(Reading time: 9 - 18 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

“விவாகரதுக்கு ரெக்கமண்ட் செய்யவில்லையா? எப்படி பாஸ்… நம்ம லாயர் அவ்வளவு உறுதியா சொன்னாரே…”

“நானும் அப்படித்தான் நம்பினேன். ஏனெனில் அதிதியும் அதனை ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டு விட்டதால் ம்யூட்சுவல் என்ற முறையில் எளிதாக கிடைத்து விடும் என்று நினைத்தேன்”

“என்னதான் நடந்துச்சு பாஸ்? அவங்க மறுத்து பேசிட்டாங்களா?. அப்படினாலும் நம்ம லாயர் பேசி இருப்பாரே”

“மண்ணாங்கட்டி… நீ நினைப்பதுபோல விவாகரத்து கேஸ் உடனடியாக ட்ரையலுக்கு வ்ந்து விடாதாம். முதலில் குடும்ப நல ஆலோசகரிடம் இரண்டு மூன்று கவுன்சிலிங் செல்ல வேண்டும். அவர் பரிந்துரைத்தால் மட்டுமே விவாகரத்து வழக்காக அது ஏற்றுக் கொள்ளப்படுமாம். அப்புற்ம்தான் ட்ரையல் எல்லாம் நடக்கும். நம்ம லாயரும் அப்பதான் பேச முடியும்”

“அப்படின்னா இன்னைக்கு என்னதான்   நடந்துச்சு?”

“ஃபேமிலி கவுன்சலர், நான்… அந்த பொண்ணு மட்டும்தான் இருந்தோம். எங்களைத்தான் பேச சொன்னார்”

“நீங்க சொன்னீங்களா பாஸ்?” வினய் கேட்ட கேள்விக்கு பதிலாக அங்கே நடந்ததை விவரிக்க ஆரம்பித்தான்

முதலில் அந்த குடும்ப நல ஆலோசகரிடம் ஆச்சரியம்தான் தெரிந்து.

“உங்களுக்கு செப்டெம்பர் 2ம்தேதி கல்யாணம் ஆகியிருக்கு.  செப்டம்பர் 10ம் தேதியே விவாகரத்திற்கு விண்ணப்பித்து விட்டீர்கள்.. என்ன காரணம்? “

“இருவருக்கும் ஒத்து போகவில்லை சார்”

“ஒரு வாரத்திலேயே ஒத்து போகாது என்பதை கண்டுபிடித்து விட்டீர்களா?”

“ஒரு வாரத்தில் அல்ல… திருமணம் முடிந்த ஒரு மணி நேரத்திலேயே கண்டுபிடித்து விட்டேன். அப்படி ஒரு ஆடிட்யூட் காட்ணாங்க" அதிரதன் சொல்ல,

“ஓ...நீங்கள் ஆராய்ச்சியாளர்தானே? டெஸ்ட் ட்யூபில் போட்டு பரிசோதித்து இந்த உறவு தேறாதுன்னு உடனடியாக கண்டுபிடித்து விட்டீர்களா?”

“டோண்ட் கட் ஜோக்ஸ் சார்.  நானே ரொம்பவும் நொந்து போயிருக்கேன். ”

“ஓகே…  நீங்க சொல்லுங்கம்மா… இந்த உண்மையை நீங்க எப்ப கண்டுபிடிச்சீங்க?

“கல்யாணத்திற்கு முந்தியே…”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.