தங்க வச்சுருக்கான்?”
“ரமா கொஞ்சம் அவங்களையும் தான் பேச விடேன்.ஏன் இத்தனை கேள்வி கேட்குற..”,என்ற பெண்மணியின் அதட்டலில் அவர் சற்றே அமைதியானார்.
“நானும் அவனும் யூஜி ப்ரெண்ட்ஸ் அப்பறம் கான்டக்ட்ல இல்ல.இப்போ இன்னொரு ப்ரெண்ட் மூலமா அவன் நம்பர் கிடைச்சது.நான் ஆர்கியாலஜி ரிசெர்ச் பண்றேன்.சோ ஜெய்ப்பூர் அரண்மனை பத்தியெல்லாம் தெரிஞ்சுக்கலாம்னு வந்துருக்கேன்.
இங்க யாரையும் எனக்கு தெரியாது அப்போ தான் மகிழன் கிட்ட பேசினேன்..தனியா வெளியில எல்லாம் தங்க வேண்டாம் இங்கேயே தங்கிக்கோனு சொன்னான் அவ்ளோ தான்..இன்னும் எதாவது கேட்கனுமா?”
“நீ ஒண்ணும் தப்பா எடுத்துக்காத டா அவ எப்பவும் அப்படி தான்.அப்பறம் என் பேர் சாந்தி தேவி மகிழனோட பெரிய அத்தை.இவரு சர்வேஷ் என் ஹஸ்பெண்ட்..இது ரமா தேவி என் தங்கச்சி இது அவ ஹஸ்பெண்ட் ராகேஷ்.
இவரு என்னோட இரண்டாவது அண்ணா அதுல் வர்மா..இவங்க அவர் மனைவி பாயல்.இவர் என்னோட மூணாவது அண்ணா ஆரவ் வர்மா.இவங்க ஜஸ்ப்பீர்த் அவங்க வொய்ப்.
எங்க மகிழனோட சிநேகிதினா எங்களுக்கும் நீ பொண்ணு மாதிரி தான்.எல்லாரையும் பத்தி தெரிஞ்சுக்க வேண்டியது உனக்கும் அவசியம் இல்லையா..மத்தபடி எங்க பசங்களையெல்லாம் நைட் டின்னர் டேபிள்ல மீட் பண்ணலாம்.இதை உன் வீடா நினைச்சுக்கோ..இங்க இருக்குற வர நீ எங்க பொறுப்பு.சரியா?”,என்றவரின் சிரிப்பில் ஏனோ உண்மையிருப்பதாய் தோன்றவில்லை.
பேசி முடித்த அடுத்த நொடி முகத்தில் எந்தவித உணர்வுமின்றி தன் தங்கையைப் பார்க்க அவரும் ஷியாமாவை முறைத்தவாறே அங்கிருந்து அவரோடு சென்று விட்டார்.
ஆண்கள் நால்வரும் அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றுவிட ஜஸ்ப்ரீத் லேசான சிநேகப் புன்னகையோடு நகர்ந்து கொண்டார்.அவளருகில் வந்த பாயல்,
“நீ எதுவும் நினைச்சுக்காத டா..எல்லாருக்கும் ட்ராவல் பண்ணிண அசதி அதனால தான் பட படனு பேசிட்டு போறாங்க.உனக்கு எது வேணும்னாலும் என்கிட்ட கேளு சரியா.”
அவளின் போலீஸ் பார்வைக்கு நிச்சயம் அவரிடம் எந்த குறையும் தெரியவில்லை.சம்மதமாய் புன்னகைத்தவள்,”ரொம்ப அழகா தமிழ் பேசுறீங்க..”
“ம்ம் வந்து இருபத்தி அஞ்சு வருஷம் ஆச்சு..கத்துக்காம எப்படி..என் மாமியாருக்காகவே கத்துகிட்டேன்.”,என்றவர் அவள் கன்னம் தட்டிச் சென்றார்.
அனைவரும் நகர்ந்த பின் அங்கிருந்து திரும்பியவளின் கண்களில் முதியவர் ஒருவர் பட்டார்.அவளருகில் வந்தவர் புன்னகைத்தவாறே,