(Reading time: 14 - 27 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

மேலும் ராணா பிரதாப் சிங் அவளின் பெரிய தந்தை. அவளின் தந்தைக்கும், ராணாவிற்கும் இடையில் ஏற்பட்ட ராஜ்ஜிய வாரிசுப் பிரச்சினையில் அவர் ராணாவோடு வேறுபட்டு முஹலாயர்கள் பக்கம் சாய்ந்தார்.

அது ஜோதாவிற்கு பிடிக்காவிட்டாலும், பெண்ணான அவளுக்கு வேறு வழியில்லாமல், தந்தை சொல் படி நடந்து கொண்டு இருந்தாள்.

ராணாவின் உரிமைப் போர் பற்றி அவள் அறிந்து இருந்தாலும், அக்பரோடு இருப்பதால் அவரின் படை பலமும், போர் தந்திரங்களும் அவளுக்குத் தெரியும். இந்நிலையில் போர் எனில் ராணாவின் நிலைக் குறித்துக் கவலையாக இருந்தது.

அக்பரிடம் மெதுவாக “சக்கரவர்த்தி அவர்களே, மகா ரானாவிடம் மற்றுமொரு முறை பேச்சு வார்த்தை நடத்திப் பார்க்கலாமே” என்று கேட்டாள் ஜோதா ராணி.

அக்பர் “ஏற்கனவே மூன்று முறை முயன்று பலன் இல்லையே ராணி” என்றார்.

ராணி கேள்வியாக நோக்க,

“முதல் முறை எனது படை தளபதி ஜலால் கான் பேச்சு வார்த்தை நடத்தினான். இரண்டாம் முறை உங்கள் இன கச்வா மூலம் சமாதான பேச்சு வார்த்தைக்கு  முயன்றேன். மூன்றாம் முறை உன் உறவினர் ராஜா பகவாந் தாஸ் சென்று பேசி வந்தார். மூன்று முறையும் அவர் மறுத்து விட்டார். கடைசி முறையாக தோடர் மாலும் சென்று வந்தாகி விட்டது. எண்ணம் ஈடேற வில்லை. இனி என் வழி போர் மட்டுமே” என்று புன்சிரிப்போடு கூறினார்.

அக்பரின் கோபமுகத்தைக் கூட எளிதாகக் கடந்து விடலாம். ஆனால் இந்த புன்சிரிப்பு பெரும் ஆபத்து என்று அறிந்து இருந்த ராணி ஜோதாவிற்கு உள்ளுக்குள் கலக்கம் ஏற்பட்டது.

“தற்போது உங்கள் திட்டம் என்ன சக்கரவர்த்தி ?” என்று கேட்டாள்.

ராணியைப் பார்த்த அக்பர், புன்சிரிப்போடு “ஹ்ம்ம் . அவர்கள் படை பலம் நான் அறிந்த வரையில் ஆயிரத்தில் இருந்து மூவாயிரம் வரை இருக்கலாம். நான் ஒரு ஐந்தாயிரம் படை வீரர்கள் தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளேன்” என்று மட்டும் கூறினார்.

“யானைப் படை பற்றிய விவரம் ?”

“அதைப் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை ராணி. அந்த நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறேன்”

ஜோதா ராணிக்கு எப்பக்கமும் செல்ல முடியா நிலை. இந்தத் தகவலை அவளுக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.