(Reading time: 10 - 20 minutes)
Senthamizh thenmozhiyaal
Senthamizh thenmozhiyaal

“அந்தப் பக்கம் நிறைய ஆளில்லா தீவுகள் உண்டு. முன்பு ஒரு முறை சரக்கு கப்பல் ஒன்று விபத்தாகிவிட அந்தத் தீவுகளில் கரை ஒதுங்கிய பலரை மீட்ட வரலாறு உண்டு” என்று மீட்புக் குழுவில் இருந்த மூத்த வீரர் ஒருவர் கூற ஆதிக்கு அப்போது தான் சற்று ஆறுதலாக இருந்தது.

தானும் உடன் வருவதாக பிடிவாதமாக சென்றவன் ஹெலிகாப்டரில் அவர்களோடு இந்து மகா சமுத்திரத்தின் மேல் பறந்து சென்றான்.

பைனாகுலர்களின் உதவியோடு ஏதேனும் கரைப்பகுதி தென்படுகிறதா என்று உற்று நோக்கிக் கொண்டே வந்தான்.

நாள் முழுவதும் தேடுதல் தொடர்ந்தும் தேன்மொழியை அவர்களால் கண்டு பிடிக்கவே முடியவில்லை.

அப்போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

மாலைச் சூரியனின் கதிர்கள் கடலில் மேனியை பொன்னிறமாக மின்னச் செய்து கொண்டிருக்க வட்ட வடிவில் செந்தீப் பிழம்பு  கடலில் நகர்ந்து சென்று கொண்டிருந்தது ஆதி மற்றும் மீட்புக் குழு வீரர்களின் கண்ணில் பட்டது.

அது என்ன என்று அறிந்து கொள்ளும் ஆவலில் ஹெலிகாப்டரை செலுத்திக் கொண்டிருந்த வீரர் சற்று தாழ்வாக பறக்க காற்று எதிர்திசையில் வீசியதால் மேலே எழும்பி வட்டமடித்து எதிர்புறமாக ஹெலிகாப்டரை அவர் திருப்பிய போது அந்த வெண்மணல் பரப்பு மற்றோர் வீரரின் கண்ணில் பட்டது.

அவர் அங்கே சுட்டிக் காட்டாவும் அந்த மணல் பரப்பை நோக்கி ஹெலிகாப்டரை செலுத்தினார்கள்.

மாலை மங்கும் நேரம். செந்தமிழின் வரவை எதிர்ப்பாத்து காத்துக் கொண்டிருந்தாள் தேன்மொழி.

அப்போது தான் அந்த ஓசை அவள் செவிகளை அடைந்தது.

ஏதேனும் விமானமாக இருக்குமோ என்று பாறை மீது ஏறினாள்.

உதவி என்று ஆங்கிலத்தில் பெரிய பெரிய எழுத்துக்களாக அவள் கற்களாலும் கடல் தாவரத்தாலும் வரைந்து வைத்திருந்தது ஆதியின் கண்களில் பட்டுவிட்டது.

அவன் அதை மற்றவர்களிடம் காண்பிக்க உடனே அந்த மணல்பரப்பில் ஹெலிகாப்டரை இறக்கினார்கள் வீரர்கள்.

சற்று தூரத்தில் ஹெலிகாப்டர் ஒன்று இறங்கவும் தனக்காக வந்தது என்று தேன்மொழி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.