(Reading time: 18 - 36 minutes)

யாரு?? நல்லது செய்றவரு நல்லவங்கள காப்பாத்துறவரு நாம என்ன பண்றோம்? நோ… நோ… நம்ம பண்ற எல்லாமே தீமை தான் தப்பு தான் அது என்னன்னு உனக்கு தெரியாதா?? ?????? நீ கவலைப்படாத தேவா …..உன் பாலிய நண்பன் நான் உனக்கு பக்கபலமா இருப்பேன் நம்ம அரசியல் செல்வாக்கு இந்த மூர்த்தி சோபன் எல்லாம் நம்ம பசங்க அப்பறம் நம்ம நலம் விரும்பிக நிறைய பேர் இருக்கானுங்க உனக்கு எந்த பிரச்சனை வந்தாலும் அவனுங்க சரிக்கட்டிடுவானுங்க “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா” ஐம்பது வயது ஆகியும் ஆரோக்கியமும் தெம்பும் ஸ்டைலும் நிறஞ்சி டான் மாதிரி இருக்கும் நம்ம தேவாக்கு வாழ்த்துங்க டா…….என்று கூறி தங்கவேலு சரக்கு பாட்டிலை தட்டி ஓபன் செய்து அடிச்சு தூக்குங்கடா என ஷாம்பைன் பொங்க பார்ட்டியை கொண்டாடினர்.

 சாரா வீட்டில்………......

 டாடி கூல்…. டாடி கூல்….. என ஆங்கிலப் பாடல் கொண்ட சாராவின் மொபைல் ரிங்டோன் அடிக்க முகத்தில் இருந்த பெட்ஷீட்டை எடுத்து விட்டு போனை ஆன் செய்தால் சாரா. ஹலோ என்ற அவளிடம் சாரா நான்தான் அம்மா பேசுறேன் இன்னிக்கி என்ன நாள் தெரியுமா? தெரியாதா உனக்கு? அப்பா பர்த்டே இன்னிக்கி நீ அவருக்கு இன்னும் விஷ் பண்ணிருக்க மாட்டேன்னு எனக்கு நல்லா தெரியும் ஒழுங்கா மரியாதையா விஷ் பண்ணிட்டு ஈவினிங் பார்ட்டிக்கு வந்து சேர பாரு என்று சாராவை ஆர்டர் செய்தாள் ரதி. அம்மா….. போதும் நிறுத்து இங்க என்ன நடக்குதுன்னு உனக்கு தெரியுமா தெரியாதா நம்ம சீசர் செத்துப் போயிட்டான் என்று கோபமாக பதில் அளித்தாள்.ஐ நோ எவரித்திங் சாரா பட் வாட் டு டூ? பாஸ்ட் இஸ் பாஸ்ட் இனி நடக்க வேண்டியத பாக்கணும் வேக்கப் சாரா வேக்கப் என்று ரதி கூற போதும்மா…… இனி நீ எதுவும் சொல்ல வேணாம் நான் பார்ட்டிக்கு வரணும் அவ்வளவு தானா சரி என்று கூறி கோவமாக டக்கென்று காலை கட் செய்தாள் சாரா. இந்த பொண்ணு எப்பதான் திருந்த போறாலோ என் பேச்சை எப்ப தான் கேட்க போறானு தெரியல ஒரே இரிடேட்டிங்கா இருக்கு என்று ரதி மறுபக்கம் சலித்துக்கொண்டாள்.

 பெட்டில் இருந்து எழுந்து ஸ்லிப்பரை போட்டுக்கொண்டு ஓவர் கோட்டை மாட்டிக் கொண்டு தலையைக் கொய்து கொட்டாவி விட்டுக் கொண்டே தன் பாத்ரூமில் இருக்கும் கண்ணாடியில் முகத்தைப் பார்த்தால் சாரா. கவலையினாலும் இடைவிடாமல் அழுததாலும் அவளுடைய முகம் பொலிவில்லாமல் காணப்பட்டது அதை பார்த்த அவள் “சியர் அப் சாரா” இன்னும் நிறைய இருக்கு இந்த மாதிரி வலிகளை தாங்கி தான் ஆகணும் பி ஸ்ட்ராங் பி ஸ்ட்ராங் என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டே டூத் பிருஷை கையில் எடுத்து பல் துளக்க ஆரம்பித்தாள் அப்போது திடீரென கண்ணாடியில் யாரோ நடந்து போவது போல உருவம் தோன்றியது அவளுக்கு,உடனே சட்டென திரும்பி குடுகுடுவென ஆலுக்கு ஓடி வந்தாள். யாரது? யாரது? என்று அவள் கத்தி கேட்டுக்கொண்டிருக்க சீசர் விளையாடிய ஜம்பிங் பால்கள் கீழே சிதறிக் கிடந்தன ஓடிவந்த வேகத்தில் அதை கவனிக்காமல் அதில் மேல் காலை வைத்து கீழே விழ போன சாராவை திடீரென்று ஒரு கை வந்து தாங்கியது .அம்மா…… என்ற அலறலுடன் தன்னை தாங்கி நிற்கும் மன்வீரை கண் இமைக்காமல் உற்று நோக்கினால் சாரா.

அதிரடி தொடரும்...

Episode # 02

Episode # 04

Go to Hello my bodyguard story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.