(Reading time: 13 - 26 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

பண்ணனும் தான் நினைச்சேன். ஆனா மறந்துட்டேன்.”

“அதானே. மறந்துட்டேன்னு சொல்றதுக்கு எதுக்கு இத்தனை சுத்தி வளைப்பு.”

“சரி மம்மி. சாரி மம்மி.”

“பொழைச்சுப் போ. இப்போ என்ன கேக்கனும்னு போன் பண்ணின?

“அது எப்படிக் கரெக்ட்டா கண்டுபிடிச்சீங்க?

“கழுதைக் கெட்டா குட்டிச் சுவர்ன்னு சொல்லலாம். பட் நீ கழுதை ஆகறதுக்காக நான் குட்டிச் சுவராக முடியாது. சோ எல்லாம் ஒரு கணக்குத் தான்”

“ஹ. ஓவர் தற்பெருமை பா”

“உண்மையாச் சொன்னா அப்படிதான் தோணும்”

“சரி. சரி. உங்க சுயபுராணம்.” என்றவள் வால் ஹாங்கிங் பற்றி விளக்கி விட்டு, எது வாங்கலாம் என்றுக் கேட்டாள். அவரும் தோன்றியதைச் சொல்ல, அது சில பல சண்டைகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்தது. மேலும் சற்று நேரம் பேசிவிட்டு வைக்கப் போகும் முன் அவளின் பெரியப்பா வந்துவிட்டதாகக் கூறி, அவரிடம் போனைக் கொடுத்தார் துர்கா.

பெரியப்பா பிரதாப் அவளிடம் பொதுவாக விசாரித்தப் பின், ப்ரித்வி சொன்னதைப் பற்றி நினைவு வர அதைப் பற்றிப் பேசினாள் கிருத்திகா.

“பெரியப்பா, ப்ரித்வி ஒரு பிளான் சொல்றாங்க? உங்ககிட்டே கேட்டுக்கச் சொன்னாங்க?”

“ஹ்ம்ம். நாங்க எல்லோரும் சேர்ந்த போட்டப் ப்ளான் தான் அது. அந்த செல்வத்தோட அப்பாவ ட்ராக் பண்ணினாலும் பெரிய அளவில் எதுவும் கண்டுபிடிக்க முடியலை. அவர் பையன கன்சோல் பண்ண ட்ரை பண்ற மாதிரி தான் பேசறார். பட் அதுவே அவனை வெறியாக்குதான்னும் தெரியலை. சோ அவனை நேரில் உன்னைப் பார்க்க வைத்தால் தான் பிடிக்க முடியும். அதை உத்தேசித்துத் தான் பிளான் செய்து இருக்கோம். நீ பிரித்விக்கு கோ ஆபேரெட் பண்ணு”

கிருத்திகா “ சரி” என்றுக் கூறினாலும், அதில் தயக்கம் இருப்பதை உணர்ந்து கொண்ட பிரதாப்,

“கிருத்திமா, வேறு யாராவதுன்னா அவனா வெளியில் வரும்வரை வெயிட் பண்ணிருப்போம்.  உனக்கு தற்காப்புக் கலைகள் தெரியும், அதோட சமயம் பார்த்து நடந்துக்கத் தெரியும்னு நம்பிக்கை இருக்கிறதால் தான் இந்த முயற்சி எடுக்கிறோம். நீ நம்பிக்கையோட இரு. எல்லாம் நல்லபடியா முடியும்” என்று எடுத்துக் கூறவே,

“சரி, பெரியப்பா” என்று நம்பிக்கையாகவே கூறி வைத்தாள்.

அவள் பேசி முடிக்கவும், மற்றவர்கள் வரவும் சரியாக இருக்க, கிருத்தியும் தன் அன்னையிடம் பேசிய அந்த வால் ஹாங்கிங் வாங்கிக் கொண்டு வந்தவுடன், நேராக பூட் கோர்ட் சென்றனர்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.