(Reading time: 12 - 23 minutes)
Verena nee iruppin.. Verethum vendame
Verena nee iruppin.. Verethum vendame

இன்னுமே அவள் அமைதியாக இருக்கவும், "நித்தி கொஞ்சம் இந்தப்பக்கம் திரும்பேன்," என்று அவன் அழைக்க, இன்னுமே அவள் அந்த நிலையிலேயே இருக்க,

"ப்ளீஸ் பொண்டாட்டி," என்ற அவனது கெஞ்சலுக்கு அவனைப் பார்த்தது போல் திரும்பிப் படுத்தாள்.

"நாம வந்திருப்பது ஹனிமூன்க்கு, இப்படி கோபத்தில் முகத்தை தூக்கி வச்சிருந்தா நல்லாவா இருக்கு, காலையில் திட்டினதுக்கு சாரி, சாரி," என்று சொல்லியப்படியே அவள் நெற்றியில் அன்றைய பொழுதுக்கான முதல் முத்தத்தை பதிக்க, வழக்கம் போல் அவள் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

கணவனின் அணைப்பில் நன்றாக உறங்கிய நித்யா, காலையில் அவனது முகத்தை பார்த்தப்படியே விழித்தவளுக்கு, அவள் இருந்த கோலம் அவள் முகத்தில் நாணத்தை வரவழைத்திருக்க வேண்டும், ஆனால் மாறாக நேற்று நடந்ததெல்லாம் முந்திக் கொண்டு அவளுக்கு நினைவுப்படுத்தியது. உடனே அவள் முகமும் இனிமையிலிருந்து கடுமைக்கு மாற,

அவன் அணைப்பிலிருந்து விலகி தன் ஆடையை சரி செய்துக் கொண்டு எழுந்தவள், முழுக்க கண்ணாடி கொண்டு மூடியிருந்த அறையின் திரையை விலக்கி வெளியே வெறித்துப் பார்த்தப்படி நின்றாள்.

சிறிது நேரத்தில் எழுந்த கார்த்திக், நித்யாவை தேடியவன், அவள் வேடிக்கைப் பார்த்தப்படி நின்றிருப்பதை பார்த்து, "இன்னும் என்னோட பொண்டாட்டிக்கு கோபம் போகலையா? இன்னும் முகத்தில் மலர்ச்சி இல்லையே, இன்னும் எத்தனை சாரி சொல்லணும்?" என்று சொல்லியப்படி அவள் அருகில் வந்து நின்றான்.

"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல மாமா," என்று அவள் சமாளித்தாலும்,

"அப்போ ஏன் எதையோ பறிகொடுத்தது போல இருக்க, நான் நேத்து கோபப்பட்டது தப்பு தான், ஆனா அந்த கோபம் கொஞ்ச நேரம் தான் இருந்துச்சு, அடுத்து எனக்கு என் மேல தான் கோபம்," என்று சொல்ல, அவள் அவனை கேள்வியாக பார்த்தாள்.

"பின்ன ஒரு சாதாரண மொபைல் வச்சிருக்க, அதுகூட எனக்கு தெரியல, சரி நமக்கு கல்யாணம் பேசறதுக்கு முன்ன நான் இப்படி இருந்தா பரவாயில்லை, ஆனா நமக்கு கல்யாணம் முடிவானதும், அதுவும் ஒரே வீட்ல இருந்துக்கிட்டு, உனக்கு தேவையானதை கூட செய்யாம இருந்திருக்கேன். எல்லாம் பாட்டி பார்த்துப்பாங்கன்னு நினைச்சா, அவங்க சுத்த வேஸ்ட்டா இருந்திருக்காங்க, அப்பா அதுக்கும் மேல மோசம், நான் தானே ஒழுங்கா இருந்திருக்கணும்,

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.