(Reading time: 18 - 36 minutes)

வியர்வை சொட்டசொட்ட ஜாகிங் செய்து வந்து கொண்டிருந்த சுப்பிரமணி ஐயரை பார்த்து கேட்டுக்கொண்டிருந்தான். ஆமாம்.. பா வேணு என்ன பண்றது எனக்கு டைம் கிடைக்கிற நேரம் தான் என்னால இதெல்லாம் பண்ண முடியும் உன்னை மாதிரி தினமும் எக்சர்சைஸ் பண்ணனும்னு எனக்கும் ஆசைதான் பட் வாட் டு டூ? டைம் இல்லையே என்று ஐயர் கூற சரி.. சரி.. ஐயர் சார் ரொம்ப ஓடி ஒரே நாளுல உடம்பைக் குறைக்கிறேனு கிரவுண்டை பள்ளம் ஆகிடாதீங்க புதிய அப்பார்ட்மெண்ட் நிறைய காசு போட்டு வாங்கிற்கோம் பாத்து என ஐயரை நக்கலடித்து சிரித்தான் வேணு. அட போடா….. இந்த வேணுக்கு வேற வேலையே இல்ல ஊருல ஒருத்தர விடுறதில்ல எல்லாரையும் வம்பு வளிக்கிறது என்று கடுப்புடன் ஐயர் கூற என்ன சார் பண்றீங்க? இந்த வேணு பையன் பத்திதான அவன் நம்பல மட்டுமா இப்படி கேலி பண்றான் நம்ம அப்பார்ட்மெண்ட்ல இருக்குற லேடிஸ், கிட்ஸ், செக்யூரிட்டி, கிளீனர்,அப்புறம் அபார்ட்மெண்டுக்கு வரப்போற விசிட்டர்ஸ்ச கூட விடமாட்றான் இவ்வளவு ஏன் இந்த அப்பார்ட்மெண்ட் பிரசிடென்ட் என்னையே மதிக்க மாட்றான் இந்த பையன் என்று நொந்து போன நூடுல்ஸ் போல ஐயரிடம் புலம்பினார் கோபி.

 ஹாய் லேடிஸ்! என்ன பண்றீங்க?? என்று ஜோஸாக ஜாகிங் செய்து கொண்டே பார்க்கில் யோகா செய்து கொண்டிருக்கும் பெண்களை சீண்டினான் வேணு. ஹாய் வேணு! நாங்களா எப்பயும் போல தான் குரூப்பா சேர்ந்து யோகா பண்றோம் ரொம்ப போரடிக்குது புதுசா ஏதாவது பண்ணலாம்னு யோசிக்கிறோம் என்றாள் சித்ரா. வாவ்… சித்ரா ஆண்ட்டி புதுசா தானே நானே உங்களுக்கு சொல்லித் தரேன் வாங்க என்றான் வேணு. என்ன வேணு புதுசா சொல்லித்தரப் போற என சித்ரா கேட்க அதுவா ஆண்ட்டி ஒன்னும் இல்ல இப்ப கரண்ட் ட்ரெண்டுல கலக்கிட்டு இருக்குற “ ஜும்பா டான்ஸ்” என்றான் வேணு. ஜும்பாவோ? ரம்பாவோ? என்ன சொல்ற வேணு இதெல்லாம் எங்களுக்கு செட்டாகுமா என்று குழப்பத்துடன் கேட்டால் சித்ரா அதெல்லாம் செட்டாகும் ஆண்ட்டி அப்படி ஆகலைனா நாம அத செட் பண்ணிக்க வேண்டியதுதான் என்று சொல்லிவிட்டு

 ஒன் …..டூ….. த்ரீ…… ஃபோர்….

என தன் காலை அசைத்து இடுப்பை வளைத்து சில மூவ்மென்ட்டை போட்டான் வேணு. வாவ்….. சூப்பரா இருக்கு வேணு என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்த அனைத்து பெண்களும் வேணுவை பார்த்தே ஜும்பா டான்ஸ்ஸை அவன் கூட சேர்ந்து ஆடினர்.இப்ப தான் ரொம்ப என்தூவவும் எனர்ஜிடிக்காவும் பீல் பண்றேன் சோ குட்… இதுக்குதான் நம்ம வேணு வேணும்னு சொல்றது இந்த அப்பார்ட்மெண்ட்லயே நம்ம வேணு தான் ஸ்மார்ட் என்று பெண்கள் வேணுவை புகழ்ந்து தள்ள இதை முறைத்துக்கொண்டே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.