(Reading time: 12 - 23 minutes)
Verena nee iruppin.. Verethum vendame
Verena nee iruppin.. Verethum vendame

ஆனால் அவளால் அது முடியவில்லை. வழக்கமாக கார்த்திக் திட்டினாலும் அவனது சமாதானப் பேச்சுக்களை அவள் மனம் எதிர்பார்த்தது. அவனும் அப்படித்தானே இரண்டு முறை உணர வைத்திருந்தான். அதனால் இப்போதும் அதற்காக அவள் ஏங்க,

அவன் தான் கோபத்தில் திட்டியதற்கு சமாதானமெல்லாம் செய்ய முடியாது? என்று காலையில் கூறினானே, அதனால் அது நடக்காது என்பதை உணர்ந்து அமைதியாக இருந்தாள்.

கார்த்திக்கும் முதலில் ஏதோ சிந்தனையிலேயே கழித்தவன், பின் சகஜ நிலைக்கு திரும்பி, "நித்தி அங்கப் பாரேன், நித்தி இது அழகா இருக்குல்ல, நித்தி வா ஒரு செல்ஃபி எடுப்போம், நீ அங்க நில்லு உன்னை போட்டோ எடுக்கிறேன், கொஞ்சம் சிரியேன், ஏதாவது சாப்பிட்றீயா?" என்று அவன் பேசியதற்கெல்லாம்,

"ம்ம், சரி, சின்ன  தலையசைப்பு, கஷ்டப்பட்டு வரவழைத்த புன்னகை இப்படி தான் அவளது செய்கைகள் இருந்தது.

ஒருவழியாக சுற்றிப் பார்த்துவிட்டு இருவரும் அறைக்கு வந்தவர்கள், இரவு உணவை அறைக்கு வரவழைத்தே சாப்பிட்டனர். பின் கட்டிலின் ஒரு ஓரத்தில் நித்யா படுக்கவும், அவளை நெருங்கி வந்த கார்த்திக்,

" என்ன நித்தி, இன்னும் கோபமா?" என்றுக் கேட்டப்படி அவளை பின்னாலிருந்து அணைத்து அவள் காதில் கிறக்கத்தோடு கூற, அவளோ அமைதியாகவே இருந்தாள்.

"என்ன என்கிட்ட பேச மாட்டீயா? தப்பு தான் காலையில் அப்படி திட்டியிருக்க கூடாது தான், ஆனா உன்னை காணலன்னதும் நான் பதட்டமாயிட்டேன், அதான் கோபத்தில் என்ன பேசறதுன்னு தெரியாம பேசிட்டேன். அதுக்காக மாமாவை மன்னிக்க மாட்டீயா?" என்று சமாதானத்திற்கு வர,

காலையிலிருந்து இந்த சமாதானப் பேச்சுக்காக தான் ஏங்கிக் கொண்டிருந்தாள். ஆனால் அப்போதெல்லாம் கிடைக்காதது இப்போது கிடைத்த போது அதில் அவள் மனம் சமாதானம் அடைய மறுத்தது.

இந்த சமாதானப் பேச்சு இதற்காக தானே என்று அவனது நெருக்கமான அணைப்பில் தோன்றினாலும், அவளுக்கு வீம்பு பிடிக்க தெரியவில்லை.

தெரியவில்லை என்பதை விட, அவள் அதை விரும்பவில்லை. சாதாரணமாகவே யாரையும் கஷ்டப்படுத்தி பார்க்க அவளுக்கு மனம் வராது, இதில் அருகில் இருப்பவன் அவள் கணவன், அதுவும் இப்போதைக்கு அவன் மட்டும் தான் அவளுக்கு துணையாக இருப்பவன், அவனோடு கோபித்துக் கொண்டு அவள் என்ன செய்வாளாம்? அதனால் கோபத்தில் அவனை விட்டு அவள் தள்ளி இருக்க விரும்பவில்லை.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.