(Reading time: 12 - 23 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

பைசாகி என்றுக் கொண்டாடுகிறார்கள். இயற்கையோடு சேர்ந்த திருவிழாக்களில் சிறு வேறுபாடுகளும், கடவுளை இணைத்துக் கொண்டாடும் துர்கா பூஜா, தீபாவளி போன்றவை ஒரே போலவும் கொண்டாடுகிறோம். “

“கிரேட். இது தெரியாமல் நாம் தான் அவங்களுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி நடந்துகிட்டு இருக்கோம்”

“உண்மைதான். ஒரு சிலரால் அப்படி ஒரு பிரிவினை உண்டாக்கப் படுகிறது. உண்மையை நாம் தேடித் தெரிந்து கொண்டால் நம் ஒற்றுமை வெளிப்பட்டுவிடும்.”

பின் அங்கே குரூப் போட்டோ, செல்பி எல்லாம் எடுத்தப் பின் அடுத்த இடத்திற்குக் கிளம்பினர்.

அன்றைக்கு மிச்சம் இருந்த வேறு சில இடங்களையும் பார்த்துவிட்டு மதியம் லஞ்ச் முடித்தனர். லஞ்சின் போது அவள் அருகில் இருந்த மற்றொரு டேபிளில் அமர்ந்து இருந்தான்.

சற்று நேரத்தில் ஒவ்வொருவராக அந்த டேபிளில் உள்ளவர்கள் சாப்பிட்டு எழுந்ததும், கிருத்திகா மட்டும் ஏதோ யோசனையோடு மெதுவாக சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள்.

அவளைப் பார்த்துக் கொண்டு இருந்தான் ப்ரித்வி. மற்றவர்கள் வெளியில் சென்று பீடா போடுவதாகச் சொல்லவும், அவனும் சரி என்றான். இதை எல்லாம் கிருத்திகா கவனிக்கவில்லை.

“கிருத்தி, என்ன யோசனை?” என்றுக் கேட்கவும் , திரும்பிப் பார்த்தவள் தான் மட்டும் அமர்ந்து கொண்டு இருப்பதைப் பார்த்து எழுந்து கொள்ளப் போனாள்.

“நோ. கிருத்தி, சாப்பாடு வேஸ்ட் பண்ணாத”

“இல்லை. டைம் ஆச்சே. எல்லோரும் வெயிட் பண்ணுவாங்களே”

“ஒன்னும் பிரச்சினை இல்லை. ஐஞ்சு நிமிஷம் லேட் ஆனால் எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால் இந்தச் சாப்பாடு இல்லாமல் எத்தனை பேர் கஷ்டப்படறாங்க. நமக்குக் கிடைச்சத நாம வேஸ்ட் பண்ணக் கூடாது”

“சாரி. எப்போவும் இப்படிப் பண்ணமாட்டேன். ஏதோ யோசனையில் டைம் பார்க்கலை” என்று வேகமாகச் சாப்பிட ஆரம்பித்தாள்.

“மெதுவா சாப்பிடு. தொண்டையில் அடைசுக்கப் போகுது”

அவன் சொல்படி மெதுவாக என்றாலும், கொஞ்சம் வேகமாகவே சாப்பிட்டு வந்தாள். அவள் ஹன்ட் வாஷ் செய்து விட்டு வரவும்,

“என்ன அவ்ளோ யோசனை கிருத்தி? இளவரசர் பற்றியா?” என்றுக் கேட்கவும், திடுக்கிட்டாள்.

உண்மையில் அவள் இளவரசரைத் தான் அப்போது யோசித்துக் கொண்டு இருந்தாள். அவள் திரு திரு என்று முழிக்கவும், மெதுவாகச் சிரித்தவன்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.