(Reading time: 12 - 23 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

இது முடிவில்லாமல் போயிட்டு இருக்கே. “ என்று மனதுள் எண்ணினாள்.

பின் நேரம் பார்க்க,

“அதானே. என் மொபைல் அலாரம் அடிக்குதோ இல்லையோ , என் கனவு கரெக்ட்டா அலாரம் அடிக்குது. ஒரு வேளை இந்த கிரண் தேவி போய் சூரியனுக்கு அலாரம் அடிச்சுட்டு வந்துருக்குமோ” என்று எண்ணியவள், மற்ற வேலைகளைப் பார்த்தாள்.

அன்றைய மதியப் பொழுது வரை அவர்களுக்கு உதய்பூர் தான். இன்னும் சில முக்கியமான அரண்மனைகள் , கட்டிடங்கள் எல்லாம் பார்க்க வேண்டியது இருந்தது. ஆனால் அப்படியே புறப்பட வேண்டியது தான் என்பதால், தங்கள் லகேஜ் எல்லாம் தயார் செய்து பேருந்தில் ஏற்றினார்கள்.

வழக்கம் போல் அனைவரும் பஸ்சில் ஏறியவுடன் , சற்று நேர கலகலப்பிற்குப் பின் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு வந்திருந்தனர்.

கங்கோர் கட் என்று சொல்லக் கூடிய நதியின் கரைக்கு வந்து இருந்தனர். மும்பையின் கேட்வே ஆப இந்தியா போல் மிகப் பெரிய வாயில் போன்ற அமைப்பு இருக்க, அதற்கு சற்று தள்ளி கங்கை நதிக்கரை இருந்தது.

“என்ன சிறப்பு இங்கே பாஸ்” என்று மாணவர்கள் கேள்வி கேட்க,

“வருடா வருடம் நம் தென்னிந்தியாவில் நடக்கும் விழாக்கள் போல் இங்கும் நடக்கும். உதாரணமாக ஆடிப் பெருக்கு என்று நதிக்கரைகளில் விழா கொண்டாடுகிறோம் இல்லையா. அதே போல் இங்கே கங்கோர் கட் என்று கொண்டாடுகிறர்கள். மார்ச் – ஏப்ரலில் கொண்டாடும் இந்த விழா, தங்கள் கணவருக்காக பெண்கள் வேண்டிக் கொள்ளும் விழா. ராஜஸ்தானியர் கைவினைப் பொம்மைகளை அலங்கரித்து அதற்கு கயிறு கட்டி திருமணம் போல் செய்வார்கள். முழு விரதமிருந்து மேற்கொள்ளும் இந்த பண்டிகையை, இங்குள்ள நதியை தலையில் சேர்த்துக் கொண்டு, அத்தோடு இந்த நீரை அருந்திய பின்பே விரதத்தை முடிப்பார்கள். கேரளாவின் படகுப் போட்டிப் போல் இங்கும் படகுகளை அலங்கரித்து நதியில் மிதக்க விடுவார்கள். மற்ற நாட்களில் சிறந்த பொழுது போக்கு இடமாக இருக்கும்”

“ஒஹ். கேட்கவே இண்டரெஸ்டிங்கா இருக்கு. இந்தியா முழுதும் அநேக பண்டிகைகள் ஒன்னு போலே தான் இருக்கு”

“ஆமாம். இந்தியாவில் மக்களின் வாழ்வியலே மதமாகப் பார்க்கப்படுகிறது. அதனால் தான் எல்லா மாநிலத்திற்கும் சில பண்டிகைகள் ஒரே நேரத்திலும், சில விழாக்கள் சில கால மாற்றங்களிலும் நடக்கிறது. தமிழ்நாட்டில் கொண்டாடும் பொங்கல் பண்டிகை , வடக்கே மகர சங்கராந்தி. தமிழ் புத்தாண்டான சித்திரை மாதப் பிறப்பு, அதை ஒட்டிய தேதிகளில் பஞ்சாபில்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.