தான், அவளை வெளியில் அழைத்து செல்ல வேண்டுமென்பது ஞாபகத்திற்கு வந்து,
அவளிடம் முடியாது என்று சொல்ல முடியாததால், "கோவிலுக்கு மட்டும் போயிட்டு வரலாம் நித்தி.. எனக்கு ஆஃபிஸ்ல கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு.." என்று சொல்ல, அவளும் சரி என்று தலையாட்டி, அவனோடு கிளம்பினாள்.
காரில் செல்லும்போது கார்த்திக் அலுவலக விஷயமாக யோசித்துக் கொண்டு வந்தவன், அவளிடம் பேசாமல் வர, நித்யாவோ தாத்தா பேசிய விஷயத்தை யோசித்தப்படி அமைதியாக வந்தாள். கோவிலை வந்து அடைந்ததும், "நீ போய் அர்ச்சனை தட்டு வாங்கிக்கிட்டு இரு நித்தி.. நான் கார் பார்க் செஞ்சுட்டு வந்துட்றேன்.." என்று கார்த்திக் சொல்லவும்,
அவளும் அர்ச்சனை பொருட்கள் விற்குமிடத்திற்கு வந்து, "ஒரு அர்ச்சனை தட்டு கொடுங்க.." என்றுக் கேட்டாள்.
அவரும் ஒரு பையில் அனைத்து பொருட்களையும் போட்டு கொடுக்க, அவள் ரூபாய் கொடுக்க போன சமயம், "என்ன வாங்கிட்டீயா நித்தி.." என்றப்படி வந்த கார்த்திக்,
"என்னப்பா இது தேங்காய் இப்படி இருக்கு.. நல்ல தேங்காயா கொடு.. இது என்ன பழம் இவ்வளவு சின்னதா போட்ருக்க.. இந்த பூ எதுக்கு வச்ச, இந்த பூ கொடு.. கூட எலுமிச்சை பழம் போட்டீயா?" இப்படி எல்லாம் பார்த்து பார்த்து வாங்கியவன்,
"அவங்க கொடுத்தா அப்படியே வாங்கிப்பீயா? இதெல்லாம் பார்த்து வாங்க மாட்டீயா? இது கூட உனக்கு தெரியாதா?" என்றுக் கேட்டான்.
அவன் என்னவோ சாதாரணமாக தான் கேட்டான். ஆனால் அவளுக்கு தான் கார்த்திக்கின் வார்த்தை வருத்தத்தை கொடுத்தது. ஏற்கனவே காலையில் கார்த்திக் தாத்தா வேறு கார்த்திக்கிற்கு அவள் பொருத்தமில்லை என்று சொன்னாரே.. அது வேறு அந்த நேரம் அவளுக்கு ஞாபகத்திற்கு வந்தது.
எப்போதும் பாட்டி மற்றும் அன்னையுடன் கோவிலுக்கு வருவாள். இந்த அர்ச்சனை தட்டு வாங்குவதெல்லாம் அந்த இருவரின் வேலை, அவர்கள் எப்படி வாங்குகிறார்கள் என்றெல்லாம் கவனித்து பார்க்க மாட்டாள்.
ஆனால் கார்த்திக் குறிஞ்சியம்மாளுடன் கோவிலுக்கு வரும்போது அவர் இப்படியெல்லாம் பார்த்து பார்த்து வாங்குவதை கவனித்து அவனுக்கும் அந்த பழக்கம் வந்துவிட்டது.
பின் இருவரும் சன்னிதானத்திற்குள் சென்றார்கள். குருக்களிடம் அர்ச்சனை தட்டை கொடுத்தவள், வழக்கம் போல் " சாமி பேருக்கு அர்ச்சனை செய்ங்க.." என்று சொல்ல,
"என்ன நித்தி.. நமக்கு இப்போ தான் கல்யாணம் ஆகியிருக்கு.. நம்ம ரெண்டுப்பேர் பெயரில் அர்ச்சனை செய்ய சொல்லாம, சாமி பேருக்கு செய்ய சொல்ற.." என்று கேட்டவன், இருவரின்