(Reading time: 9 - 18 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

"விவாகரத்து வேண்டும் என்று யார் முதலில் சொன்னது?"

"நான்தான்.." அதிரதன் சொன்னான்.

"ஏன்?"

"அவங்க கம்ஃபர்டபிளாக அங்கே இல்லை"

"இதையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. உங்க லாயரிடம் ஆலோசனை செய்தீர்களா. அவர் நல்ல ஐடியா சொல்லி இருப்பாரே"

இந்த இடத்தில் கதை கேட்டு கொண்டிருந்த வினய் குறுக்கிட்டான்.

"அப்படி எதுவும் சொல்லி கொடுத்தாரா பாஸ்.."

"ஆங்.. அதிதி ஒரு ஒழுக்கம் இல்லாத பொண்ணுன்னு சொல்ல சொன்னார். ஆனால் அவள் அப்படி பட்டவள் இல்லையே. எங்கிட்டதான் கஞ்சி போட்ட மாதிரி மொடமொடன்னு நடந்துக்குவாள். மற்றபடி மரியாதையான பொண்ணுதான்"

"யாரு மரியாதையான பொண்ணு சார்..? பேய் பிடிச்ச மாதிரி ஆடி உங்களை அடிச்சு துரத்தியதை மறந்துட்டீங்களா?"

மறக்க முடியுமா என்ன?. அந்த இரவில் அவனுடைய அறையில்… கைக்கு கிடைத்ததையெல்லாம் விட்டெறிந்து… பேயாட்டம் ஆடி.. என்னை தொடக் கூடாது.. பக்கத்தில் வரக் கூடாது.. பார்க்க கூடாது… என்று ரகளை விட்டு பால்கனியில் போய் தூங்கினாளே... அவளுக்கு மனநலமில்லையோ என்று பயந்து போனானோ.. அதெல்லாம் மறக்க முடியுமா என்ன? அதற்காக...

"அது… என் பக்கமும் தப்பு இருக்கு. அவளுக்கு என்னை பிடிச்சிருந்ததா இல்லையான்னு செக் பண்ணாம விட்டது என் தப்புதானே."

"நியாயம்தான். நீங்க கவுன்சிலரிடம் என்ன சொன்னீங்க"

"அவரிடம் நான் என்ன சொன்னேன்னா…"

அதிரதன் மேலும் விவரித்தான்.

"உண்மைய சொல்ல வேண்டுமென்றால் அதிதி நல்ல பெண் சார். என்னுடன் ஒத்துபோக முடியவில்லை. பிடிக்காமல் வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையே இல்லை. அவங்களுக்கு எது சந்தோசமோ அந்த லைஃபை வாழ்ந்துட்டு போகட்டுமே"

"குட்… உங்களுடைய இந்த ஆப்ஷன் அதிதிக்கு பாதுகாப்பு தருமா.  ஒரு சின்ன கிராமத்தில வளர்ந்து.. பெரிதாக படிப்பும் இல்லாமல் நல்ல வாழ்க்கை எப்படி வாழ முடியும்?" கவுன்சிலர் சொன்னபோது,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.