(Reading time: 13 - 25 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

கிரண் தேவியும் அன்றைய இரவு உறங்காமலே கழித்தாள். அறிமுகம் ஆகி சிறிது நாட்களே என்று இருந்தாலும், பிகானர் இளவரசரான ப்ரித்விராஜை சந்தித்தப் பிறகு அவளோடான நாட்கள் அவனுடனே கழிந்து இருந்ததால் அவரைத் தேடியது.

இந்த ஆம்பர்க் கோட்டைக்கு வந்த பிறகு தாதிப் பெண்கள் யாராக இருந்தாலும் புர்கா அணியத் தான் வேண்டும். ஜோதா ராணி மட்டுமே விதி விலக்கு . அதிலும் அவள் அரண்மனையை விட்டு எங்கும் வெளியில் செல்ல முடியாது. செல்லக் கூடாது.

அங்கே ஆம்பரிலேயே இருக்கும் தாதிப் பெண்கள் இங்கே ஜோதாவின் அரண்மனையில் தங்கி இருக்க, மற்றவர்கள் தங்கள் வீடுகளுக்க்ச் சென்று வந்தனர். கிரண் தேவி அரண்மனையிலேயே தங்கி இருந்தாள்.

எனவே தான் ப்ரித்விக்குத் துணையாக இந்தக் காரியத்தில் கிரண் தேவி இருந்தாள்.

ராம் சிங் ப்ரித்விராஜ் அருகே வந்து நிற்க,

“ராம் சிங். எனக்கு ஏனோ நெருடலகாவே இருக்கிறது? நாளை இந்தச் சந்திப்பு அவசியம் என்று தோன்றுகிறதா?” என்று பேசிக் கொண்டு  இருந்தான்.

“எனக்கும் புரியவில்லை இளவரசே” என்றான்.

“ஹ்ம்ம். எனக்கு நம்மை யாரோ கண்காணிப்பது போல் உள்ளுணர்வு தோன்றுகிறது ராம்சிங். நம் திட்டத்தை மாற்றினால் என்ன?”

“அது சாத்தியமா என்று தெரியவில்லை இளவரசே. நம் ராணிக்கு இதை விட்டால் வெளியே வரச் சந்தர்ப்பம் இருக்காது. அத்தோடு அவர்களிடத்தில் இருக்கும் திட்டம் வேறு யார் கையில் கிடைத்தாலு, அந்த நிமிடத்தோடு நம் மகாராஜ்ஜின் ஆசையினை மறந்து விட வேண்டி இருக்கும். நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் போர் துவங்கும் நாட்களும் தள்ளிப் போகும். “ என்று ராம்சிங் நீளமாகப் பேசவும்,

அதில் இருந்த உண்மையைப் புரிந்து கொண்டு தலையாட்டினான். மறுநாள் தன்னைச் சந்திக்கப் போகும் கிரண் தேவி மற்றும் தன்னுடைய வாழ்க்கை எந்தப் பாதையில் கொண்டு செல்லப் போகிறதோ என்றுக் கலங்கினான் இளவரசன் ப்ரித்விராஜ்.

தொடரும்!

Episode # 37

Episode # 39

Go to Kaanaai kanne story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.