராவின் அம்மா வீட்டின் கதவை படாரென திறந்து விரைந்து வந்து கேட்டாள். அது ஒன்னுமில ரதி ஜி நம்ம சீசர் தண்ணீரில மூழ்கி இறந்துட்டான் என்று விக்கி தடுமாற்றத்துடன் கூறினான். போதும்... நீ வேற எதுவும் சொல்ல வேணாம் நீயும் சாராவோட சேந்துகிட்டு என் கிட்ட எந்த விஷயத்தையும் சொல்ல மாட்ற என்ன நடந்தாலும் மூடி மறைச்சிடுற பட் ஐ அம் நாட் எ ஃபூல் இங்க என்னலாம் நடக்குதுன்னு எனக்கும் தெரியும் எனக்காக வேலை செய்ரவங்க நிறைய பேர் இருக்காங்க அத நியாபகத்துலா வெச்சிக்கோ விக்கி, கடந்த ஒரு மாசமா அவள காப்பதுறதுக்காக நான் எவ்ளோ கஷ்ட பட்டேன்னு தெரியுமா விக்கி இதுக்குத்தான் சொல்றேன் சாராவ எங்களோட வந்து இருக்க சொல்றேன் ஆனா இந்த சாரா ரொம்ப பிடிவாதம் பிடிச்சவ நான் தனியாத்தான் இருப்பேன் எனக்கு பிரீடொம் வேணும் நிம்மதி வேணும்னு தேவையில்லாம பொய் சொல்றா அதனாலதான் இப்படி எல்லாம் நடக்குது என்று தன் கோபத்தை கொட்டித் தீர்த்தாள் ரதி. கவலைப்படாதீங்க ரதி ஜி, இந்த மாதிரியெல்லாம் இனி நடக்காது சாராவுக்கு பாதுகாப்பா இப்ப ஒரு பாடிகார்ட அப்பாயிண்ட் பண்ணியிருக்கேன். இனிமேல் நீங்க டென்ஷன் ஆக வேண்டாம் என்று ரதியை சமாதானப்படுத்த முயற்சி செய்தான் விக்கி. பாடிகார்டா?? எனக்கு தெரியாமயா? என்ன சொல்ற விக்கி இங்க என்னதான் நடக்குது? அது ஒண்ணும் இல்ல ஜி நம்ம சாரா எங்க போனாலும் ஒரே ரசிகர்கள் கூட்டமும் மக்கள் கூட்டமும் வந்து சுத்தி வலைச்சுடுறாங்க அது மட்டும் இல்ல இந்த மாதிரி ஏதாவது விபரீதம் நடக்கக்கூடாது இனி இத மாதிரி நடக்காம இருக்க அப்புறம் நம்ம சாரா ப்ரியாவும் பாதுகாப்பாகவும் இருக்கத்தான் நானே ஒரு பாடிகார்டா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.