(Reading time: 14 - 27 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

“அரண்மனையை விட்டு வெளியே செல்ல அந்த விழா போதும் ஆனால் பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் அந்த விழாவில் நாம் எவ்வாறு இளவரசரை சந்திப்பது?”

“அதற்கான வழியை இளவரசர் கூறுவார். ஆனால் நாம் இப்போது சந்திக்க விரும்பும் விஷயத்தை அவரிடம் சொல்ல வேண்டுமே. “

“அதற்கு ஒரு வழி இருக்கிறது ராணி” என்ற காமினி, பணியாளர்களுக்கான மணி அடித்தாள்.

முகப்பில் இருந்த திரையின் பின்னால் நின்று கொண்ட காமினி, அங்கே சேவகன் வந்தவுடன் , தன் கால்களால் தரையை மூன்று முறை தட்டினாள்.

அதைக் கேட்டதும் அந்தப் பக்கம் இருந்த வீரன், தன் கையில் வைத்து இருந்த வாளால் மூன்று முறைத் தட்டினான்.

அதைக் கேட்டுப் புன்னகைத்த காமினி ,

“ராணி, அதிர்ஷ்டம் இன்று நம் பக்கம் இருக்கிறது” என்றாள். ராணி புரியாமல் பார்க்க, அவளிடம் அமைதியாக இருக்குமாறு செய்கை காண்பித்து விட்டுத் திரும்ப, அதற்குள் மேலும் மூன்று முறை வாளால் தட்டும் சப்தம் கேட்டது. இப்போது பதில் ஒலி காமினி கொடுத்தாள்.

பின், “இளவரசர் ப்ரித்விராஜ் ராணி சந்திக்க  விரும்புகிறார்கள். நாளை மறுநாள் விழாவிற்கு தான் வெளியே வர முடியும். “ எனக் கூறியவுடன்,

“இளவரசரிடம் கேட்டுச் சொல்கிறேன்” என்று சென்றான்.

அவன் சென்ற பிறகு

“அந்த வீரன் யார்? நம்மைச் சேர்ந்தவனா? எப்படிக் கண்டுபிடித்தாய்?” என்றுக் கிரண் தேவி கேட்டாள்.

“நமக்கு வேண்டியவர்தான் ராணி. என் உறவினர் ராம் சிங் தான். “ என்றாள் காமினி.

“எப்படி அறிந்து கொண்டாய்?”

“ஏற்கனவே நாங்கள் இருவரும் வெவ்வேறு இடங்களில் உளவாளிகளாக பணியாற்றி இருக்கிறோம். அப்போது எங்களுக்குள் நாங்கள் உருவாக்கிக் கொண்ட சங்கேத மொழி இது ராணி”

“ஒஹ். ஆனால் வேறு யாரவது வந்து இருந்தால் என்ன செய்வாய்?”

“முதலில் சத்தம் கொடுத்தப் பின் அங்கிருந்து பதில் சத்தம் கேட்டது அல்லவா? வேறு யாரவது வந்து இருப்பின் சத்தம் வராது. குரல் தான் கேட்கும். அதே போல் மீண்டும் அதே

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.