(Reading time: 13 - 26 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

“நான் சொல்ல வந்ததை மறந்து விட்டேன் பார். நாங்கள் போட்டத் திட்டம் பற்றி இன்று தனியாக இருக்கும் போது உன் பெரியப்பவிடமும் பேசிவிடு. உனக்குத் தைரியமாக இருக்கும். மோர் ஓவர் நிச்சயம் உனக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் அந்த ஆபரேஷனை முடிக்க முயற்சி செய்வோம்.” என்றுக் கூறவும்,

சரி பாஸ் என்றாள்.

அதற்குள் மற்ற எல்லோரும் வந்துவிடவே, மீண்டும் அவர்களின் பயணம் ஜெய்பூர் நோக்கித் தொடர்ந்தது.

ராஜஸ்தானின் தலைநகரமான ஜெய்பூர் UNESCO நிறுவனத்தால் பண்பாட்டு நகரங்களுள் ஒன்று. பழமையும், கட்டிடக்கலையின் நுணுக்கங்களும் கொண்ட நகரம். சிவில் இன்ஜினியரிங் படிக்கிற ஒவ்வொருவரும் கட்டாயம் காண வேண்டிய இடம்.

மாலை நேரத்திற்குச் சற்று முன்னதாக ஜெய்பூர் வந்து சேர்ந்து விட்டதால், நேராக ஜந்தர் மந்திர் சென்றனர்.

வெளியில் இருந்துப் பார்க்க ஒரு கட்டிடமாகத் தெரியும் இந்த இடம், உண்மையில் மிகப்பெரிய வானியல் ஆராயிச்சிக் கூடமாகும்.

ராட்சத சூரியக் கடிகாரம் அதிலும் கல்லில் செய்யப்பட்டது இங்கே இருக்கின்றது. அதில் விழும் நிழல் மூலம் நேரத்தைக் கணக்கிடவும், ஜந்தர் மந்திரில் உள்ள தூண்கள் மூலம் பருவ நிலை மாற்றங்களை கணக்கிட உதவும்.

பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம் , உலகளவில் ஆராயிச்சி செய்பவர்களுக்கு அதிசயமான இடம். எப்படித் துல்லியமாக நேரம் கணக்கிடும் அளவிற்குக் கட்டப்பட்டது என்ற அதிசயம் அறிஞர்களுக்கு இன்றளவும் விளங்காத புதிர் தான்.

ப்ரித்வி ஜந்தர் மந்திர் பற்றி விளக்கிக் கூற, கேட்டுக் கொண்டிருந்த அனைவரும் வியப்புடன், பெருமையும் கொண்டார்கள். இந்தியர்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னோடிகளே. அதை நாம் ஆவணப் படுத்தத் தான் தவறி விட்டோம் என்ற எண்ணமே.

அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தப் பின், அவர்கள் தங்க வேண்டிய இடத்திற்குச் சென்றார்கள். சற்று நேரம் ரெப்ரெஷ் செய்த பின், எல்லோரையும் மாலிற்குக் கிளம்பச் சொன்னான் ப்ரித்வி.

இவர்கள் தங்கி இருந்த இடத்திற்கு  அருகில் தான் வேர்ல்ட் ட்ரேட் பார்க் மால் இருந்தது. மால் என்றதும் எல்லோரும் உற்சாகத்தோடுக் கிளம்பினார்கள்.

மாலின் உள்ளே சென்றவுடன் எல்லோரையும் அவரவர் விருப்பம் போல் செல்லச் சொன்னவன், சரியாக இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் வாசலில் உள்ள நீருற்று அருகில்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.