(Reading time: 14 - 27 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

தொடர்கதை - காணாய் கண்ணே - 37 - தேவி

ளவரசன் ப்ரித்விராஜ் மிகுந்த கவனமாக இருந்தான். காரணம் ஜோதா ராணியோடு வந்த வீரர்களுக்கு அவனைத் தலைவனாக தேர்ந்தெடுக்க தூண்டப்பட்டவர்களில் அக்பரின் உளவாளி ஒருவன்.

கோட்டைக் காவல் அக்பர் வீரர்கள் வசமும், ஜோதா ராணியின் பாதுகாப்பு ராஜபுத்திர வீரர்கள் வசமும் இருந்தது. அது அக்பரே ஜோதா ராணியின் மீது உள்ள அன்பால் வேறு யாருக்கும் ஏற்படுத்திக் கொடுக்காத வசதி.

அக்பர் மாளிகைக்கு வந்த அன்று , வீரர்கள் எல்லோரும் உணவை முடித்துக் கொண்டு மாளிகையின் பொது வெளியில் வீரர்கள் கூட, அங்கே அக்பரின் கோட்டைக் காவல் வீரர்கள் இவர்களைச் சுற்றி ஒரு வளையம் போல் நின்று இருந்தனர்.

ராஜபுத்திர வீரர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டு இருக்க, அப்போது ஆம்பர் கோட்டையில் இருந்து கிரண் தேவியையும், காமினியையும் உளவு பார்க்கச் சொன்ன அந்த காவல் வீரன்,

“இதோ இவரை உங்கள்  தலைவராக நிறுத்திக் கொள்ளுங்கள். “ என்றுக் குரல் கொடுக்க, மற்றவர்கள் தங்களுக்குள் யோசிக்க ஆரம்பித்தனர்.

ராஜபுத்திர வீரர்களில் ஒருவன்,

 “ஆம், இவர் தான் அன்றைக்கு புரவி சாகசத்தில் பல விந்தைகளை செய்து காமித்தார். நம் ஆம்பர் அரசரும் இவரின் சாகசங்களை வெகுவாக பாராட்டி, உடனடியாக பாதுகாப்புப் படையில் இணைத்துக் கொண்டார். மேலும் இங்குள்ள வீரர்கள் மொழியும் அவருக்குத் தெரிகிறது. எனவே அவரையே நம் தலைவராக நியமிக்கலாம்” என்றான்.

அவனின் கூற்று உண்மையே. இங்கே வந்தவுடன் வீரர்கள் தங்கும் இடம், உணவு அவர்களின் வசதிகள் பற்றிய விவரங்கள் எல்லாம் ப்ரித்விராஜ் தான் கேட்டுச் சொன்னான். அதுவே தற்போது விவாதத்திற்கு காரணமானது.

ப்ரித்விராஜ் மறுத்தாலும், அவர்கள் வற்புறுத்தவே சம்மதித்தான். ஓரளவிற்கு மேல் தன்னை மற்றவர்கள் கூர்ந்து நோக்குவது , அவன் வந்த வேலைக்கு ஆபத்தாக முடியலாம் என்று எண்ணினான்.

கிரண் தேவி ஜோதா ராணியிடம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி இருந்தாள். கிரண் தேவிக்கு போர்க் கலைகள் எத்தனை பழக்கமோ அதே அளவில் மற்ற கலைகளிலும் சிறந்து விளங்கினாள்.  ஜோதாவிற்கும் கலைகளில் ஆர்வம் என்பதால் கிரண் தேவியோடு அவளின் பொழுதுகள் அதிகமாக கழிந்தது. இவர்களின் உதவிக்கு காமினி.

அக்பரைப் பொறுத்த வரை அவர்கள் வழக்கப்படி பல தாரம் மணமுடித்தவர் எனினும்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.