(Reading time: 13 - 25 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

தொடர்கதை - காணாய் கண்ணே - 38 - தேவி

ன்றைய மாணாவர்களுக்கு சுதந்திர இந்தியாவைப் பற்றித் தெரிந்து கொண்ட அளவிற்கு அதற்கு முந்தைய இந்தியா அறிமுகமாகவில்லை.

மேலும் ராஜபுத்ரர்களின் கட்டிடங்கள் அவர்கள் வாழ்க்கை முறையையும், வீரத்தையும் எடுத்துக் காட்டும் விதமாக இருப்பதால் , அதை மாணவர்களிடத்தில் முறையாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் ப்ரித்வி விரும்பினான்.

ராஜபுத்திரர்கள் என்றால் முதலில் நினைவிற்கு வருவது ஜெய்பூர் தான். ஜெய்பூர் உலகமறிந்த சுற்றுலாத் தலம். அங்கேயே ராஜஸ்தானின் அத்தனை விதமான கலாச்சாரங்களும் அறிந்து கொள்ளும்படியும் இருக்கும்.

ஜெய்பூர் முதலில் முடித்தால் மாணவர்கள் எல்லாம் பார்த்த விஷயங்கள் தானே என்று பின்னாடி வரும் இடங்களை சற்று அலட்சியத்துடன் கடந்து விடுவார்கள்.

ஆனால் அதை விட இவன் சுற்றிக் காமித்த இடங்கள் எல்லாம் நேடிவிடி என்று சொல்லக் கூடிய மண் மணம் மாறா இடங்கள். அதனை நேரடியாக அவர்கள் உணர்ந்து கொண்டது அவர்களுக்கு பிற்காலத்தில் நிச்சயம் உதவக் கூடும்.

அதனால் தான் டெல்லியில் இருந்து பிகானர் சென்று அங்கிருந்து ஒவ்வொரு இடமாக சுற்றிக் காண்பித்துக் கொண்டு வந்தான்.

கிட்டத்தட்ட அதைச் சரியாக செய்து முடித்த திருப்தி அவனுக்கு இருந்தது.

இவற்றை எல்லாம் ப்ரித்வி சுற்றுலா ஏற்பாடு செய்யும்போதே எடுத்துச் சொன்னதால் தான் அவனையே ஒருங்கிணைப்பாளராக வரும்படிக் கேட்டுக் கொண்டார் கிருத்தியின் கல்லூரி முதல்வர்.

ப்ரித்விக்கும் கிருத்திகாவைப் பாதுகாக்கும் வேலை வரவே, அவன் எல்லாவற்றையும் இணைத்துக் கொண்டான்.

இன்றோடு ராஜஸ்தான் முடிவடைந்து , இனி டெல்லி சுற்றி உள்ள இடங்கள் பார்க்க வேண்டும்.

கிருத்திகாவின் குறும்பையும், தைரியத்தையும் ரசித்த வண்ணம் அவளோடு பயணித்த ப்ரித்வி, அவளைத் தொடரும் ஆபத்தைப் பார்த்தப் பிறகு அவளிடம் தனிக் கவனம் எடுத்துக் கொண்டான். அவளின் பாதுகாப்பு அவன் வேலைதான் என்றாலும், அதை வெளிப்படையாகச் செய்யச் சொல்லி கிருத்திகாவின் பெரியப்பாவோ, அவனின் பிரெண்ட் இன்ஸ்பெக்டரோ சொல்லவில்லை. அது அவளுக்கு அசௌகரியமாக இருக்கும் என்ற எண்ணம் ப்ரித்விக்கும் இருக்கவே, அவளறியாமல் தான் அவளைப் பாதுகாத்தான்.

ஆனால் ஒருகட்டத்தில் வெளிப்படுத்தியாக வேண்டிய கட்டாயம் உண்டானது. அதற்குப் பின்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.