(Reading time: 10 - 19 minutes)
Vannamillaa ennangal
Vannamillaa ennangal

மோனி தமிழ்ல எதோ ரிசேர்ச்சே பண்ணிட்டு இருக்காங்கனா பார்த்துகோங்க..”

சும்மா அடிச்சு விடாதடா..ஹாய் கா..அவன் சொல்ற அளவெல்லாம் ஒண்ணும் இல்ல தமிழ் ரொம்ப பிடிக்கும் அதனால நிறைய அதைப் பத்தி தெரிஞ்சுக்குறேன் அவ்வளவுதான்.”

உன்னை பார்த்தவுடனே எனக்கு தோணிணது ரொம்ப அழகாயிருக்கா இந்த பொண்ணுனு தான்.பேசுறதும் கூட ரொம்ப அழகாயிருக்கு..”

போச்சு இனி இவ தூங்கின மாதிரி தான்..கடவுளே என்னை காப்பாத்து..”

பொறாமைல பொங்காதடா போ போ சில்லுனு ஜுஸ் சாப்பாடு.வயித்தெறிச்சல் அடங்கும் கொஞ்சம்.”

ஹா ஹா உங்க காம்போ ரொம்ப லைவ்லியா இருக்கு..நைஸ்..”

ம்ம் எனக்கும் இவனுக்கும் பேசிக்கிட்டே இருந்தா போதும்.சாப்பாடு தூக்கம் கூட வேண்டாம் ஆனா இந்த வீட்ல மத்தவங்களுக்கு தேவையில்லாம ஒரு வார்த்தை கூட பேசக் கூடாது அதனால எங்க ஆட்டம் எல்லாம் ரூம்குள்ள தான்.சொல்லப் போனா இந்த இடத்துல பேச்சு சத்தமே இப்போ நீங்க வந்ததுனால தான் கேட்குது.

இல்லையா இந்நேரம் சாப்ட்டு ரூம்க்குள்ள போய் அடஞ்சுருப்போம்..”

ம்ம் பணக்காரங்களா இருக்குறது ரொம்ப கஷ்டமான வேலை போலேயே..சொந்த வீட்டுக்குள்ளேயே கைதி மாதிரி..”

ம்ம் உண்மைதான்.என்ன பண்றது எங்களுக்கு பழகிடுச்சு..அதை விடுங்க இங்க இருக்குற வரை நீங்களும் எங்க கூட ஜாயின் பண்ணிக்கோங்க நைட் தினமும் சாப்பாடு முடிச்சுட்டு இதே மாதிரி டீலா..”

அவ்ளோ தானே கூட்டத்தை கூட்டிருவோம்.அப்போ நீங்களும் எனக்கு என் வேலைக்கு ஹெல்ப் பண்ணணும்?”

வாவ்..கண்டிப்பா அம்மா சொல்லிட்டு இருந்தாங்க நீங்க ஏதோ ரிசெர்ச் பண்றீங்கனு உங்க பேரை சொல்லி கிடைக்குற கேப்ல ஊர் சுத்தலாம்.”

ஓகே  நாளைக்கு நீங்க ப்ரீனா வெளில போலாம்

ஹே!!நான் ரெடி..டேய் நீ எப்படியும் வெட்டியாதான் இருப்ப எங்களுக்கு பாடிகார்டா வா டா..”

திமிரு ரொம்ப கூடிருச்சு டீ குட்டிச் சாத்தான்.”

ரொம்ப பண்ணாத டா உனக்கும் எதாவது ஸ்டோரி க்ளிக் ஆக வாய்ப்பிருக்கு..நல்லது சொல்றேன் கேட்டா கேளு கேட்காட்டி போ..”

உன் நல்லெண்ணம் பத்தி எனக்குத் தெரியும்அவங்களுக்காக வரேன்..போ போ..”

உங்க சண்டையை தீர்க்க முடியாது போலயே..ஒகே கைஸ் மார்னிங் பார்க்கலாம்..குட் நைட்..”

குட் நைட் ஷியாம்ஸ்..

குட் நைட் கா”,என்றவர்களைப் பார்த்து சிரித்து நகர்ந்தாள் ஷியாமா.

தொடரும்...

Episode # 02

Episode # 04

Go to Vannamillaa ennangal story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.