அடுத்த நாள் ஞாயிற்றுகிழமை...
அழகிய மஞ்சள் நிறத்தை பரப்பியதை போன்று அந்த ஆதவனின் கதிர்கள் பூமியில் பட்டு ஜொலிக்கும் அந்த மாலை வேளையில் தன் தெருவில் இருந்த சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தாள் பனிமலர்....
சிறு வாண்டுகளில் இருந்து கல்லூரி செல்லும் வாலிபர்கள் வரை என அந்த கேங்கில் எல்லாம் பசங்களாக இருக்க, பனிமலர் மட்டும் அந்த கேங்கில் அந்த பசங்களுக்கு இணையாக ஆட்டம் போட்டு கொண்டிருந்தாள்....
இரு அணிகளாக பிரிந்து சீரியசாக மேட்ச் விளையாடி கொண்டிருந்தார்கள்.... பனிமலர் பேட் செய்து கொண்டிருந்தாள்...
ஷ்டம்ப் அருகில் தன் பேட்டை வைத்து எதிரில் பந்தை போடுபவனையே கூர்ந்து கவனித்து கொண்டிருந்தாள்... இந்த பந்தில் அவள் சிக்சர் அடித்தால்தான் அவள் அணி வெற்றி பெற வாய்ப்பு இருக்கு என்பதால் அவனையே கூர்ந்து கவனித்தாள்.....
அதே நேரம் அவர்களை கடந்து ஒரு கார் சென்றது.... அந்த காரில் இருந்தவனோ தன் கார் கண்ணாடியின் சன்னலை கீழ இறக்கி விட்டு தன்னை நோக்கி வரும் பந்தை எதிர் கொள்ள காத்திருக்கும் பனிமலரையே ரசனையோடு பார்த்திருந்தான்...
வேகமாக வந்த கார் ஐ ஷ்லோ பண்ணி மெது மெதுவாக நகர்த்தி அவள் கிரிக்கெட் ஆடும் அழகையே ரசித்தவாறு காரில் அமர்ந்திருந்தான்....
பனிமலரோ தன்னை நோக்கி வந்த அந்த பந்தை இலாவகமாக கையாண்டு வேகமாக அடிக்க, அதுவும் கரெக்டாக சிக்சருக்கு சென்றது..... உடனே
“ஹே....... “ என்று அவள் துள்ளி குதிக்க, அவள் அணியினர் ஓடி வந்து அவளை கட்டி கொண்டனர்.. பெரிய பசங்கள் அவளுக்கு கை கொடுத்து
“அக்கா.... கலக்கிட்டக்கா....... இன்னும் ஒரே ஒரு ரன் மட்டும்தான் எடுத்துட்டா நாமதான் வின்..... ப்ளீஷ்க்கா... இப்ப மாதிரியே பார்த்து கரெக்ட் ஆ அடிச்சிடு....” என்றான் தவிப்புடன் புது மீசை அரும்பிய அந்த பையன்....
“ஹ்ம்ம்ம்ம் நீ ஒன்னும் கவலை படாதடா தம்பி... இந்த மலர் னா கொக்கா... எப்படி அடிக்கிறேன் பார் இன்னொரு சிக்சர்.... “ என்று தன் இல்லாத காலரை தூக்கி விட்டு கொண்டாள்....
அந்த காரில் இருந்தவனும் அப்பொழுது தான் அவள் உடையை பார்த்தான்.... ஒரு நீளமான ஷ்கர்ட் ம் அதற்கு மேல் டாப்ஷ் அணிந்து தன் நீண்டமுடியை தூக்கி கொண்டையாக்கி சொருகி இருந்தாள்.....
Like Padmini Selvaraj's stories? Now you can read Padmini Selvaraj's full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!
MITHUINNUM YENA KULAPPAM SAIYA PORAALLOOOOO