(Reading time: 18 - 36 minutes)

எதையும் கண்டுக்காம எல்லார்கிட்டயும் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிடனும் அவ்வளவுதான் என்று அசட்டுத்தனமாக சிரித்தான் விக்கி. இதைக் கேட்ட மன்வீர் ம்ம்ம்….என்று லைட்டாக தலையசைத்து அப்படியா என்பதைப்போல் விக்கியை பார்த்தான்.

 சரி.. அதவிடு மன்வீர் அப்புறம் சொல்லு உனக்கு கொடுத்த ப்ளாக் புடிச்சிருக்கா? கம்ஃபர்டபிளா இருக்கா? சாரா வீட்டு பக்கத்திலேயே பிடிக்காம இருக்குமா இந்த ஃப்ளோர்ல மொத்தம் அஞ்சு ப்ளாக் இருக்கு சாரா, இந்த வேணு, நீ அப்புறம் ரெண்டு ரெசிடென்ட் இருப்பீங்க ரொம்ப காஸ்ட்லியான அப்பார்ட்மெண்ட் அதனால பாத்து நடந்துக்கோ எந்த பிரச்சனைக்கும் போகாத மன்வீர் இப்படித்தான் வம்பு பண்ண சில பேர் வருவாங்க என்று எச்சரித்தான் விக்கி.

 திவான் ஓட்டலில்………….

 செக்மேட் ……..இந்த தேவேஸ்வர ஜெயிக்க யாராலயும் முடியாது என வாயில் இருந்த சிகரெட்டை இழுத்து புகையை ஊதி விட்டு திமிரமாக கூறினான் திவான் குரூப்பின் தலைவரான தேவேஸ்வர். சே…. உங்கள மிஞ்ச யாருமே இல்ல “டான் “ எப்படியும் ஜெயிச்சுடுறீங்க உங்ககிட்ட மோதவே பயமா இருக்கு என் பாக்கெட் பணம் காலி இன்னிக்கி என்று கூறினான் கமிஷனர் மூர்த்தி. நம்ம டான் யாரு பெரிய பிசினஸ் மேக்னேட் அவரோட திறமைனாலையும் புத்திசாலித்தனத்தினாலயும் தான் திவான் குரூப் பெரிய நிறுவனமா இருக்கு இவரோட புண்ணியத்துல தான் நம்ம வாழ்க்கை எனும் வண்டி ஓடிட்டு இருக்கு என டாக்டர் பிரசாத் மறுபக்கம் கூறினார். என் பார்ட்னர என்னப்பா ஒரேடியா எல்லாரும் புகழ்றீங்க உங்களுக்கு ஏதாவது காரியம் ஆகணுமா? என்று கேள்வி எழுப்பினான் தேவேஸ்வரின் நண்பனும் பிசினஸ் பார்ட்னராக திகழும் வனத்துறை அமைச்சர் தங்கவேலு.அதெல்லாம் ஒன்னும் இல்ல ஐயா, நம்ம டான் தான் எங்களுக்கு தேவையான பங்களா,கார்,நிலம்,பேங்க் அக்கவுண்ட்ல பணம் கூடவே அடிக்கடி பெட்டி பெட்டியா மாமூல் தராறு இதுவே எங்களுக்கு ஜாக்பாட்தான் என்று கமிஷனர் மூர்த்தியும் கேங்ஸ்டர் சோபன் செட்டியும் மாறிமாறி தேவேஸ்வரை புகழ்ந்து கொண்டிருந்தனர்.

 ஷு ஷு ஷு……….. போதும் நிறுத்துங்க விட்டா என்ன கடவுள்னு சொல்லி தூக்கி வெச்சுடுவீங்க போல “ ஐ டோன்ட் வான்ட் டு ஹீஅர் திஸ் கைண்ட்ஸ் ஒப் வேர்ட்ஸ்” லெட்ஸ் என்ஜாய்! ஹே வெயிட்டர் வந்து இந்த ஷாம்பைன ஊத்து என்று தன் கையால் சொடக்கு போட்டு வெயிட்டரை அழைத்தான் தேவேஸ்வர். இதுல என்னடா தேவா தப்பு இருக்கு நீ கடவுள் மாறி அவனுங்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிற அதனாலதான் அவனுங்க உன்ன செல்லமா கெத்தா டான்னு கூப்பிடுறாங்க பசங்க என்றான் தங்கவேலு. அட…. நீ வேற வேலு கடவுள்னா

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.