(Reading time: 12 - 23 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

ராஜபுத்திரர் என்றாலும், தற்போது அவர் அக்பரின் அடிமை. எனவே அவர்கள் பழக்கங்களை அவர் முழுதுமாகக் கடைப் பிடிக்கிறார். குறைந்த பட்சம் அக்பரோ, அவரின் படைத் தலைவர்களோ முகாமிட்டு இருந்தால், அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க முஹலயாரின் வழக்கங்களைப் பின்பற்றுகிறார். எனவே , நாம் இருவரும் அவர்களின் வழக்கப்படி புர்கா எனப்படும் கருப்பு அங்கி அணிந்து கொள்ள வேண்டும். இங்கிருந்தே அணிந்து செல்வது பாதுகாப்பு. வழியில் எதிர்ப்படும் வீரர்களை சமாளிக்க உதவும்” என்றுக் கூறவும் , அவளின் அறிவுக் கூர்மையில் இருவரும் வியந்தனர்.

காமினியின் சொல் படி காமினி, இளவரசி இருவரும் முஹலயார்களின் உடை அணிந்து கொண்டனர். ராம்சந்த், இளவரசன் இருவரும் முன்னே செல்ல, இவர்கள் இருவரும் பின்தொடர்ந்தனர்.

ஒரு நாழிகை மணி நேரப் பயணத்திற்குப் பின், கோட்டை வாயில் தென்பட, இளவரசன் திரும்பி

“தேவி, இனி நாங்கள் உடன் வர இயலாது. இருவரும் தொடர்ந்து செல்லுங்கள்.” என்றவன், ராம்சந்த் பின் கண் திருப்ப, அவன் உணர்ந்து கொண்டவனாக சற்று தூரம் தள்ளிச் சென்றான். அவன் அகலும்போதே காமினியும் அவனோடு சென்று நின்றுக் கொண்டாள்.

இளவரசன் ப்ரித்விராஜ் கிரண் தேவியின் கையைப் பிடித்து தன் கைகளோடுக் கோர்த்துக் கொண்டான். ராணியைத் தன் புறம் இழுத்தவன்,

“தேவி, மிகவும் கவனமாக இரு. உனக்கு ஆபத்து எனில் , தயங்காமல் சம்பந்தப் பட்டவரை வீழ்த்தி விடு. அதன் பிறகான விளைவுகளை நான் எதிர் கொள்கிறேன்”  என்றான்.

“தாங்கள் அருகில் இருக்கையில் என்னை எந்தப் பிரச்சினையும் அணுகாது பார்த்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. மேலும் ஆம்பர் கோட்டையில் எனக்கு ஆபத்து வர வாய்ப்பில்லை. எதிரிகள் என்றாலும் ராஜபுத்திரர்கள்தானே. நான் வெளிப்பட்டு விட்டால் வீரர்களே என்னைப் பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதே போல் நம் ராணாவின் கனவான சித்தொர்கர் ராஜ்யமும், அக்பரை வெற்றிக் கொள்வதும் நிறைவேற, என்னால் முடிந்த காரியங்களைச் செய்ய எண்ணுவதால், இரு மடங்கு கவனத்துடன் இருக்கிறேன் இளவரசே”

அவளை இறுக்கமாக அணைத்துப் பின்

“செல் தேவி. விரைவில் சந்திப்போம்” என்று அனுப்பி வைத்தான் ப்ரித்விராஜ்.

இத்தோடு அன்றையக் கனவு முடிய, கிருத்திகா சலிப்புடன் எழுந்தாள்.

“கடவுளே. என்னக் கொடுமை இது? முழுக் கனவும் வரலை. பாகுபலி பார்ட் ஒன் , டூ மாதிரி

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.