(Reading time: 13 - 26 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

அசெம்பிள் ஆகி விட வேண்டும் என்றுக் கூறி அனுப்பி வைத்தான்.

எல்லோரும் உள்ளே சுற்றவும், கிருத்தி, ராகவி, இன்னும் சிலர் இவர்களோடு சேர்ந்து முதலில் விண்டோ ஷாப்பிங் செய்தனர்.

ராகவி மற்றும் சிலர், வீட்டிற்கு ஏதாவது ஷாப்பிங் செய்ய வேண்டும் என, ராஜஸ்தான் கைவினைப் பொருட்கள் விற்கும் கடைக்குச் சென்றனர்.

அவர்கள் ஒவ்வொருவரும் செலக்ட் செய்யவே நேரம் ஆகவே, கிருத்திகாவிற்குப் போரடித்து விட, அவள் அருகில் இருந்த வேறொரு கடைக்குச் செலவதாகக் கூறிவிட்டுச் சென்றாள்.

அங்கே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்கும் போது அழகான வால் ஹான்கிங்க்ஸ் இருக்க, அதை வாங்கலாமா என்று யோசித்தாள். சரி எதற்கும் அம்மாவிடம் கேட்போம் என்று வீட்டிற்கு அழைத்தாள்.

லேன்ட் லைன் தான் அழைக்க, அவள் அம்மாவே பேசினார்.

“ஹலோ ..’

“ஹாய் மம்மி.. ஹொவ் ஆர் யூ?”

“யாருங்க பேசறது?”

“ஒ.. பதினைஞ்சு நாள் பார்க்கலைன்னா, உங்க ஆருயிர் மகளோட குரலைக் கூட மறந்துருவீங்களா தாய்க்குலமே?

“ஓஹ.. நீங்க தான் அந்த மகளா? எனக்கு ஒரு சந்தேகம். பார்க்கலைனா உருவம் தானே மறக்கும். கேட்கலைன்னா தானே குரல் மறக்கும்?

“உஸ்.. இங்கே பாருடா.. எங்க அம்மா கூட சோக் சொல்றாங்களாம்.. ஈ...ஈ.. சிரிச்சுட்டேன் போதுமா?

“அட அட.. உங்க பல்லு டால் அடிக்கிறது இங்கே க்ளேர் அடிக்குது. கொஞ்சம் கம்மி பண்ணிக்கோங்க”

“வொய் மம்மி. ஓவர் பொங்கிங்.. “

“அடிங்க. போன் பண்ணி எத்தனை நாள் ஆச்சுடி?”

“ஹி..ஹி.. ஒரு த்ரீ டேஸ் இருக்குமா?”

“உதைச்சேன்னா தெரியும். ஒரு வாரம் ஆகப் போகுதுடி. “

“நோ மம்மி. த்ரீ டேஸ் பாக் பெரியப்பவிற்குப் பேசினேனே.”

“அது நீயா பண்ணலை போலவே. அந்த இன்சார்ஜ் போனில் பேசினன்னு சொன்னாங்க.”

“ஓ. சொல்லிட்டாங்களா?” என்றவள், “அது மம்மி, அன்னிக்கு அவசரத்துலே அவர் போனில் இருந்து பேசினேன். ரொம்ப நேரம் பேசமுடியதேன்னு சட்டுன்னு கட் பண்ணிட்டேன். திருப்பிப்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.